ஒரு நாள்; ஓர் அலுவலகத்தில் சிறப்பு விருது வழங்கும் விழா மேடையில் சில வெற்றியாலர்கள் குழுமியிருக்க அங்கே, வந்தவர்களிடம் விழாவின் தலைவர் அவர்கள் ஒரே கேள்வியினை பலரிடமும் கேட்டார். உங்கள் வெற்றிக்கு வழி காட்டி யார் என்று.
அதற்கு பலரும் தங்கள் துறையில் தலை சிறந்த தலைவர்களையும் மேதைகளையும் அடிக்கிக் கொண்டு, அவர்களது புகழ் பாடிக் கொண்டிருக்கையில். அம்மையார் ஒருவர் சொன்னார்.
எனது அன்றாட வாழ்வினில் நான் கண்டு உள்வாங்கிக் கொண்ட எனது தந்தையார் செயல் தொடங்கி என் அன்றாட வாழ்வில் நான் உயர்வாய் நினைக்கின்ற ஒவ்வொரு ஜிவனும், காயத்தால் என்னை கடினப்படுத்திய எனது தோல்விகள், வெற்றியின் வீரியத்தில் அறிந்து கொள்ளா பாதை வழி.
இப்படி எத்தனை எத்தனையோ ஊக்கங்களும் அதில் ஒளிந்திருந்த உற்ச்சாகமும், எனக்கு வழி காட்டியது என்றார். அதற்கு அங்கிருந்தவர்கள் சிரித்ததுக் கொண்டு அப்புறம் எப்படி அம்மையார் இந்த துறையில் சாதிக்க முடிந்ததாம் என்றார்கள் கிண்டலும் கேலியுடன்.
அதற்கு அவர் ஆமாம் நான் எனது துறையில் சிறந்து விளங்கிய தலைவர்களின் புத்தகங்களை படித்திருக்கிறேன் அவைகள் என்னை பக்குவ படுத்தியிருக்கின்றன. ஆனால் தண்ணீரும் கல்லும் சேர்த்து சுடுகின்ற கலவையாய் உருவாக்க முடியுமா என கேட்டாள்?
என் தந்தையார் எனது வீட்டிற்கு சுண்ணாம்பு அடிக்க கிளிஞ்சல்களை தண்ணீருடன் கலக்கிய கலவைதான், என் கண் முன்னே தோன்றும் அதுதான் நான் முடிவெடுக்க வழிகோலும். இந்த உள்ளுணர்வுகள் நான் விரும்பி ஏற்றுக் கொண்ட மாற்றங்கள் (ம) தடுமாறிய தருணங்களில் வந்த தாக்கங்கள், என வாழ்வின் ஒவ்வொரு நொடிப் பொழுதிலும் நான் அறிந்து கொண்ட எளிமையும் எதார்த்தமும்தான் என்னை வழி நடத்தியது என நம்புகிறேன் என்றார்.
அங்கிருந்த கூட்டத்தின் சல சலப்பு நின்று போனது, நடுவர் வாயசைக்க தொடங்கினார் இங்கிருக்கின்ற நிறைய வெற்றியாளர்கள், நிறைவான காரணங்களைச் சொன்னாலும். எளிமை என்கின்ற எதார்த்தத்தின் அழகும் அது தருகின்ற ஆழ்மன நிம்மதியின் மகத்துவமும் நிச்சயம்; நாம் எல்லாரும் விரும்புகின்ற விருட்சம்தான் என முடிக்கின்றார் புன்னகையுடன்.
No comments:
Post a Comment