Saturday, 14 September 2013

நட்பின் நரம்புகளும் சந்தோசத்தின் உறைவிடமும்

         ஒரு நாள் எனது நண்பர் ஒருவர், தனது நண்பருடன் பொருட்கள் வாங்குவதற்க்கு சென்றிருந்தார். அங்கு சென்ற எனது நண்பர் எனக்கு அது வேண்டும் இது வேண்டும் என எடுத்‌துக் கொண்டிருக்க அவரது நண்பர் ஓர் இரு பொருளை எடுத்துவிட்டு நான் முடித்துவிட்டேன் என கூறினாராம்.

       அதற்கு எனது நண்பர் என்னடா காசு இல்லையா வேண்டியதை எடுத்துக்கோ அப்புறமா திருப்பி கொடு, நான் பணம் கொடுக்கிறேன் என்றாராம் அதற்கு மற்றொருவர் எனக்கு தேவையில்லை. நீ உனக்கு தேவையானவற்றை எடுத்‌துக் கொண்டு வா என பொன் சிரிப்புடன் கூறிவிட்டு அங்கிருக்கும் பொருட்களின் தரம் மற்றும் விலையினை விசாரிக்க ஆரம்பித்தாராம்.

       இந்த மற்றொறு நண்பர் தனக்கு தேவையான இன்னும் சிலவற்றை எடுத்‌துக் கொண்டு போகலாம் என்றாராம்.   அப்பொழுது அவர் நண்பர் இவரது அருகில் வந்து தனது பர்சில் இருந்த பணத்தினை எடுத்துக் கொடுத்தாராம், இது நான் முன்னமே உன்னிடம் வாங்கியதுதான்.

       அப்பொழுது அவர் சொன்னாராம் நீ நெனைக்கிற மாதிரி எனது சந்தோசம் இந்த பர்சுக்குள்ளேயோ அல்லது அந்த பொருளோடோ ஓட்டியிருக்கவில்லை நண்பா!.

        அது நான் வாழ்கின்ற வாழ்வில் நான் பழகுகின்ற உன் நட்பில் இருக்கிறது, வருமானம் குறைவெனினும் எனது வருவாயில் வாழுகின்ற துணிவில் இருக்கிறது,

       இறைவன் எனக்கு உன்னை போன்ற நல்ல மனம் படைத்த நண்பர்களை கொடுத்திதிருக்கிறார், சின்ன சின்ன ஆசைகள் இருந்தும் அளவாய் வாழ யோசிக்கின்ற நல்ல உறவுக்ளை கொடுத்திதிருக்கிறார் என கூறினார்.

      இந்த நண்பர் காலப்போக்கில் தான் அடைந்திருந்த மாற்றத்தை உணர்ந்து கன்னத்தில் அறைந்தார் போல அதிர்ச்சியில் நின்றிருக்க, அதையெல்லாம் விடுடா என தனது பழங்க்கால சுவாரசியமான நிகழ்வுகளுக்கு கொண்டு சென்றாராம்.

      எது புரிந்ததோ இல்லையோ எனது நண்பருக்கு ஒன்று மட்டும் தெளிவாக தெரிந்ததாம், நாம் எல்லோரும் விரும்புகின்ற இந்த சந்தோசம் எதனுடனும் ஓட்டியிருக்கவில்லை அது நம் எண்ணங்களின் அலைவரிசையில் இருக்கிறது அதில் நாம் ஏற்படுத்துகின்ற ஒழுக்கத்தில் இருக்கிறது. இது மட்டும் ஒழுங்குபடுத்தப் பட்டால் உலகத்தில் ஏற்றத்தாழ்வு என்ற வரம்பினை ஏற்ப்படுத்தும் ஊன்கள்  கூட யோசிக்கும் என்பது தின்னம்...

No comments:

Post a Comment