Saturday, 30 June 2012

பசுமரத்தாணி

      ஒரு சிறுவனின் தந்தை அதிகமாக குடிக்கின்ற பழக்கமுள்ளவர். ஒரு நாள் அளவுக்கு அதிகமாக குடித்தவர் தன் மனவியை வன்மையாக திட்டி அடிக்கிறார் அதனை பார்த்திருந்த சிறுவன் அழுது கொண்டு தன் தாயினை நாம் இறந்துவிடலாம் என அவள் கையினை பிடித்துக்கொண்டு அருகில் உள்ள கிணறினை நோக்கி விறைகிறான்.

     கிணற்றின் அருகில் சென்றவன் உணர்ந்த மரண பயத்தில் தன் தாயினை கட்டி பிடித்துக்கொண்டு நாம் எங்கேயாவது போய் பிழைத்துக்கொள்ளலாம் என்கிறான்.

     ஒரு கனம் யோசித்துப் பார்த்தால் உலகினை இரசிக்க வேண்டிய பருவத்தில் இறப்பினை நினைத்த வடுக்கள்.  இன்றும், அவர் கூறுகையில் அவரது கண்கள் கலங்கும்.

     குடிப்பது கேடு என்பதை ஏற்றுக்கொள்ளாதவர்கள் உங்கள் உறவுகளையாவது காயப்படுத்தாமல் இருக்கலாம். அதிலும் உங்கள் எதிர்கால சந்ததியினருக்கு நல்ல விஷயங்களை விட்டு செல்லா விட்டாலும் நெருடுகின்ற வடுக்களை விட்டுச் செல்லாமல் இருக்கலாம்...

No comments:

Post a Comment