ஒரு அழகான கிராமம், நன்றாக வறையறுக்கப்பட்ட தெருக்கள். அங்கு அதிகம் படிக்காவிட்டாலும் பாசத்தை மறக்காத மக்கள்.
அனுபவ அறிவினில்
- தங்களை சரியாக வழி நடத்தவும்.
- தங்கள் காலத்தை சரியாக பயன்படுத்தவும்.
- காலனிலைகளை உணர்ந்து தொழில் புரியவும் .
- உறவுகளுடன் வாழுகின்ற வாழ்வினை மட்டும் உயர்வாக
நினைக்க்கின்ற உன்னத வாழ்வையும் கற்றுக் கொண்டிருந்தனர் .
ஆனால் அவர்களது கல்வி அறிவு மட்டும் இருலாய் இருந்தது.
படிக்கவேண்டுமானால் குறைந்தது 200 இலிருந்து 300 கிலோ மீட்டருக்கு அப்பால் தங்கள் குடும்பத்தினை விட்டு பிரிந்திருந்து படிக்க வேண்டியிருந்தது. அதனால் அங்கு வாழ்கின்ற மக்கள் தனது ஆண் குழந்தையினை படிக்க வைத்தாலும் தங்களது பெண் குழந்தைகளினை 10 ஆம் வகுப்பு அல்லது வயதிற்க்கு வந்த பின் நிறுத்துவது வழக்கமாக இருந்தது.
அப்பொழுது வெளியே சென்று படித்துவந்த மாணவர்கள் சிலர் அங்கு வாழ்கின்ற மக்களுக்கு "பெண்கள் வெகுதுலைவிலிருந்தெல்லாம் படிக்க அங்கு வருவதாகவும் மேலும் அவர்கள் அங்குள்ள மக்களால் பாதுகாப்புடன் நடத்தப்படுவதாகவும் தெறிவித்தனர்" அதனை அங்குள்ள மக்கள் ஏற்றுக்கொள்ள மறுத்ததுடன் அவர்கள் முன்னோரு காலத்தில் நடந்த எதிர்பாராத விபத்தினை எடுத்துக்கொண்டு அதனை அவர்களிடம் விவரிக்க ஆரம்பித்துவிடுவார்கள்.
உண்மையில் அது எதிர் பாராத விதமாகவோ அல்லது அந்த தனி மனிதத்தின் குறைபாட்டால் நிகழ்ந்திருக்கலாம் ஆனால் அந்த
நிகழ்வால் ஒரு ஒட்டுமொத்த சமூகமே பின்னடைவை சந்தித்தது.
இது காலம் காலமாக தொடர்ந்து கொண்டே இருந்தது.
வெளியூர்களில் படித்து வரும் மாணவர்கள் விளையாட்டாக விவரித்தாலும். ஒன்றிரண்டு தைரியாமன பெற்றோர்கள் தங்கள் பெண்பிள்ளைகளின் மீது உள்ள நம்பிக்கையில் வெளியுருக்கு அவர்களை படிப்பதற்க்கு அனுப்புகிறார்கள்.
அந்த உண்மை ஆன்மாக்களின்
- நல்லொழுக்கத்தாலும்
- பின்னாளில் தங்கள் பெற்றோருக்கு உதவியவிதத்தாலும் .
அக்கிராம மக்களின் பழம்பெரும் நம்பிக்கையினை தகர்த்தெரிந்து கல்லாமை என்னும் இருளினை அகற்றுகின்ற தீபத்தின் திரிகள் தூண்டிவிடப்பட்டது. இன்று அந்த கிராமத்தில் இருந்து வெளியே சென்று படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை கனிசமாக உயர்ந்து கொண்டிருக்கிறது.
அவர்களுக்கு தெரியாமலே அம்மக்களின் வாழ்வில் இருந்த அறியாமை இருளினை விலக்கி தேவையற்ற பழம் நம்பிக்கைகளைத் தகர்க்க உதவிய தூண்டுதலாய் அவர்களின் நல்லொழுக்கமும் நன்னடத்தையும்.
Thursday, 25 October 2012
Monday, 1 October 2012
சந்தோசமென்னும் சரணாலயம்.
உலகத்தில் உள்ள அனைத்து உயிரினங்களின் இச்சையும் இன்பமாக வாழ வேண்டும் என்பதுதான்.
தடைகள்
தன்னம்பிக்கை இல்லாமை: நமக்குள் நம்மீது நம்பிக்கை குறையும் போது அடுத்தவர்களின் உதவியினை நாடவேண்டிவரும். நான் உதவுபவர்கள் உங்கள் எதிரி என கூறவில்லை அவர்கள் அவர்களது முதல் நண்பன் என்றுதான் சொல்கிறேன். (உங்கள் வாழ்வின் உடைமைகளை உரிமைகளை, முடிவுகளை, நீங்களே தேர்ந்தெடுங்கள் அதுதான் உங்களுக்கு உண்மையான சந்தோஷத்தைக் கொடுக்கும்.)
பயம்: நீங்கள் உடம்பில் முதுகெலும்பு இல்லாத புழுவாக இருந்தால் எரும்பு கூட உங்களை துன்புறுத்தும் அது அதன் வழியில் உங்களை வழி நடத்த ஆரம்பித்துவிடும். உங்களது பயம் தான் உங்கள் சுதந்திரத்தின் முதல் எதிரி. உங்கள் சுதந்திரம் பரிபோன பின் மனம் விரும்பும் செயலினைக்கூட செய்ய முடியாமல் இருக்கும் போது உங்கள் சந்தோசத்தின் நிலையினை நினைத்து கூட பார்க்க இயலாது(உறவுகளுக்காக முழு மனதுடன் விட்டுக் கொடுப்பது வேறு ஆனால் அது உங்கள் சுதந்திரத்தை கூண்டுக்குள் வைக்காமல் இருக்கட்டும்)
அடுத்தவர்களை பழித்தல்: இந்த நம்பிக்கை குறைவு நமக்குள் ஒரு பயத்தினை உண்டாக்கி வாழ்வின் வலிமையை சந்திக்க இயலாத தடுமாற்ற நிலையினை உருவாக்கும். இந்த இயலாமை ஆழ்மன உலைச்சலினை கொடுத்து. அடுத்தவர்களை குறை கூற ஆரம்பித்துவிடுவோம் அது நம் வாழ்வின் வெற்றிக்கு தேவையான (ம) வாழ்வின் இன்றியமையாத உறவுகளுக்கு மிகப்பெரிய தடையாகலாம்
எண்ணங்களை ஆராய்தலும் கட்டுப்படுத்துதலும்: உங்கள் எண்ணங்களை அலசுங்கள் எங்கு உங்கள் இதயம் சந்தோசமாக இருக்கிறது. அந்த செயல்களை உங்கள் வாழ்வின் பழக்கமாக்குங்கள் ஆனால் அதற்க்கு முன்பு அது சரியான செயலா என உங்களுக்குள் ஆராய்ந்துகொள்ளுங்கள்.
ஏனெனில் சில செயல்கள் உடனடியாக சந்தோசத்தினை கொடுத்தாலும்(இந்த செயல்களை நீங்கள் உங்கள் வாழ்வின் அனுபவத்தினாலோ, அடுத்தவர்களின் வாழ்வில் நிகழ்பவனவற்றைக் கொண்டோ அல்லது மற்ற ஆதாரங்களிலிருந்து அறிந்துகொள்ளலாம்) பின்னாளில் அதுவே உங்கள் மனதின் உறுத்தலாகவோ அல்லது உங்கள் சந்தோசத்தை சிதைக்கின்ற காரணியாக மாறலாம்.
நிகழ்வுகளை(வெற்றி, தோல்வி) ஏற்றுக்கொள்ளல்: வாழ்க்கையில் சில விஷயங்கள் நமது கட்டுப்பாட்டுக்குள் இல்லாமலே தோற்க்க நேரலாம். சில விஷயங்கள் நமது கட்டுப்பாட்டில் இருந்தாலும் தோற்க்க நேரலாம் அதற்க்காக கவலைப் பட்டுக் கொண்டிருப்போம். அதனை நினைத்து கவலைப்படுவதால் நம்மால் கடந்த காலத்திற்க்கு சென்று அதனை வெற்றியாக்க முடியுமா? என்ற கேள்வியினை உங்களுக்குள் கேட்டுக் கொள்ளுங்கள்.
உண்மையில் நாம் முடிந்துபோன விஷயத்தில் நமது நேரத்தினை வீணாக்குகிறோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். வாழ்வில் தோல்வியில் நாம் நினைக்காத அளவிற்க்கு படிப்பினைகள் உள்ளன என்பதை எப்பொழுதும் மனிதில் கொள்ளுங்கள். தோல்வியோ வெற்றியோ முழு மனதுடன் ஏற்றுக் கொண்டு அதனை முரியடிக்கவோ அல்லது காத்துக் கொள்வதற்க்கான முயற்ச்சியினை தொடங்குங்கள்.
சந்தோசம் தன்னுல்தான் இருக்கிறதென நம்புதல் : உங்கள் சந்தோசம் உங்களுக்குள்தான் இருக்கிறது என நம்புங்கள். மனிதத்தின் எதிற்பார்ப்புகளுக்கு எல்லையில்லை ஆனால் நடைமுறை எதார்த்தத்திற்க்கு நிறைய கட்டுப்பாடுகள் இருக்கின்றது என்பதினை மனிதம் உணர்ந்து எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்ளும் வரை அது உண்மையான சந்தோசத்தினை உணரயியலாது.
நீங்கள் இந்த பொருளினை வாங்கினால்தான் இந்த உறவுகள் இப்படி நடந்து கொண்டால்தான் நான் சந்தோசமாக இருப்பேன் என உங்கள் சந்தோசத்திற்க்கு கட்டுப்பாடுகள் வைக்காதீர்கள். வாழ்வில் சின்ன சின்ன விஷயங்களுக்கு கூட சந்தோசப்பட பழகிக்கொள்ளுங்கள்(பேருந்துக்கு 5 நிமிடம் தாமதமாக சென்று அந்த பேருந்தினை பிடிக்கும் போது உள்ளுக்குள் பூரித்ததுண்டா (ம) கடும் வெயிலில் நடந்து வந்து வேம்பு மரத்தின் நிழலில் அதன் ஈரக்காற்றில் சிலிர்த்ததுண்டா)
இப்படி நாம் சந்தோசப் படக்கூடிய நிறைய நிகழ்வுகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன நாம்தான் அவற்றை அடையாலம் கண்டுகொள்ள தவறுகிறோம் என்பதினை உணருங்கள்.
தியானமும் உடற்பயிற்ச்சியும்: இந்த உடற்பயிற்ச்சியும் தியானத்தையும் பயிற்ச்சி செய்வதன் மூலம் நீங்கள் மனதளவில் உடல் ரீதியாக உங்களை கட்டுப்படுத்திக் கொள்ளலாம். நீங்கள் தியானத்தில் அடுத்தவர்களை கட்டுப்படுத்துகின்ற வித்தையினை கற்றுக் கொள்ள வேண்டாம் ஆனால் உங்கள் சிந்தனையை 5 நிமிடங்கள் கட்டுப்பாடுக்குள் வைத்துக் கொள்ளும் மந்திரத்தினை கற்றுக் கொள்ளுங்கள் அது உங்கள் வாழ்வின் உண்மையான சந்தோஷத்தினை தேர்ந்தெடுக்கின்ற தெளிவினை உங்களுக்கு அளிக்கும் என்பது தின்னம்.
உண்மையான சந்தோசம் அடுத்தவர்கள் உங்களுக்கு பிடித்தவாறு நடந்து கொள்வதில் இல்லை.(ஏனெனில் அது மற்றொரு ஊண் என்பதினை நாம் மறந்துவிடுகிறோம்)
நீங்கள்
உங்களுக்கு பிடித்தவாறு நடந்து கொள்வது
உங்களுக்கு பிடித்தவற்றை செய்வது
உங்களுக்கு பிடித்தவற்றை தேர்ந்தெடுப்பது
நினைக்கின்ற உரிமையுடனும் சுதந்திரத்துடன் வாழ்வது
நல்ல உறக்கம்: இராமயணத்தில் கும்பகரனின் இறப்புக்கு காரணம் அவனை பாதி தூக்கத்தில் எழுப்பியதால் என கம்பர் எழுதுவார். அத்தகைய மகத்தானது இந்த உறக்கம் அது நமது சிந்தனையினை, எண்ணம், அசைவுகள் அனைத்தையும் கட்டுப்படுத்துகின்ற உன்னதம்.நீங்கள் இதனை கவனித்தால் உங்கள் சந்தோசம் கரையாமல் இருக்குமென்பது மறுக்க முடியாத உண்மை.
எதிர்பார்ப்பு என்னும்
எதிரியை எடுத்தெரிந்துவிட்டு
எதார்த்தம் என்னும்
எளிமையை - வாழ்வின்
தாரக மந்திரமாக்குங்கள் - இந்த
சந்தோசமென்னும் சரணாலயத்தில்
வாழ்ந்திருக்க...!
தடைகள்
தன்னம்பிக்கை இல்லாமை: நமக்குள் நம்மீது நம்பிக்கை குறையும் போது அடுத்தவர்களின் உதவியினை நாடவேண்டிவரும். நான் உதவுபவர்கள் உங்கள் எதிரி என கூறவில்லை அவர்கள் அவர்களது முதல் நண்பன் என்றுதான் சொல்கிறேன். (உங்கள் வாழ்வின் உடைமைகளை உரிமைகளை, முடிவுகளை, நீங்களே தேர்ந்தெடுங்கள் அதுதான் உங்களுக்கு உண்மையான சந்தோஷத்தைக் கொடுக்கும்.)
பயம்: நீங்கள் உடம்பில் முதுகெலும்பு இல்லாத புழுவாக இருந்தால் எரும்பு கூட உங்களை துன்புறுத்தும் அது அதன் வழியில் உங்களை வழி நடத்த ஆரம்பித்துவிடும். உங்களது பயம் தான் உங்கள் சுதந்திரத்தின் முதல் எதிரி. உங்கள் சுதந்திரம் பரிபோன பின் மனம் விரும்பும் செயலினைக்கூட செய்ய முடியாமல் இருக்கும் போது உங்கள் சந்தோசத்தின் நிலையினை நினைத்து கூட பார்க்க இயலாது(உறவுகளுக்காக முழு மனதுடன் விட்டுக் கொடுப்பது வேறு ஆனால் அது உங்கள் சுதந்திரத்தை கூண்டுக்குள் வைக்காமல் இருக்கட்டும்)
அடுத்தவர்களை பழித்தல்: இந்த நம்பிக்கை குறைவு நமக்குள் ஒரு பயத்தினை உண்டாக்கி வாழ்வின் வலிமையை சந்திக்க இயலாத தடுமாற்ற நிலையினை உருவாக்கும். இந்த இயலாமை ஆழ்மன உலைச்சலினை கொடுத்து. அடுத்தவர்களை குறை கூற ஆரம்பித்துவிடுவோம் அது நம் வாழ்வின் வெற்றிக்கு தேவையான (ம) வாழ்வின் இன்றியமையாத உறவுகளுக்கு மிகப்பெரிய தடையாகலாம்
தடையை தகர்த்தெரியும் மந்திரமாகலாம்
ஏனெனில் சில செயல்கள் உடனடியாக சந்தோசத்தினை கொடுத்தாலும்(இந்த செயல்களை நீங்கள் உங்கள் வாழ்வின் அனுபவத்தினாலோ, அடுத்தவர்களின் வாழ்வில் நிகழ்பவனவற்றைக் கொண்டோ அல்லது மற்ற ஆதாரங்களிலிருந்து அறிந்துகொள்ளலாம்) பின்னாளில் அதுவே உங்கள் மனதின் உறுத்தலாகவோ அல்லது உங்கள் சந்தோசத்தை சிதைக்கின்ற காரணியாக மாறலாம்.
நிகழ்வுகளை(வெற்றி, தோல்வி) ஏற்றுக்கொள்ளல்: வாழ்க்கையில் சில விஷயங்கள் நமது கட்டுப்பாட்டுக்குள் இல்லாமலே தோற்க்க நேரலாம். சில விஷயங்கள் நமது கட்டுப்பாட்டில் இருந்தாலும் தோற்க்க நேரலாம் அதற்க்காக கவலைப் பட்டுக் கொண்டிருப்போம். அதனை நினைத்து கவலைப்படுவதால் நம்மால் கடந்த காலத்திற்க்கு சென்று அதனை வெற்றியாக்க முடியுமா? என்ற கேள்வியினை உங்களுக்குள் கேட்டுக் கொள்ளுங்கள்.
உண்மையில் நாம் முடிந்துபோன விஷயத்தில் நமது நேரத்தினை வீணாக்குகிறோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். வாழ்வில் தோல்வியில் நாம் நினைக்காத அளவிற்க்கு படிப்பினைகள் உள்ளன என்பதை எப்பொழுதும் மனிதில் கொள்ளுங்கள். தோல்வியோ வெற்றியோ முழு மனதுடன் ஏற்றுக் கொண்டு அதனை முரியடிக்கவோ அல்லது காத்துக் கொள்வதற்க்கான முயற்ச்சியினை தொடங்குங்கள்.
சந்தோசம் தன்னுல்தான் இருக்கிறதென நம்புதல் : உங்கள் சந்தோசம் உங்களுக்குள்தான் இருக்கிறது என நம்புங்கள். மனிதத்தின் எதிற்பார்ப்புகளுக்கு எல்லையில்லை ஆனால் நடைமுறை எதார்த்தத்திற்க்கு நிறைய கட்டுப்பாடுகள் இருக்கின்றது என்பதினை மனிதம் உணர்ந்து எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்ளும் வரை அது உண்மையான சந்தோசத்தினை உணரயியலாது.
நீங்கள் இந்த பொருளினை வாங்கினால்தான் இந்த உறவுகள் இப்படி நடந்து கொண்டால்தான் நான் சந்தோசமாக இருப்பேன் என உங்கள் சந்தோசத்திற்க்கு கட்டுப்பாடுகள் வைக்காதீர்கள். வாழ்வில் சின்ன சின்ன விஷயங்களுக்கு கூட சந்தோசப்பட பழகிக்கொள்ளுங்கள்(பேருந்துக்கு 5 நிமிடம் தாமதமாக சென்று அந்த பேருந்தினை பிடிக்கும் போது உள்ளுக்குள் பூரித்ததுண்டா (ம) கடும் வெயிலில் நடந்து வந்து வேம்பு மரத்தின் நிழலில் அதன் ஈரக்காற்றில் சிலிர்த்ததுண்டா)
இப்படி நாம் சந்தோசப் படக்கூடிய நிறைய நிகழ்வுகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன நாம்தான் அவற்றை அடையாலம் கண்டுகொள்ள தவறுகிறோம் என்பதினை உணருங்கள்.
தியானமும் உடற்பயிற்ச்சியும்: இந்த உடற்பயிற்ச்சியும் தியானத்தையும் பயிற்ச்சி செய்வதன் மூலம் நீங்கள் மனதளவில் உடல் ரீதியாக உங்களை கட்டுப்படுத்திக் கொள்ளலாம். நீங்கள் தியானத்தில் அடுத்தவர்களை கட்டுப்படுத்துகின்ற வித்தையினை கற்றுக் கொள்ள வேண்டாம் ஆனால் உங்கள் சிந்தனையை 5 நிமிடங்கள் கட்டுப்பாடுக்குள் வைத்துக் கொள்ளும் மந்திரத்தினை கற்றுக் கொள்ளுங்கள் அது உங்கள் வாழ்வின் உண்மையான சந்தோஷத்தினை தேர்ந்தெடுக்கின்ற தெளிவினை உங்களுக்கு அளிக்கும் என்பது தின்னம்.
உண்மையான சந்தோசம் அடுத்தவர்கள் உங்களுக்கு பிடித்தவாறு நடந்து கொள்வதில் இல்லை.(ஏனெனில் அது மற்றொரு ஊண் என்பதினை நாம் மறந்துவிடுகிறோம்)
நீங்கள்
உங்களுக்கு பிடித்தவாறு நடந்து கொள்வது
உங்களுக்கு பிடித்தவற்றை செய்வது
உங்களுக்கு பிடித்தவற்றை தேர்ந்தெடுப்பது
நினைக்கின்ற உரிமையுடனும் சுதந்திரத்துடன் வாழ்வது
நல்ல உறக்கம்: இராமயணத்தில் கும்பகரனின் இறப்புக்கு காரணம் அவனை பாதி தூக்கத்தில் எழுப்பியதால் என கம்பர் எழுதுவார். அத்தகைய மகத்தானது இந்த உறக்கம் அது நமது சிந்தனையினை, எண்ணம், அசைவுகள் அனைத்தையும் கட்டுப்படுத்துகின்ற உன்னதம்.நீங்கள் இதனை கவனித்தால் உங்கள் சந்தோசம் கரையாமல் இருக்குமென்பது மறுக்க முடியாத உண்மை.
எதிர்பார்ப்பு என்னும்
எதிரியை எடுத்தெரிந்துவிட்டு
எதார்த்தம் என்னும்
எளிமையை - வாழ்வின்
தாரக மந்திரமாக்குங்கள் - இந்த
சந்தோசமென்னும் சரணாலயத்தில்
வாழ்ந்திருக்க...!
Subscribe to:
Posts (Atom)