Sunday, 23 September 2012

வெற்றிக்கு வழியாகலாம்

தைரியத்தின் தட்சணை:   தைரியம் உங்களுக்குள்ளே விதைக்கப்பட்டுள்ள நண்பன். நம்புங்கள் முழுமையான நல்லவர்களும் இங்கில்லை முழுமையான தீயவர்களும் இங்கில்லை ஏனெனில் மனிதம் நிறை குறைகளுடன் படைக்கப் பட்டுள்ளதுதான்(பிரபல விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசனின் வாழ்வைப் பார்த்தால் 1000 கண்டுபிடிப்புகளை கண்டு பிடித்த மாமேதை தனது தனி மனித வாழ்வில் தடுமாறியது தெரியவரும்).

       "பெரியவர்களை கண்டு வியத்தலும் இலவே சிரியவர்களை கண்டு இகழ்தலும் இலவே" என்ற கனியன் பூங்குன்றனாரின் வார்த்தைகளையும் நினைவில் கொள்ளுங்கள் அந்த தைரியம் உங்கள் அடி மனதில் வேர் விட. உங்கள் வாழ்வில் ஒரு அடி எடுத்து வைக்க வேண்டுமானாலும் இந்த நண்பனின் உதவி இல்லாமல் இயலாது

சரியான இடத்தில் பழைய கட்டுப்பாடுகளை தகர்த்தல்: 
  பழைய நம்பிக்கைகள் நல்லவைதான் ஆனால் அது இந்த புதிய சூழலுக்கு பொருந்தாதாக இருக்காலாம். நம் வாழ்வில் வெற்றி பெற வேண்டுமானால் அந்த பழம் நம்பிக்கைகளை சரியான இடத்தில் தகர்த்தெரிய வேண்டும்.

       ராமயணத்தில் ராமன் வாலியை மறைந்து நின்று அம்பெய்து கொன்றான். அது அந்த காலத்து போர் முறைக்கு வகுக்கப் பட்ட கட்டுப்பாடுகலுக்கு புறம்பானதுதான். ஆனால் மக்களின் மனு தர்மத்தில் பின்னாலில் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

       இந்த உதாரணம் கட்டுப் பாடுகளை சரியான இடத்தில் தகர்க்கின்றது என நம்புகிறேன்.

தேவையற்றவற்றை மனதிலிருந்து நீக்குதலும்
எப்பொழுதும் நல்ல மாற்றங்களை ஏற்றுக்கொள்ள தயாராக இருத்தலும்:   நம்ம வீட்டினை அழகாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பது நாம் எல்லோரும் விரும்புவதுதான். நாம் ரொம்ப செண்டிமென்ட் ஆன மனிதர் என்றால் அந்த பொருள் நமது நடைமுறை வாழ்விற்க்கு தேவையே இல்லை என்றாலும் எனது தாத்தா கொடுத்தது பாட்டி கொடுத்தது என நம்மால் ஒரு பொருளையும் வெளியே தூக்கி எரிய முடியாது. அதனால் நமது வீட்டினில் புது நடைமுறை வாழ்விற்க்கு தேவையான பொருளை வாங்கி வைக்க முடியாமல் போகலாம்.

       அது போலத்தான் நாம் நம்பிக் கொண்டிருக்கும் சில பழைய நம்பிக்கைகளை அடையாலம் கண்டு கொண்டு தகர்த்தெரிந்து. உங்கள் மனதில் நல்ல மாற்றங்களை ஏற்றுக்கொள்ளத் தேவையான இடத்தினை எப்பொழுதும் தயாராக வைத்திருங்கள் .
 

      இந்த நல்ல மாற்றங்களை நீங்கள் ஏற்றுக் கொள்ளாவிட்டால் நீங்கள் இந்த சுழலுக்கு ஒவ்வாதவர் ஆகி விடுவீர்கள் அது உங்கள் வளர்ச்சியினை தடுத்து கொண்டே இருக்கும்.

நாம் செய்த மாற்றம் இந்த சூழலுக்கு ஒத்துவருமா என உறுதி செய்தல்: நாம் என்னதான் நல்ல மாற்றத்தை நமக்குள் ஏற்ப்படித்திக் கொண்டாலும் அது நாம் வாழ்கின்ற இந்த சூழலுக்கு ஏற்றதாக இருக்க வேண்டும் அப்படி இல்லாவிட்டால் நமது மாற்றம் முற்றிலும் தவறாகிவிடும்.

        இங்குதான் தொழில் முனைகின்ற நிறைய மனிதர்கள் தோல்வியினை தழுவியிருக்கிறார்கள். ஏனெனில் அவர்கள் அவர்களது பொருள்களில் நிறைய நல்ல மாற்றம் செய்தாலும் அவைகள் இந்த சூழலுக்கு ஏற்ற மாற்றமாக இருப்பதில்லை.

தைரியத்தை பாய்மரமாக்கி
          பழமையெனும் பயத்தினை
தடைகளாய் தகர்த்து
         நம்பிக்கையெனும் விடியலை நோக்கி
வாடைக் காற்றென்னும் சுழலுக்கேற்ப்ப
         வாழ்க்கைப் படகினை செலுத்துங்கள்
வெற்றியெனும் சொர்க்கத் தீவினை அடைய...!

No comments:

Post a Comment