ஒருவர் தனது அலுவலகத்தில் இருந்து வீடு திரும்புகிறார். அவர் சென்று சேர வேண்டிய இடம் சுமார் 20 கிலோ மீட்டர் அந்த வாகனத்தை ஏற்ப்பாடு செய்தவர்கள் சரியாக திட்டமிடாததால் வேறு வேறு திசைகளிள் உள்ளவர்களை ஏற்றி விடுகிறார்கள்.
அந்த மனிதர் வாகனத்தில் ஏறி அமர்ந்த உடன். யார் யார் எங்கு எங்கு செல்கிறார்கள் என்பதை கேட்டவுடன் ஆரம்பித்தவர்தான்
நான் தான் அதிக தூரம் போக வேண்டும் என பொலம்ப ஆரம்பித்தவர் தனது அலுவலகத்திற்க்கு போன் செய்தார் அந்த ஓட்டுனர் உடன் வக்குவாதம் என பொலம்பி தீர்த்துக் கொண்டே வந்தார்.
உண்மையில் அன்று அவர் 12 மணிக்கு வீட்டுக்கு செல்ல
வேண்டியவர் குறைந்தது 2 மணிக்குத்தான் சென்றிருப்பர் அதற்க்கு உண்மையான காரணம் அவரது கவலை படுகின்ற குணாதிசயம்.
அவர் அந்த வாகன ஓட்டுனரிடம் நிலையை எடுத்துக்கூறி விட்டு இருந்தால் அவர் விரைவாக ஓட்டுவதற்க்கு முயர்ச்சி செய்து விரைவில் கொண்டு சேர்த்திருப்பார். ஆனால் அவரது கவலை இங்கே வாக்குவாதம் ஆகி ஓட்டுனர் வண்டியை செலுத்துவதில் கூட கவனமில்லாமல் விவாதிக்க ஆரம்பித்துவிட்டார்.
இது போலத்தான் கவலை நமது கனவினை அடைகின்ற வேகத்தை கரைக்கின்ற கரையான். விட்டொழியுங்கள் இதனை உங்களது இலக்கினை சரியான நேரத்தில் அடைய வேண்டுமானால். அர்னால்டு கிலாச்கவ்வின் வார்த்தைகளின் படி
வெற்றி என்பது
சரியானவற்றை சரியான நேரத்தில் சரியாக செய்வது
No comments:
Post a Comment