Friday, 20 July 2012

மன உறுதி

        ஒரு நாள் ஒரு பெரியவர் தனது பாதனிகளை சரி செய்ய ஒரு பாதனி பனியாலரிடம் அதனை கொடுத்து விட்டு அவர் ஊனமுற்றிருப்பதை பார்க்கிறார். அந்த தொழிலாளி  சரி செய்தபின் 20 ரூபாய் என்றார்.

        அந்த முதியவர் 25 ரூபாய் கொடுத்து தேனீர் அருந்த வைத்துக்கொள் என்றார் அதற்க்கு அந்த பனியால் அய்யா நான் ஊனமாக பிறந்திருந்தாலும் கடவுள் எனக்கு நிறைய மன உறுதியினை கொடுத்திருக்கிறார் மேலும் நான் நிறைய சம்பதிக்கிறேன் என்று 5 ரூபாயினை திரும்பக் கொடுத்தார்.

         அன்று அவர் முகத்தில் தனக்கு கால் இல்லா விட்டாலும் சொந்த காலில் நிற்க்கிறோம் என்ற சந்தோஷத்தையும். குறைவாக சம்பதித்தாலும் நிறைவான மனதினையும் பார்த்தேன்.

         இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு அந்த பனியாலரை பாஷ்போர்ட் பதிவு செய்யும் அலுவலகத்தில் பார்த்த  பின் அவரிடன் சென்று கேட்டேன் அவர் அந்த பனியினைப் பார்த்துக்கொண்டே தொலைத்தூரக்கல்வியில் B.A தமிழ் படித்ததாகவும் அதன் பிறகு ஊனமுற்றவர் இட ஒதுக்கீட்டில் இவ்வேலை கிடைத்ததாகவும் இப்பொழுது அவர் தொலைதூரக்கல்வியில் M.A தமிழ் படித்துக் கொண்டிருப்பதாகவும் சிரித்த முகத்துடன் சொன்னார்.

        அன்று, அவரது மன உறுதியும் விடாமுயற்ச்சியும் தான் அவர் உயர்வுக்கு காரணம் என்பதை யோசித்த வண்ணமே வீடு திரும்பினேன். கஷ்டம் வரும் போது "இதுவும் கடந்து போகும்" என்பதினை நினைத்துக் கொள்ளுங்கள் மன உறுதியினை மட்டும் இழந்து விடாதீர்கள் வாழ்வின் முன்னேற்றப் பாதையில் பயனிக்க வேண்டுமானால்.