Monday, 16 April 2012

நம்பிக்கை

வாழ்வின் அடித்தலமாய் இந்த நம்பிக்கை...!

மலை ஏறுபவனுக்குத் தெரியாது தான் அந்த உச்சியை அடைவோமா என்று.

ஏற்கனவே தோற்றவர்கள் அவனுக்கு உதாரணங்கள். கயிறு கொண்டு ஏறினாலும் அவன் கொண்ட நம்பிக்கை தான் அவனது உண்மையான ஊன்றுகோல்...!

நம்பிக்கை இருந்தால் மட்டும் ஒன்றை தொடங்குங்கள் அது இல்லையேல்

நங்கூரம் இல்லா கப்பலை கடலுக்குள் இறக்குவதாகும்...!

 நம்பிக்கை வரும் வரை காத்திருப்பதில் தவறில்லை.தொடங்கும் பொழுது முழு மனதுடன் நம்பிக்கை என்னும் ஊன்று கோலுடன் தொடங்குங்கள்...!

நடந்தவைகள் எல்லாமே உணர்த்துகின்ற உதாரணங்கள் அது

உண்மையான வாழ்வு  அல்ல...!

நம்பிக்கையெனும் நரம்பில் தான் வழ்வின் உறவுகள் இணைக்கப்படுகின்றன. நம்பிக்கை என்னும் ஆனிவேரில் தான் வாழ்வு என்னும் பூக்கள் பூக்கின்றன...!

நம்பினால் தான் வெற்றி...!

நம்பினால் தான் உறவு...!

 நம்பினால் தான் வழ்க்கை...!

நம்புங்கள் வெற்றி வரும்...!

நம்புங்கள் வசந்தம் வரும்...!

நம்புங்கள் நல்வாழ்வு வரும்...!

No comments:

Post a Comment