Friday, 9 November 2012

வார்த்தையின் வலிமை

           ஒரு நாள், இரயில் நிலையத்தில் நான் நின்று கொண்டிருக்கையில், புதிதாக திருமணம் ஆன கணவனும் மனைவியும் அருகில் நின்று கொண்டிருந்தனர். அது மாலை நேரம் சுரியன் தனது முகத்தை மெல்ல மறைத்துக் கொண்டிருந்தது.

         கடைத் தெரு விளக்குகள் மின்மினிப் பூச்சியின் ஒளிர்வினை காட்ட தொடங்கியிருந்தன. மக்கள் கூட்டம் எப்பொழுதும் போல இல்லாமல். சற்று குறைவாகவே காணப்பட்டது அப்பொழுதுதான் புது மன ஜோடி பேசிச் சிரித்ததுக் கொண்டு தங்கள்  உலகம் மறந்திருந்தனர்.

         எப்பொழுதும்  மிகக் குறைந்த வேகத்தில் வந்தது நிற்கும் தொடர்வண்டி அன்று மட்டும் சற்று வேகமாக வருவது போல் தோன்றியது.   அந்த இருவரும் அதனை கவனிக்கவில்லை மேலும் அவர்கள் நின்று கொண்டிருந்தது பாதுகாப்பு கோட்டிற்க்கு அப்பால்.

         மற்றவர்கள் அதனை கவனிக்காவிட்டாலும் அந்த சிறுவன் அதனை பார்த்து விட்டு   "அம்மா Train  வேகமாக வருகிறது ஒதுங்குங்கள் என கத்தினான்".  அதனை உணர்ந்து கொண்ட அந்தக் கணவர் தன் மனைவியின் கையினை பிடித்திழுத்து  பாதுகாப்பு எல்லைக்குள் கொண்டுவந்தார்.  அந்த இருவரின் முகத்திலும் அதிர்ச்சியிலும் பயத்திலும் வழிந்தோடிய வியர்வைத் துளிகள்.

       ஒரு அன்னை தனது சொந்த குழந்தையை பார்ப்பது போல் அந்த தாய் அந்த சிறுவன் முகத்தையே பார்த்து வருகிறாள் தான் இறங்கும் இடம் வரும் வரை.  இங்கு அந்த சிறுவனின் வார்த்தைகளின் வலிமை ஒரு உயிரினை (ம) அவர்களது சந்தோசத்தினைக் காப்பாற்றும் அளவிற்க்கு மகத்துவமாகியது  இங்கே.

No comments:

Post a Comment