ஒரு நாள் ஒரு வயதான முதியவரும் நான்கு இளைஞர்களும் ஒரே இரயில் பெட்டியில் பயணம் செய்து கொண்டிருந்தனர். முதலில் அவர்கள்; அவர்கள் எடுத்துவந்த அலை பேசியில் பேசுவது, பாடல்கள் கேட்பது என்றுதான் அப்பயணம் தொடங்கியது
அந்த பயணம் தொடங்கிய ஓர் இரு மணி நேரத்திற்குள் அனைவரும் அவர்கள் கொண்டுவந்த தொழில் நுட்ப கருவிகளில் சலித்து
போயிருந்தனர். அப்பொழுது அங்கிருந்த ஒருவரை பார்த்து நீ என்னப்பா செய்கிறாய் என கேட்டார். அதற்கு அவர் நான் இராணுவத்தில்தான்
வேலை செய்கிறேன் என்றார்.
என்ன தம்பி இவ்வளவு சலிப்பா சொல்லுற, பின்ன என்னங்கையா நாங்க எங்கள் பிள்ளை, மனைவி எல்லாத்ததையும் விட்டுட்டு
காடு, மலை, பனின்னு பார்க்காம உழைக்கிறோம் யாருங்கையா எங்களையெல்லாம் மதிக்கிறது.
மரியாதையெல்லாம் உள்ளுரிலே இருந்துகிட்டு தவறே செய்து சம்பாரித்தாலும் காருல போரவனுக்குதான மரியாதை, ஏதோ அந்த குடியரசு தினம், சுதந்திர தினம் என இரண்டு நாட்களில் மட்டும்தான் எங்களைப்பற்றி செய்தித்தாளில் வரும், எங்காவது எங்களில் நாலு பேர் செத்தா செய்தியா போடுவாங்க.
நாங்கள் என்ன தியாகம் செய்தாலும் எங்கள் உயிரையே காசுக்கு விக்குறாங்க நம்மை ஆட்சி செய்பவர்கள். எங்களுக்கு கிடைக்கிற சம்பளத்தில் எங்கக பிள்ளைகளை நல்ல இடத்தில படிக்க வைக்க கூட முடியல, என அடுக்கி கொண்டே இருந்தார். அந்த பெரியவர் சரி தம்பி என்னதான் உன் ஆசை..!
குடும்பத்தோட இருக்கனும், நல்ல சம்பாதிக்கனும், கார் வங்கனும், வீடு கட்டனும், எனுக்கு கல்யாணம் ஆயிடுச்சு இரண்டு குழந்தையும் இருக்கு அய்யா, அப்புறம் ஏதாவது நாலு பேருக்கு நல்லது பண்ணி நாலு பேருக்கு உதவியாக இருக்கனுமையா.
அதற்கு அந்த பெரியவர் குறுக்கிட்டு அதை தான் நீ இப்ப செய்துக்கிட்டு இருக்கிறப்பா என்றார், அப்புறம் அந்த பெரியவர், நமக்கு சந்தோசம் தரும் உறவுகளையும்/உடைமைகளையும் நாம் நிர்ணயிக்கவும், கட்டுப்படுத்தவும் முடியாது. அது நம்மை கேட்டுவிட்டு நம்முடன் இருப்பதில்லை,
நாம் அடைய நினைக்கும் உடைமைகளும்/உறவுகளும் நமக்கு நீண்ட சந்தோசத்தை கொடுக்குமா அது நமக்கு தெரியாது. இப்படி தெரியாத விசயங்களில் நமது வாழ்க்கையின் நிமிடங்களை வீணடிப்பதற்கு பதிலாக, உங்களுக்கு சந்தோசம் தரும் பணியினை முழு மனதுடன் செய்து கொண்டே இருங்கள் அது உங்கள் வாழ்வின் உயர்வுக்கு வழி வகுக்கும் என்றார்.
அந்த இளைஞ்சர்கள் வந்துட்டாருடா வாத்தியாரு என தங்களுக்குள் கிண்டல் பேசிக்கொண்டு, நாங்கள் இராணுவத்தில் இருந்த வருகையில் மதுபானம் வாங்கி வந்திருக்கிறோம் உங்களுக்கு வேண்டுமா என்றனர்.
அதற்கு அவர் இதனை குடித்தால் எல்லாத்தையும் மறப்போம் என்பார்கள் ஆனால் அது அவசியமல்ல வாழ்வில் நடப்பனவற்றை காணத்தான் படைக்கப் பட்டிருக்கிறேன். அங்கு சலசலப்பு அதிகரித்தது,
இப்படி அவர்கள் கேள்விகளை அடிக்கிக் கொண்டிருக்க, இறுதியாக வெளியில ஓட்டல்ல கூட சாப்பிட மாட்டிங்களா என்றார்கள், இல்லை சாப்பிட மாட்டேன். அங்கு சாப்பாடு ருசியாயிருக்கும் ஆனா நான் நல்லா இருக்கனும் இதால எனக்கு எதுவும் ஆயிட கூடாது என்கிற அக்கறை இருக்காது. வெளியில சாப்பிட்டா அது பழங்கள்தான்.
இப்படி வாழ்க்கையில் எவ்வளவோ விசயங்கள, அவசியமில்லாமலே நாம் நமது சுமைகளை கூட்டி கொண்டே இருக்கிறோம் அது அத்தியாவசியம் இல்லை என்றாலும்.
நான் அஞ்சலகத்தில் பணி புரியும் சாதாரண அரசு தொழிலாளிதான்
எனது இரண்டு மகன்களில் ஒருவன் அமெரிக்காவிலும் மற்றொருவன் ஆஸ்திரேலியாவிலும் இருக்கிறான். நான் செய்ததெல்லாம் என்னுடைய பணியினை விரும்பியதுதான்.
என் சம்பளம் என்னுடைய குடும்பதினை நடத்த கஷ்டமாகத்தான் இருந்தது நான் அடுத்தவர்களை பார்த்து அவர்களின் விருப்பதினை பின்பற்ற நினைத்த வரை. நான் என் பனியினை வெறுத்ததில்லை அதுதான் எனக்கு இன்றைக்கு இப்படி ஒரு சந்தோசமான வாழ்வினை கொடுத்திருக்கிறது என நம்புகிறேன் என்றார்.
அந்த இளைஞர்கள் மன குழப்பத்துடன் தங்கள் ஊரில் இறங்கி நடந்தனர். அவர்கள் வாழ்வில் நல்ல மாற்றம் ஏற்பட்டிருக்குமென நம்புகிறேன்...