ஒரு அழகான கிராமம், நன்றாக வறையறுக்கப்பட்ட தெருக்கள். அங்கு அதிகம் படிக்காவிட்டாலும் பாசத்தை மறக்காத மக்கள்.
அனுபவ அறிவினில்
- தங்களை சரியாக வழி நடத்தவும்.
- தங்கள் காலத்தை சரியாக பயன்படுத்தவும்.
- காலனிலைகளை உணர்ந்து தொழில் புரியவும் .
- உறவுகளுடன் வாழுகின்ற வாழ்வினை மட்டும் உயர்வாக
நினைக்க்கின்ற உன்னத வாழ்வையும் கற்றுக் கொண்டிருந்தனர் .
ஆனால் அவர்களது கல்வி அறிவு மட்டும் இருலாய் இருந்தது.
படிக்கவேண்டுமானால் குறைந்தது 200 இலிருந்து 300 கிலோ மீட்டருக்கு அப்பால் தங்கள் குடும்பத்தினை விட்டு பிரிந்திருந்து படிக்க வேண்டியிருந்தது. அதனால் அங்கு வாழ்கின்ற மக்கள் தனது ஆண் குழந்தையினை படிக்க வைத்தாலும் தங்களது பெண் குழந்தைகளினை 10 ஆம் வகுப்பு அல்லது வயதிற்க்கு வந்த பின் நிறுத்துவது வழக்கமாக இருந்தது.
அப்பொழுது வெளியே சென்று படித்துவந்த மாணவர்கள் சிலர் அங்கு வாழ்கின்ற மக்களுக்கு "பெண்கள் வெகுதுலைவிலிருந்தெல்லாம் படிக்க அங்கு வருவதாகவும் மேலும் அவர்கள் அங்குள்ள மக்களால் பாதுகாப்புடன் நடத்தப்படுவதாகவும் தெறிவித்தனர்" அதனை அங்குள்ள மக்கள் ஏற்றுக்கொள்ள மறுத்ததுடன் அவர்கள் முன்னோரு காலத்தில் நடந்த எதிர்பாராத விபத்தினை எடுத்துக்கொண்டு அதனை அவர்களிடம் விவரிக்க ஆரம்பித்துவிடுவார்கள்.
உண்மையில் அது எதிர் பாராத விதமாகவோ அல்லது அந்த தனி மனிதத்தின் குறைபாட்டால் நிகழ்ந்திருக்கலாம் ஆனால் அந்த
நிகழ்வால் ஒரு ஒட்டுமொத்த சமூகமே பின்னடைவை சந்தித்தது.
இது காலம் காலமாக தொடர்ந்து கொண்டே இருந்தது.
வெளியூர்களில் படித்து வரும் மாணவர்கள் விளையாட்டாக விவரித்தாலும். ஒன்றிரண்டு தைரியாமன பெற்றோர்கள் தங்கள் பெண்பிள்ளைகளின் மீது உள்ள நம்பிக்கையில் வெளியுருக்கு அவர்களை படிப்பதற்க்கு அனுப்புகிறார்கள்.
அந்த உண்மை ஆன்மாக்களின்
- நல்லொழுக்கத்தாலும்
- பின்னாளில் தங்கள் பெற்றோருக்கு உதவியவிதத்தாலும் .
அக்கிராம மக்களின் பழம்பெரும் நம்பிக்கையினை தகர்த்தெரிந்து கல்லாமை என்னும் இருளினை அகற்றுகின்ற தீபத்தின் திரிகள் தூண்டிவிடப்பட்டது. இன்று அந்த கிராமத்தில் இருந்து வெளியே சென்று படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை கனிசமாக உயர்ந்து கொண்டிருக்கிறது.
அவர்களுக்கு தெரியாமலே அம்மக்களின் வாழ்வில் இருந்த அறியாமை இருளினை விலக்கி தேவையற்ற பழம் நம்பிக்கைகளைத் தகர்க்க உதவிய தூண்டுதலாய் அவர்களின் நல்லொழுக்கமும் நன்னடத்தையும்.
No comments:
Post a Comment