காற்று
பலமாக வீசும் போது அதன் பின்னால்
நிச்சயம் ஓர் அமைதி கிடைக்கும்
என்ற ஆழமான நம்பிக்கையின் தெளிவில் வருகிற இடையூருகளை எதிர்
கொள்வோம்.
அந்த முன்னேற்றத்தை நோக்கிய பாதையில் சிறு
சிறு நிகழ்வுகலான வெற்றி தோல்வி எல்லாம்
எங்கள் நினைவுகளில் நிற்காது அந்த அமைதி கிடைக்கின்ற
நொடிப்பொழுதினை நினைத்ததுக் கொண்டே எங்கள் உழைப்பு
முன்னோக்கி செல்லும் என்றார்.
வாழ்வில் கிடைக்கின்ற வெற்றி தோல்விகளை விட முன்னேற்றப் பாதையில் பயணிக்க வேண்டும் என்ற எண்ணத்தை உங்கள் உள்மனதில் புகுத்துங்கள். அதுவே கிடைத்த வெற்றிக்காக பிறரை பழிப்பதையும், கிடைத்த தோல்விக்காக கூனி குறுகிக் கொள்ளவதையும் உங்களிடமிருந்து இருந்து தொலைந்து போகச் செய்யும்,
எது நடந்தாலும், எந்த ஒரு தடையாக இருந்தாலும் அதற்க்கு ஓர் வரையறை இருக்கிறது அதனை தாண்டும் வரைதான் நம் உழைப்பு அதிகம் தேவைப்படும். எந்த ஒரு தடையாளும் உங்களை நிரந்தரமாக முடக்க முடியாது என்ற எண்ணம் உங்களுக்கு முன்னோக்கி செல்ல முதன்மை எண்ணத்தை கொடுக்கும்.
இது தொடர்கையில், நீங்கள் பயணித்த பாதையினை பதிவுகளே உங்களுக்கு ஆசைக்க முடியாத நம்பிக்கையை கொடுக்கும், உங்கள் கனவுகளை எட்டும் வரை.
வெற்றியோ தோல்வியோ
நிரந்தரமில்லை
வேசமிட்டுக் கொள்ளா
பூமியின் சமநிலை - இங்கு
நிலைக்கும் வரை...!
No comments:
Post a Comment