Sunday, 23 September 2012

வெற்றிக்கு வழியாகலாம்

தைரியத்தின் தட்சணை:   தைரியம் உங்களுக்குள்ளே விதைக்கப்பட்டுள்ள நண்பன். நம்புங்கள் முழுமையான நல்லவர்களும் இங்கில்லை முழுமையான தீயவர்களும் இங்கில்லை ஏனெனில் மனிதம் நிறை குறைகளுடன் படைக்கப் பட்டுள்ளதுதான்(பிரபல விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசனின் வாழ்வைப் பார்த்தால் 1000 கண்டுபிடிப்புகளை கண்டு பிடித்த மாமேதை தனது தனி மனித வாழ்வில் தடுமாறியது தெரியவரும்).

       "பெரியவர்களை கண்டு வியத்தலும் இலவே சிரியவர்களை கண்டு இகழ்தலும் இலவே" என்ற கனியன் பூங்குன்றனாரின் வார்த்தைகளையும் நினைவில் கொள்ளுங்கள் அந்த தைரியம் உங்கள் அடி மனதில் வேர் விட. உங்கள் வாழ்வில் ஒரு அடி எடுத்து வைக்க வேண்டுமானாலும் இந்த நண்பனின் உதவி இல்லாமல் இயலாது

சரியான இடத்தில் பழைய கட்டுப்பாடுகளை தகர்த்தல்: 
  பழைய நம்பிக்கைகள் நல்லவைதான் ஆனால் அது இந்த புதிய சூழலுக்கு பொருந்தாதாக இருக்காலாம். நம் வாழ்வில் வெற்றி பெற வேண்டுமானால் அந்த பழம் நம்பிக்கைகளை சரியான இடத்தில் தகர்த்தெரிய வேண்டும்.

       ராமயணத்தில் ராமன் வாலியை மறைந்து நின்று அம்பெய்து கொன்றான். அது அந்த காலத்து போர் முறைக்கு வகுக்கப் பட்ட கட்டுப்பாடுகலுக்கு புறம்பானதுதான். ஆனால் மக்களின் மனு தர்மத்தில் பின்னாலில் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

       இந்த உதாரணம் கட்டுப் பாடுகளை சரியான இடத்தில் தகர்க்கின்றது என நம்புகிறேன்.

தேவையற்றவற்றை மனதிலிருந்து நீக்குதலும்
எப்பொழுதும் நல்ல மாற்றங்களை ஏற்றுக்கொள்ள தயாராக இருத்தலும்:   நம்ம வீட்டினை அழகாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பது நாம் எல்லோரும் விரும்புவதுதான். நாம் ரொம்ப செண்டிமென்ட் ஆன மனிதர் என்றால் அந்த பொருள் நமது நடைமுறை வாழ்விற்க்கு தேவையே இல்லை என்றாலும் எனது தாத்தா கொடுத்தது பாட்டி கொடுத்தது என நம்மால் ஒரு பொருளையும் வெளியே தூக்கி எரிய முடியாது. அதனால் நமது வீட்டினில் புது நடைமுறை வாழ்விற்க்கு தேவையான பொருளை வாங்கி வைக்க முடியாமல் போகலாம்.

       அது போலத்தான் நாம் நம்பிக் கொண்டிருக்கும் சில பழைய நம்பிக்கைகளை அடையாலம் கண்டு கொண்டு தகர்த்தெரிந்து. உங்கள் மனதில் நல்ல மாற்றங்களை ஏற்றுக்கொள்ளத் தேவையான இடத்தினை எப்பொழுதும் தயாராக வைத்திருங்கள் .
 

      இந்த நல்ல மாற்றங்களை நீங்கள் ஏற்றுக் கொள்ளாவிட்டால் நீங்கள் இந்த சுழலுக்கு ஒவ்வாதவர் ஆகி விடுவீர்கள் அது உங்கள் வளர்ச்சியினை தடுத்து கொண்டே இருக்கும்.

நாம் செய்த மாற்றம் இந்த சூழலுக்கு ஒத்துவருமா என உறுதி செய்தல்: நாம் என்னதான் நல்ல மாற்றத்தை நமக்குள் ஏற்ப்படித்திக் கொண்டாலும் அது நாம் வாழ்கின்ற இந்த சூழலுக்கு ஏற்றதாக இருக்க வேண்டும் அப்படி இல்லாவிட்டால் நமது மாற்றம் முற்றிலும் தவறாகிவிடும்.

        இங்குதான் தொழில் முனைகின்ற நிறைய மனிதர்கள் தோல்வியினை தழுவியிருக்கிறார்கள். ஏனெனில் அவர்கள் அவர்களது பொருள்களில் நிறைய நல்ல மாற்றம் செய்தாலும் அவைகள் இந்த சூழலுக்கு ஏற்ற மாற்றமாக இருப்பதில்லை.

தைரியத்தை பாய்மரமாக்கி
          பழமையெனும் பயத்தினை
தடைகளாய் தகர்த்து
         நம்பிக்கையெனும் விடியலை நோக்கி
வாடைக் காற்றென்னும் சுழலுக்கேற்ப்ப
         வாழ்க்கைப் படகினை செலுத்துங்கள்
வெற்றியெனும் சொர்க்கத் தீவினை அடைய...!

Monday, 10 September 2012

உள்மன உணர்வும் வழி நடத்தும்

      ஒரு மாணவன் தனது கல்லூரிப் பருவத்தில் கலாச்சாரம் என்னும் தேர்வினை எழுதி அதில் தேர்ச்சி பெற்று  கலாச்சார முகாமிற்க்கான  தகுதியினைப் பெற்றான் அன்று அவனுக்கான நுழைவுச் சீட்டு வந்திருந்தது.

      அந்த நுழைவுச் சீட்டினைப் பெற்றுக் கொண்டவன் எப்பொழுதும் போல தனது நோட்டுக்குள் வைத்தான் அன்று மாலை தனது நண்பன் கணக்கு நோட்டினை கேட்க எப்பொழுதும் எதாவது உள்ளதா என பார்த்துவிட்டு கொடுப்பவன் அன்று மட்டும் சரியாக பார்க்கமல் கொடுத்துவிட்டு அனுப்புகிறான்.

      அன்று இரவு தனது பயணத்தை துடங்குவத்தற்க்கு முன் தனது நுழைவுச் சீட்டினை தேடுகையில் அது இல்லாதது தெறிய வந்தது. தான் அன்று கல்லுரிக்கு எடுத்துச் சென்ற அனைத்தினிலும் தேடி விட்டு தன் நண்பனிடம் நோட்டு கொடுத்த ஞாபகம் வந்தது அவனது வீட்டுற்க்கு போன் செய்தான் அன்று தொடர்புகள் துண்டிக்கப்பட்டு இருந்தன.

      உண்மையில் அவனுக்கு தனது நண்பனது ஊர் பெயர் மட்டும் தான் தெறியும் ஆனாலும் எப்படியாவது அவனைப் பார்த்து அவனிடம் நுழைவுச் சீட்டினை பெற்றுக் கொண்டு காலைக்குள் அங்கு சென்றுவிடலாம் என்ற உள் மன நம்பிக்கையுடன் தன்னுடன் வர இருந்த நண்பர்களை தனியாக செல்ல சொல்லி விட்டு தனது நண்பன் ஊருக்கு விரைந்தான்.

      பேருந்தில் பயணித்த போது அவன் மனதில் அது எப்படியும் கிராமமாகத் தான் இருக்கும் சுலபமாக கண்டுபிடித்து விடலாம் என்று நினைத்த வண்ணம் சென்றான் ஆனால் பேருந்தில் இருந்து இறங்கிப் பார்த்தால் அது ஒரு சிறு நகரம். அவனது நம்பிக்கை சற்று தடுமாறினாலும் உள் மன உணர்வு மட்டும் கூறிக் கொண்டே இருந்தது எப்படியும் அந்த முகாமிற்க்கு போய் விடுவான் என்று.  

       தனது கல்லுரியின் பெயரினை கூறி அங்கு படிக்கும் மாணவர்களைப் பற்றிகேட்டுக் கொண்டு சுமார் 2 கிலோ மீட்டர் நடந்திருப்பான். அதன் பிறகு தனது கல்லுரியில் படிக்கும் மாணவனின் விலாசம் கிடைத்தது. அவரிடம் சென்று கேட்கையில் தனது நண்பனின் ஊர் அங்கிருந்து 3 கிலோ மீட்டர் என தெரிந்து கொண்ட பின் அந்த இருண்ட சூழலில்  சென்று தனது நண்பன் வீட்டினை அடைந்தான்.

      நம்பிக்கை மீண்டும் துளிர் விட்டது. வீட்டுக்குள் சென்று அவரது அம்மாவிடம் கேட்ட போது அவன் அவனது அக்காவின் வீட்டிற்க்கு சென்றிருப்பதாக  கூறி ஒரு தொலைபோசி எண்ணினை கொடுத்தார்கள் அவர்களும் அவனை தொடர்புகொள்ள நினைத்தார்கள். மன நிம்மதிக்காக அவன் புத்தகங்களை வைக்கின்ற இடங்களை தேடிப் பார்த்துவிட்டு.

      மேலும் நம்பிக்கை தளர்ந்தவனாய் மறுபடியும் 3 இடங்களில் போன் செய்து பார்த்து.  உதவி செய்ய வந்தவருக்கு நன்றி கூறிவிட்டு தனது கல்லுரியினை நோக்கி பயனித்தான். நம்பிக்கை முழுவதினையும் இழந்தாலும் அவன் உள் மன உணர்வுகள் மட்டும் எப்படியும் அந்த முகாமிற்க்கு செல்வோம் என உணர்த்திய வண்ணம் இருந்தன.

       தனது கல்லுரிக்கு அருகில் இருக்கின்ற நகரத்துக்கு வந்த போது 11 மணி இருக்கும். அந்த முகாமிற்க்கு போக வேண்டுமானால் காலை 10 மணிக்குள் செல்ல வேண்டும் அந்த ஊருக்கு செல்வதற்க்கு குறைந்து 10 மணி நேரம் பயணிக்க வேண்டும். இறுதியாக ஒரு முறை போன் செய்து பார்க்க அவன் உள் மனம் அறிவித்துக் கொண்டே இருந்தது.

       நம்பிக்கையே இல்லாமல் அந்த எண்ணிர்க்கு போன் செய்தார். முதல் முறை மணி ஒளித்தது. அங்கே நண்பனின் சகோதரி அதனை எடுத்து தனது தம்பி வெளியில் சென்றிருப்பதாக. காத்திருப்பதின் வலி உண்மையில் இந்த மாதிரி சிக்கலான நிமிடங்களில் தான் நாம் உணர்வோம். அந்த கடைக்கார் தனது கடையினை மூடுவதற்க்கு தயாரானார்.

      அவன் எப்பொழுது வருவான் என தெரியாவிட்டலும் அந்த கடைக்காரரிடம் 10 நிமிடங்கள் கழித்து மூடுமாறு வேண்டி கேட்டுக் கொண்டான். அவன் உள் மனம் உணர்த்திய உணர்வுகள் வீண் போகவில்லை. தொலைபேசி மணி ஒளித்தது 7 ஆவது நிமிடத்தில். அவனது நண்பன் என்னாச்சு என சாந்தமாக கேட்டான். அவனிடம் தனது நுழைவுச்சீட்டு இருப்பதை உறுதி செய்து கொண்டு அவனை அருகில் உள்ள பேருந்து நிலையத்திற்கு வரச்சொன்னான்.

       அது வரை ஒளிந்திருந்த அதிஷ்டம் கை கொடுத்தார் போல. அவனுக்கு பேருந்துகள் உடனுக்குடன் கிடைத்தது. தனது நண்பன் இருந்த ஊரும் அவன் முகாமிற்க்கு போக வேண்டிய பாதையில் இருந்ததால். அவன் சுலபமாக அந்த நுழைவுச்சீட்டினை பெற்றுக் கொண்டு அந்த முகாமிற்க்கு சென்று சேர்ந்தான்.

       சில நேரங்களில் நமது  நம்பிக்கை தடுமாறினாலும் இந்த உள் மன உணர்வு(intuition) நமக்கு வழி காட்டும். நம்புங்கள் நல்லதே நடக்கும் என்று உங்கள் உள் மன வழிகாட்டுதலுடன்.