மனிதனின் வெற்றிக்கும் தோல்விக்கும் அவனது சிந்தனைதான்
மூலாதாரம். நம் வாழ்வில் நமக்கு தேவையே இல்லாத சிந்தனையை மனதில் இருத்திக்
கொண்டு தடு மாறி கொண்டிருப்போம்.
உண்மையில்
அது நமக்கு தேவையில்லாததாகவோ காலம் கடந் ததாகவோ இருக்கலாம். அதுவே
நாளடைவில் முன்னேற்றத்திற்க்கு மிகப் பெரிய முட்டுக் கட்டையாவிடும்.
ஆங்கிலத்தில் Self Introspection
என கூறுவார்கள் இதன்படி உங்கள் ஒரு நாளின் சிந்தனையின் செயல்பாடுகளை
கவனியுங்கள். எது உங்கள் நாளின் அதிக மனித்துளிகளை ஆக்கிரமிக்கிறது என
கணக்கிடுங்கள் அது உங்களுக்கு உங்கள் வளர்ச்சிக்கு, சாந்தோசத்திற்க்கு
தேவையானதா என அலசுங்கள்.
தேவையான
செயல்பாடுகளை தொடருங்கள் அது உங்கள் வளர்ச்சி சாந்தோசத்திற்க்கு தடையா
இருக்கும் போது அந்த சிந்தனையை எடுத்தெரிகின்ற முயற்ச்சியில் எற்ப்படுகின்ற
சிறு தோல்வியானாலும்
முழு மனதுடன் ஏற்றுக் கொள்ளுங்கள் அது உங்கள் வாழ்வின் உண்மையான வெற்றியினை அடைகின்ற ஆற்றளை உங்களுக்குள் சேர்த்து வைக்கும்.
மனிதனின் குண நலன்களுக்கும் காந்தவியலுக்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது. காந்தவியலில் Ferromagnetic magnetic theory என கூறுவார்கள் காந்தத்தின் மூலக் கூறுகள் ஒரு திசை பார்க்கையில் அதிக காந்த சக்தியினை கொடுக்கும்.
சிறு வெளி விசை கொண்டு தூண்டும் போது அதன் மறுபட்ட திசை கொண்ட மூலக்
கூறுகள் அளவில் குறுகி மற்றவை அளவில் பெருத்து அதிக காந்த விசை கொண்டு,
பொருட்களை தன்னை நோக்கி இழுக்கும் அது போலத்தான்.
நம் சிந்தனையை கவனித்து செய்கின்ற சிறு சிறு மாற்றங்கள் நமது
வாழ்விற்க்கு தேவையற்ற சிந்தனையிலிருந்து நம்மை விலக்கி, தெளிவான சிந்தனை
கொடுத்து துல்லியமாக உங்கள் இலக்கினை அடைய உதவுதுடன்.
அதனை விரும்புகின்ற கூட்டத்தில் உங்களை கொண்டு சேர்க்கும்.
இந்த உலகத்தில் எந்த உயிரினமும் காரணமின்றி படைக்கப் படவில்லை. மனிதம்
உணரவேண்டிய உணர்வுகளை உணராமல் உலகினை விட்டு போவதில்லை என நம்புங்கள். இதன்
மூலம் உங்கள் எண்ணங்கள் தெளிவாகும் அதன் விளைவு
உங்ககளை வாழ்வில் வெற்றி பெற்ற வீரனாகவும்,
சுதந்தர வானில் சந்தோசமாக சுற்றித் திரிகின்ற பறவையாகும்
இவ் வாழுகின்ற பூமி பூந்தோட்டமாய் வாழும் காலம் வரை மாறும் என்பது தின்னம்.