சில நாட்களுக்கு முன்பு நான் சென்று வந்த ஊரில் நான் பார்த்த இந்த தேரினைப் பார்த்தவுடன் உங்களுக்கு என்ன தோன்றுகின்றது. சிறு கனம் என்னை என் நினைவுகள் அந்த குருச்சேத்திரப் போருக்குத்தான் கொண்டு சென்றது.
கிருஷ்ணர் தேரினை
செலுத்த அதில் ஆக்ரோசத்துடன்
நின்றிருந்த அர்ச்சுனன், படை
சிறியதாய் இருந்தாலும் உண்மையையும் ஒரு ஆயுதமாய் கொண்டு
போராடிய கூட்டம் மறுபுறம்,
செய்தது துரோகமானாலும் துடிக்காத இதயத்தில் தோன்றிய கௌரவத்தை காக்க
துடிக்கின்ற கௌரவர்கள், கருணையே உருவான கர்னனின் கம்பீர தோற்றத்துடன் நின்றிருந்த காட்சியும் அங்கே அறிவுறுத்தப்பற்றட்ட நன்னெறிகள் என்
கண் முன்னே வந்து சென்றது.
இன்று எத்னை எத்தனையோ அறுவருக்கத்
தக்க விஷயங்கள் நடந்து கொண்டு இருக்கின்றன
அதற்கு நமக்குள்ளே இதுதான் காரணமா அதுதான்
காரணமா என ஒருவருக்கு ஒருவர்
சண்டையிட்டுக் கொண்டிருக்கிறோம்
ஒரு கனம் யோசித்துப் பார்த்தால்
இதற்கெல்லாம் காரணம் மேற்கத்திய கலாச்சாரத்தின்
தாக்கமும் நாம் மறந்து விட்ட
நம் கலாச்சாரத்தின் சில நல்ல விஷயங்களும்தான் காரணம் என்பது தெறியவறும் அதற்காக நான் மற்ற கலாச்சாரத்தினை பின்பற்றாதீர்கள் என கூறவில்லை
எல்லா கலாச்சாரத்திற்குள்ளும் அதற்கே உறித்தான நன்மை தீமைகள் இருக்கின்றன, ஆனால் இன்று நாம், நமது கலாச்சாரத்தில் இருக்கின்ற நல்ல விஷயங்களை இழந்திருக்கிறோம் மேலும் நமது உணவு, உடை, செயல்பாடுகளில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய மாற்றங்களால்தான். இத்தகைய அருவறுக்கத்தக்க நிகழ்வுகள் நடந்தேரிக் கொண்டிருக்கின்றன.
இங்கு தவறுக்கு காரணம் ஆணா பெண்ணா என்ற வாதம் உபயோகமற்றதாக தெரிகிறது. இன்று அவசியமானது நமது கலாச்சாரத்தில் நாம் இழந்திருக்கிற நல்ல விஷயங்களை கண்டெடுத்து அதனையே உங்களது பழக்கமாக்கிக் கொள்ளுங்கள். முடிந்தால், இந்த தேரினைப் போன்று நம் கலாச்சாரத்தினை நினைவு படுத்துகின்ற நினைவுச் சின்னங்களை உங்களுடன் வைத்திருங்கள், அது நம் கலாச்சாரத்தின் நல்லனவற்றை நினைவுபடுத்திய வண்ணம் இருக்கட்டும், இது நிச்சயம் நமது சமுதாயத்தில் நல்ல மாற்றத்தை கொடுப்பது திண்ணம்.