Tuesday, 11 December 2012

ஆளுமைத்தன்மையினை தாண்டிய மனித நேயம்

         அது தீபாவளியை ஒட்டிய ஒரு நாள். பேருந்தில் என்றும் இல்லாத அளவிற்க்கு அதிகமான கூட்டம். அந்த நெரிசலில் சிக்கிக் கொண்டு திணறிய பயணத்தில் டிரைவரின் எதிர்பாராத பிரேக்கில் ஒரு சிலர் தடு மாறி கீழே விழுந்து எழுந்தனர்.

        அந்த நிலையாமை முடிந்து இயல்பு நிலைக்கு திரும்பிய அடுத்த கணம் இந்த மரண ஓலம் ஒலித்தது "எனக்கு இருந்த ஒரே மகனை கொன்று விட்டாளே என" கத்திய ஒரு தாயின் துயரக்  குரல் கேட்டு துடித்த இதயங்கள் குழந்தையின் முகம் பார்க்க.

        அதன் கண்கள் உயரே சென்று இருந்தன. மூர்ச்சையான நிலை அங்கிருந்தவர்களால் தண்ணீர் கொடுக்கப்பட்டது. பேருந்து அந்த இடத்திலேயே நிறுத்தப்பட்டு அந்த குழந்தையும் தாயாரும் இரு சக்கர வாகனத்தில் அனுப்பி வைக்கப்பட்டார்கள்.

         இது நடந்து கொண்டிருக்கையிலே அந்த தாயின் தாயார் எங்கே அந்த கொல காரி எனது மாமா S.I ஆக இருக்கிறார் நான் அவளை சும்மா விட மாட்டேன் என ஆக்ரோஷ்மாக கத்த ஆரம்பித்துதார்.

         பயணிகளின் மறைவில் நின்றிருந்த பெண்மணியின் கண்களில் இருந்து கண்ணீர் பொல பொலவென சரிந்தன நான் முன்னமே குழைந்தை இல்லாத வலியில் வாழ்பவள் நான் எப்படி இன்னொரு குழந்தையை கொள்வேன்.

         பிரேக்கு அடிக்கப்பட்ட  நிமிடத்தில் சற்று நிலை தடுமாறி அவர்கள் மீது லேசாக சாய்ந்துவிட்டேன் அவ்வளவுதான் என தேம்பித் தேம்பி அழ அங்கிருந்தவர்கள் நிலைமயை புரிந்து கொண்டு அந்த பெண் மணியை அந்த பக்கமாக செல்ல சொல்லிவிட்டு அவள் ஆங்கேயே இறங்கிவிட்டதாக கூறிவிட்டார்கள்.

        அதன்பிறகு ஆக்ரோசமாடைந்த தாய் மருத்துவமனைக்கு முன் இறங்கி விசாரிக்க அந்த குழந்தை நன்றாக இருப்பதாகவும் அது  மூச்சடைப்பால் ஏற்ப்பத்ததல்ல உள்ளுக்குள் அந்த குழந்தையின் உடல்நிலை பதிக்கப்பட்டிருந்ததாகவும் தெரியவந்தது.

        இங்கு காவல் துறை என்னும் ஆளுமைத்தன்மை மேலோங்கியிருந்தாலும். மனிதத்தில் இன்றும் உயிருடன் இருக்கின்ற மனித நேயத்தில் காக்கப்படுகின்ற வலிமை குறைந்த ஊனின் வாழ்வும்  அது ஆளுமைத்தன்மையை விட உன்னதமானது என்பதும் விளங்கும்.

No comments:

Post a Comment