நண்பர்
ஒருவர் தனது சிறிய தந்தைக்கு
பிறந்த குழந்தைக்கு உடல் நிலை சரியில்லாததால்
அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்தது
செல்கிறார். அப்பொழுது அங்குள்ள மருத்துவர்கள் குழந்தையின் நிலமை கவலைக்கிடமாக இருக்கிறது
சீிக்கிரம் பெரிய மருத்துவமனைக்கு அழைத்து
செல்லுங்கள் என்றார்கள்.
அந்த சமயத்தில் அதனைப் பார்த்துக் கொண்டிருந்த ஒரு நபர் அந்த நண்பரிடம் சென்று ஏதாவது ஆச்சினா சொல்லுங்க நம்ம வண்டியில் ஊருக்கு போயிரலாம் என்றார் தனது அமரர் ஊர்தியினைக் காட்டி. அந்த நண்பர் முகம் சிவந்து அந்த இடம் விட்டு அகன்றார் அது மருத்துவமனை என்பதால். காசுக்காக எவ்வளவு அருவருக்கத் தக்க எண்ணம்.
சில நாட்களுக்கு முன்பு ஒரு ஆட்டோ டிரைவர் ஒருவர் தனது நண்பர் "எப்படி இருந்தது அந்த பயணம் பணம் கரைந்திருக்குமே?". என கேட்கையில் அது உண்மைதான் ஆனால் அந்த சந்தோச நினைவுகள் எனக்குள் சில காலம் உழைக்கின்ற ஆற்றலை கொடுத்திருக்கிறது என சொன்னார் சிரித்த முகத்துடன்.
பணம் பதவிக்கு பலம் எதற்க்கும் அடிபனியாத இந்த சந்தோசம் நம் அழகான எண்ணத்தில்தான் அமைந்திருக்கிறது. நான் கண்டு வந்த சில நூல்கள் சொல்லின "உங்கள் சந்தோசம் நீங்கள் வரையறுத்ததாக இருக்கட்டும் அது உங்களுக்கு முழு மன திருப்தியை கொடுக்கும்".
சந்தோசம் சாத்திரமல்ல மற்றவரின் சந்தோச பதிவுகளை பாதையாக்கிக் கொள்ள அது நம் நடைமுறையில் தோன்றுகின்ற தனித்துவமான உணர்வு. அவர்கள் செய்வது போல செய்வதுதான் சந்தோசம் என்ற எண்ணத்தை விடுங்கள் ஏனெனில் வாழ்ந்து முடித்து வாழ்பவர்கள் இங்கில்லை.
ஒன்றை மட்டும் மனத்தில் கொள்ளுங்கள் நமது நீண்ட கால சந்தோசம் நமது நிகழ்காலத்தில் தோன்றுகின்ற எண்ணங்களால் மட்டும் நிர்ணயிக்கப் படுவதில்லை. அதற்கான அடிப்படை மூலம் நம் எண்ணத்தில்தான் இருக்கிறது அது அழகானால் நாம் வாழ்வு அழகாவது தின்னம்.