சிறுவன் ஒருவனின் தந்தை மிகவும் மரியாதைக்குறியவர். தன்னை போலவே தனது மகனும் இருக்க வேண்டும் என்ற ஆவல் அவருக்கு சற்று அதிகமே இருந்திருந்ததது. நிறைய கட்டுப்பாடுகள் அவன் சுதந்திரம் அதற்குள் சிக்கிக் கொண்டது. அவன் செய்யும் சிறு தவறுகளும் அவனை மிகப் பெரிய தண்டனைக்கு உள்ளாக்கியிருந்தது.
அவன் நாட்கள் நகர்ந்தன நரகமென. கல்லூரிப் பருவமும் வந்தது தாய் தந்தையினை பிறிந்து இருக்க வேண்டிய நிர்பந்தம். அது முதலில் அவனை வாட்டினாலும் அவன் சுதந்திரம் அவனுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை தகர்த்திக் கொள்ள வழி வகுத்தது.
தன் பிள்ளை நன்கு படித்து தன்னை போல் நல்ல மரியாதைக்குரியாவனாக வாழ்வான் அதற்க்கான விதையினை விதைத்துவிட்ட நிம்மதியில், அவன் தந்தை வாழ்ந்து கொண்டிருக்க. அழைப்பு வந்தது தன் மகனின் உடல்
எடுத்துச் செல்ல.
இத்தந்தைக்கு ஒன்றும் விளங்கவில்லை பிள்ளையை பறிகொடுத்த பதற்றத்தில் அங்கு உள்ளவரிடம் சென்று கேட்க அவனுக்கு நிறைய தீய பழக்கம் இருந்ததையும் ஏதோ ஒரு அற்பமான தோல்விக்கு அவன் உயிர் பிரிந்ததாகவும் தெரியவந்தது.
அன்று முதல் அவர் சிறுவர்களை அடித்தால் நடுங்க வைக்காதே அன்பினில் வாழ கற்றுக் கொடு. கட்டுப்பாடுகளை அதிகம் விதைக்காதே கண்ணியத்துடன் வாழக் கற்றுக் கொடு என்பாராம் அன்று முதல் இவ்வுலகம் அவரை பிள்ளையை பறிகொடுத்த பைத்தியம் என அழைக்க ஆரம்பித்துவிட்டது.
உலகில் எல்லோரின் விருப்பங்களை நிறைவேற்ற நினைப்பவன் வெற்றியாலனாய் இருக்க முடியாது என்பார்கள்.
கட்டுப்பாடுகள் அவசியம் தான் அதற்காக அதனை மட்டும் விதிக்கத் தெரிந்த அது வளர்ச்சியினை தடுக்கும் என்ற எண்ணமும், சிறு தவறானாலும் ஒருவரை ஒருவர் பழித்துக் கொள்ளும் எதிர்மறையான சூழலில் மூச்சி முட்டி இறப்பதற்குள், அதனை விடுத்து விலகிச் சென்று கண்ணியத்துடன் வாழக் கற்றுக் கொள்ளுங்கள். அது உங்களை சுமந்தவர்களின் மன நிம்மதியினை நிச்சயம் குறைக்காது.
மனிதம் விழைவது இங்கே விழுகையில் வலுவுட்டும் கரங்களைத்தான் விழுந்தபின் துளைக்கின்ற வல்லுருக்களை அல்ல. நீங்கள் வாழுகின்ற சூழல் உங்கள் சுதந்திரத்தை பறிக்காத, விருப்பங்களுடன் ஒத்துப் போகின்ற, வளர்ச்சியினை தடுக்காததாக இருக்கட்டும் அதே சமயம் உங்கள் செயல்பாடுகள் அவர்களுக்கு இதே நிலைமையினை கொடுப்பதாகவும் இருக்கட்டும்.