ஒரு மனிதர் தனது . தோட்டத்தில் உள்ள கிணற்றில் அடிக்கடி இறங்கி அங்கு பொறுத்தப்பட்டிருக்கும் மோட்டரினை பழுது பார்த்தது விட்டு மேலே ஏறி வருகின்ற பழக்கமுள்ளவர்.
பல வருடங்கள் இது அடிக்கடி நடக்கின்ற நிகழ்வாக இருந்து வந்தது. அன்று அவருக்கு வயது நாற்ப்பது இருக்கும். எப்பொழுதும் போல பழுதடைந்த மோட்டரினை பழுதுபார்க்க .இறங்கியவர் அந்த பனியினை முடித்தது மேலே ஏறி வருவதற்க்கு எத்தனிக்கிற பொழுதில் அவரது வயது முதிர்வால் இரண்டு முறை தவறி கீழே விழுந்துவிடுகிறார்.
இதனை அறிந்து கொண்ட இளைஞ்சர் கூட்டம் அங்கு சென்று அவருக்கு மேலே ஏறுவதற்க்கு பல விதமாக முயற்ச்சித்தார்கள் கயிறினில் மரத்தால் ஆன கோலினை அந்த கயிரினில் கட்டி ஏணி மாதிரி ஏறுவதற்க்கு உதவினார்கள்.
ஆனால் அதனை பயன்படுத்தி மேலே வர நினைத்தவர் காலில் இருந்த ஈரமான மண்ணில் வழுக்கி கீழே விழுகிறார். இந்த முறை அவர் மூர்ச்சையானார். அங்கு இருந்த கூட்டம் அவரை வேறு விதமாக மேலே கொண்டுவருதர்க்கு தயாரானார்கள்.
அதற்க்குள் கண் விழித்துக் கொண்டவர். இதனை கேட்டுவிட்டு அதெல்லாம் வேண்டாம் அந்த கோல்களை எடுத்து விட்டு வெறும் கயிரினை அனுப்பு என்கிறார். அதற்க்கு அங்குள்ள மக்கள் கூட்டம் வேண்டாம் என அது உங்கள் உயிருக்கு ஆபத்தாக அமைந்துவிடும் என கத்தினார்கள்.
அவர் அமைதியாக கயிரினை போடுங்கள் என்றார். சில நிமிடங்கள் யோசித்தவர் கயிரினை பிடித்து மல மல என மேலே ஏறி வந்தார் எல்லோரும் அதிர்ந்து போயிருந்தார்கள். அவர் அங்குள்ள இளைஞ்சர்களிடம் சொன்னார்
"சில நேரங்கலில் நாம் சில தோல்விகளைப் பார்த்தவுடன் நமது மனம் நம்மால் முடியாது என நினைக்கும் அதையே உலகமும் உரைக்கும் அதனை நம்பி உங்கள் தன்னம்பிக்கயை இழக்காதீர்கள். வாழ்வில் உங்கள் எதிர் திசையில் வலுவான காற்று வீசும்போது அதில் உங்கள் மனத்தினை உறமாக்கிக் கொள்ளுங்கள் உங்கள் எதிர் காலத்தின் வலிமையை சந்திக்கவும் (ம) சமுதாயம் தரும் இடையூருகளை எடுத்தெரியவும்."
எனக்கு தெரியும் எத்தனை முறை இந்த ஏறி இறங்குகின்ற வலியினை நான் கடந்திருக்கிறேன் என்று அதில் வலுவடைந்த மனமும் அதன் அசைக்க முடியா நம்பிக்கைதான் இன்று என்னை வெளியே கொண்டு வந்தது.
"தாயின் கருவரை உலகத்திலே மிகவும் பாதுகாப்பான இடம் என்பதற்க்காக ஆயுள் முழுவதும் அங்கேயே இருக்க முடியுமா இந்த மண்ணில் விழுந்து முட்டிகள் தேய்ந்து கிடைத்த வலிமையில்தானே நம் வாழ்வின் ஒவ்வொரு படியும் நகர்கிறது."
No comments:
Post a Comment