Monday, 19 August 2013

ஏதார்த்தமும் எளிமையும்

        ஒரு நாள்; ஓர் அலுவலகத்தில் சிறப்பு விருது வழங்கும் விழா மேடையில் சில வெற்றியாலர்கள் குழுமியிருக்க அங்கே, வந்தவர்களிடம் விழாவின்  தலைவர் அவர்கள் ஒரே கேள்வியினை பலரிடமும் கேட்டார். உங்கள் வெற்றிக்கு வழி காட்டி யார் என்று.

      அதற்கு பலரும் தங்கள் துறையில் தலை சிறந்த தலைவர்களையும் மேதைகளையும் அடிக்கிக் கொண்டு, அவர்களது புகழ் பாடிக் கொண்டிருக்கையில். அம்மையார் ஒருவர் சொன்னார்.

     எனது அன்றாட வாழ்வினில் நான் கண்டு உள்வாங்கிக் கொண்ட எனது தந்தையார் செயல் தொடங்கி என் அன்றாட வாழ்வில் நான் உயர்வாய் நினைக்கின்ற ஒவ்வொரு ஜிவனும், காயத்தால் என்னை கடினப்படுத்திய எனது தோல்விகள், வெற்றியின் வீரியத்தில் அறிந்து கொள்ளா பாதை வழி.

      இப்படி  எத்தனை எத்தனையோ ஊக்கங்களும் அதில் ஒளிந்திருந்த உற்ச்சாகமும்,  எனக்கு வழி காட்டியது என்றார். அதற்கு அங்கிருந்தவர்கள் சிரித்ததுக் கொண்டு அப்புறம் எப்படி அம்மையார் இந்த துறையில் சாதிக்க முடிந்ததாம் என்றார்கள் கிண்டலும் கேலியுடன்.

      அதற்கு அவர் ஆமாம் நான் எனது துறையில் சிறந்து விளங்கிய தலைவர்களின் புத்தகங்களை படித்திருக்கிறேன் அவைகள் என்னை பக்குவ படுத்தியிருக்கின்றன. ஆனால் தண்ணீரும் கல்லும் சேர்த்து சுடுகின்ற கலவையாய் உருவாக்க முடியுமா என கேட்டாள்?

     என் தந்தையார் எனது வீட்டிற்கு  சுண்ணாம்பு அடிக்க கிளிஞ்சல்களை தண்ணீருடன் கலக்கிய கலவைதான், என் கண் முன்னே தோன்றும் அதுதான் நான் முடிவெடுக்க வழிகோலும். இந்த உள்ளுணர்வுகள் நான் விரும்பி ஏற்றுக் கொண்ட மாற்றங்கள் (ம) தடுமாறிய தருணங்களில் வந்த தாக்கங்கள், என வாழ்வின் ஒவ்வொரு நொடிப் பொழுதிலும் நான் அறிந்து கொண்ட எளிமையும் எதார்த்தமும்தான்  என்னை வழி நடத்தியது என நம்புகிறேன் என்றார்.

     அங்கிருந்த கூட்டத்தின் சல சலப்பு நின்று போனது,  நடுவர் வாயசைக்க தொடங்கினார் இங்கிருக்கின்ற நிறைய வெற்றியாளர்கள், நிறைவான காரணங்களைச் சொன்னாலும்.  எளிமை என்கின்ற எதார்த்தத்தின் அழகும் அது தருகின்ற ஆழ்மன  நிம்மதியின் மகத்துவமும் நிச்சயம்; நாம் எல்லாரும் விரும்புகின்ற விருட்சம்தான் என முடிக்கின்றார் புன்னகையுடன்.

Sunday, 11 August 2013

உள் மன அமைதியின் மகத்துவம்

       ஒரு ஊரில் மன அமைதியுடன் நிம்மதியாக வாழ வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர், செய்வதறியாது தடு மாறிக் கொண்டிருந்தார் எல்லோரும் தன்னை எதிர்ப்பதாகவும், என்னால் ஏன் மற்றவர்களுடன் ஒத்து போக முடிவதில்லை. இயல்பாகவே எனது நடத்தையில் ஏதேனும் மாற்றம் தேவையா என்ற சிந்தனை, என பல்வேறு வகையான எண்ணங்களில் மன உலைச்சலுக்கு ஆலாகியிருந்தார்.

      இந்த மனப் போராட்டத்தில் வாழ்வின் சந்தோச நிமிடங்கள் குறைவதாக மட்டும் உணர்ந்திருக்கையில்,  பலரிடம் கேட்டும் பலனில்லாமல் பாதை நகர்ந்து கொண்டிருக்கையில்.

      ஒரு நாள் ஒரு முதியவரை ஏதார்ச்சியா தான் பயணம் செய்த பேருந்தில் பார்க்கிறார். அன்று அவருக்கு தெரிந்திருக்காது அது அவர் வாழ்வின் பாதையை மற்ற வந்த முக்கிய மூன்று மணித்துளிகள் என்று.

      அப்பொழுது அவர்கள் பேசிக் கொண்டிருக்கையில், இவர் தனது மன உலைச்சலைப் பற்றி சொல்ல அந்த பெரியவர் சிரித்ததுவிட்டு கூறினார்.
தம்பி நம் உடல் உருவாக்கும் நிழலை விட குறைந்த தொலைவில் நம்முடனே இணைந்திருக்கும் நம் உடலும் மனமும் சில நேரத்தில் நாம் சொல்வதைக் கேட்பதில்லை.

      நீ வெளியில் இருக்கின்ற, என்ன நோக்கத்துடன் படைக்கப்பட்டதென்று தெறியாத ஒன்று என்னை எதிர்க்கிறது, நான் சொல்வதை கேட்பதில்லை என நினைத்து வருத்தப்படுகின்றாய். ஒன்றினை மட்டும் நினவில் வைத்துக்கொள் உனக்கு சாதகமான சூழலினை உனக்குள் மட்டும்தான் உருவாக்க முடியும் அது வெளியுலகில் தேடி கிடைப்பதில்லை.

      மற்றவர்களை உனக்கு சாதகமானவர்காளாக மாற்ற நினைக்காதே உந்தன் எண்ணங்களின் அலைவரிசையில் படைக்கப்பட்ட ஜீவன்கள் வாழுகின்ற சூழலில், உனக்குள் சின்ன சின்ன மாற்றங்களை உருவாக்கி  அதில் உன்னை வழி நடத்தக் கற்றுக்கொள், அதுவே உனக்கு சந்தோசாமாக வாழுகின்ற சூழலினைக் கொடுக்கும் என்றார்.

      இந்த மனிதர் தான் செய்து கொண்டிருந்த தவறினை உணர்ந்து, தன் உள் மன சூழலினை சரி செய்கின்ற செயலினை [Inner Engineering]
தொடங்கி. இன்று சந்தோசாமான வாழ்வினை வாழ்த்து கொண்டிருக்கிறார்.

      நாம் கற்றுக் கொண்ட பின் வாழத்தொடங்கவில்லை தவறுதல்
நடக்காமல் இருப்பதற்க்கு, நீங்கள் உங்களுக்குள் எற்படுத்துகின்ற மாற்றங்கள் உங்களுக்கு மன நிம்மதியினையும் சந்தோசாத்தையும் கொடுப்பதாக இருக்கட்டும்.