Thursday, 28 August 2014

வெற்றிக்கு உதவாத உணர்ச்சி வசப்படுதலும் (ம) உண்மையான உணர்வில்லாமையின் சங்கடமும்

       ஒரு அழகான கிராமத்தில், அன்பான அண்ணன் தம்பிகள் இருவர் வசித்து வந்தனர், பழமொழிக்கு ஏற்றார் போல் சிறு வயது பருவம் வரை. வயது முதிருவடைந்த பின்  சொத்துக்காக இருவரும் அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டதுண்டு  ஆனாலும் இருவரும் ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுப்பதில்லை.

      ஊர் நல்ல அண்ணன் தம்பிகள் என கூறும் அளவிற்கு ஒற்றுமையுடன்  இருந்தனர். ஒரு நாள் அவர்களது மனைவிகளுக்கு நடுவில் ஏற்ப்பட்ட சண்டையில். தம்பி கடப்பாரையால் அண்ணனின் நெஞ்சினில் குத்தி; அண்ணன் அவ்விடத்திலே இறந்து விடுகிறான். அந்த விபரத முடிவிற்கு காரணம் வீட்டிற்கு தண்ணீர் எடுப்பதுதான்.

      அந்த நொடிப்பொழுதில் அதனை அறியாமல் செய்து விட்டு சிறை, வழக்கு என அவரது மீதி வாழ்க்கை சுக்கு நூறாகிப் போனது. எல்லோரும் கேட்டதற்கு இளையவன் கூறிய காரணம், முன்பு ஒரு முறை என்னை கத்தியால் வெட்டிவிட்ட சம்பவத்தை கூறி அவன் கை ஒங்கிய வேகத்திலும், பயத்திலும் நான்  கடப்பாரையை எடுத்து குத்தி விட்டேன், குத்திய பின் தான் எனக்கு தெரிய வந்தது அவன் ஒங்கியது வெறுங்கை என்று.

       மன ஆரச்சியாலர்கள் சொல்வார்கள், நமது நினைவு இரண்டு விதங்களில் வகைப்படுத்தப்படுவதாய்.  ஒன்று சாதாரண நினைவு(ஹிப்போகேம்பஷ்) இது அறிவின் மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது மற்றொன்று உணர்வின் நினைவுகள் (அமிக்டலா). சில நேரங்களில் இந்த உணர்வின் நினைவுகள் அனிச்சை செயலாய் நம்மை ஆட்கொண்டுவிடும்.

         என்னதான் நம்மிடம் நுன்னறிவு அதிகமாக இருந்தாலும் தன்னையும் தன் உணர்ச்சிகளை நேர்த்தியாக கையாலுவது, பிறரது ஊணர்வுகளை அறிந்து கொண்டு நடக்கும்  திறமை நம்மிடம் இல்லையெனில் அது நம் வெற்றிக்கு மிகப் பெரிய முட்டுக்கட்டை ஆகிவிடும்.

       இதுபோன்று நமது உணர்ச்சிகளை நேர்த்தியாக கையாலும் திறன் தேவைப்படுவது ஒரு புறமிருக்க...

        வாழ்வில் சிறு வயதில் கடினப்பட்டு படித்து முன்னேறிய ஒரு உன்னதமான மனிதர் மேடையில் ஏறி அங்கு குழுமியிருந்த மாணவர்களுக்கு தான் சேர்த்து வைத்த மதிப்புகளையும், நற்பண்புகளையும் கொட்டி விட்டு, தாய் தந்தையை மதித்து நடக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்க

       ஒரு மாணவன் எழுந்து ஐயா! உங்கள் அப்பா அம்மா எங்கே இருக்கிறார்கள் என்று கேட்க.. எனது தந்தை நான் சிறுவதில் இருக்கும் பொழுதே இறந்துவிட்டார். எனது தாயார் மட்டும் சர்க்கரை வியாதி அதிகமானதால் ஒரு கால் எடுக்கப்பட்டு ஆசரமத்தில் இருக்கிறார்கள் என்றார்

       அதற்கு அந்த சிறுவன், அய்யா கார்ல எல்லாம் வருகிறீர்கள் உங்கள் அம்மாவை உங்களால் பார்த்துக்கொள்ள முடியாதையா என்றான். அந்த மனிதரின் கண்களில் தண்ணீர் பொல பொல என சரிந்தன மறு வார்த்தையை கூட பேசாமால் மேடையில் இருந்து இறங்கி அவ்விடத்தை விட்டு அகன்றார். அவரது குடும்பத்திற்கு இருக்க வேண்டிய உண்மையான உணர்வின் குறைபாட்டில் வந்த சங்கடம்.

      வல்லுநர்கள் "வாழ்வில் மிக உயர்ந்த நிலைக்கு சென்றவர்கள் தங்கள் உணர்ச்சிகளை நேர்த்தியாக செயல்படுத்தியிருப்பதையும், அவர்கள்
மற்றவரது உணர்வகளை புரிந்து நடந்தவர்கள் என உறுதி செய்திருக்கிறார்கள்".

       உணர்ச்சி வசப்படுவது இன்று நமக்கு உதவாது...  அதனை புரிந்து நடந்து கொள்ள (ம) மற்றவர்களின் உணர்வுகளை அறிந்து நடந்து கொள்ள முயற்சி செய்வோமானால்.  நிம்மதி நிழலாய், வெற்றி விடியலாய் நம்மை தொடருமென்பது  நிச்சயம்...