Sunday, 30 November 2014

நிறைவானதாய் நிலைத்திருக்கும் நிம்மதி

          வாண்டுகளின் வழித்தடங்களுக்கிடையில் இளைப்பார அமைக்ககப்பட்ட இருக்கையில் நடை தளர்ந்த நரைமுடியுடன் அமர்ந்திருந்த முதியவரும் அவர் தோள் சாய்ந்தபடி கண் கலங்கியிருந்த அவரது துணைவியும்.

          தூரத்தில் விளையாடிய சிறுவர்களின் பந்து அவர்களது காலடியில் வந்து விழுந்தது. அங்கு அதனை எடுக்கச் சென்ற சிறுவன் பந்தினை, அவனது நண்பர்களிடம் எரிந்துவிட்டு. ஏன் தாத்தா பாட்டி அழுறாங்க  ஏதாவது பிரச்சனையா என்றான் .

        அதுக்கு அவர்கள் பிரச்சனையெல்லாம் ஒன்றும் இல்லைப்பா.. இன்று எங்களுக்கு திருமணமாகி 40 வருடம் ஆகின்றது, இன்று எங்கள் திருமண நாள் அதான் காலையில கோயிலுக்கு போயிட்டு இங்கே வந்தோம், வேற ஒன்றும் இல்லப்பா நீ போயி விளையாடு என்றார்கள்.

        அந்த சிறுவன் அந்த பாட்டியிடம் என்ன பாட்டி தாத்த உங்களை சந்தோசமா/வசதியா வைச்சிருக்களையா அழுகுறிங்க. பாட்டி, வசததியாவா இவரான்னு ஒரு இழு இழுத்தார்... அரசாங்க உத்தியோகம் நிதித்- துறையிலதான் இருக்கருன்னு பேரு, ஆயுள் முழுக்க வாடகை வீடுதான் என ஆரம்பித்து பட்டியளிட்டார்.

        அதற்கு அந்த பெரியவர் தங்கள் வாழ்வில் நடந்த இரண்டு முன்று சம்பவங்களை கூறி இந்த மாதிரி சின்ன சின்ன தவறு செய்திருந்தாலும்
கூட வசதியா வாழ்ந்திருக்கலாமில்ல அன்றெல்லாம் என்னை தடுத்துவிட்டு இன்றைக்கு குறை சொல்கிறாய் என்றார் சற்று ஆவேசத்துடன்.


       இவர் இந்த மாதிரி  பட படனு பேசுவாரு ஆனா யாருக்கும் எந்த தீங்கும் செய்யமாட்டார், எந்த தருணத்திலும் இந்த தோள் என்னை தோற்கடித்ததே இல்ல தம்பி, அதுதான் என் வாழ்வில் எனக்கு கிடைத்த மிகப் பெரிய நிம்மதி தம்பி என்று கூறி அவரது கண்ணீர் அதிகமாகியது.


        இந்த மாதிரி அவளுக்கு எத்தைனையோ எதிர்பார்ப்புகள் இருந்தும், சிறு சிறு தவறுகள் செய்யாமல் அத்தகைய வருமானம் வராது என தெரிந்தும் அவள் என்னை சிறு தவறு  கூட செய்ய விட்டதில்லை அது தான் இன்றைக்கும் எனக்கு மிகப் பெரிய நிம்மதியை கொடுத்திருக்கு.


        இறுதியாக அந்தப் பெரியவர் "ஆயிரம் பேரைக் கொன்று
அரியனையில் அமர்ந்து அரை நிமிடம் கூட நிம்மதியாய் இல்லாத வாழ்க்கையை விட. பிறருக்கு தீய்மை செய்யாத நிம்மதியை இப்பிறப்பு முழுவதும் நிரப்புகின்ற கொள்கையுடவன் நான் என்றார்". சிறுவன் ஒரு நிமிடம் தன் புருவம் உயர்த்தி, ஏதோ சிந்திப்பதாய் அவ்விருவரிடமும் வருகிறேன் என கூறி அவ்விடம் விட்டு நகர்கிறான்.


       மாறிவரும் கலாச்சாரத்தில் மண்ணின் மணத்துடன் வாழ்ந்திருந்த தம்பதியினர் எற்றி வைத்த சிறு அகல் விளக்கு என நம்புகிறேன்,
கடலுக்குள் எல்லா கப்பல்களும் ஒரே திசை நோக்கி படையெடுக்க வைத்த கலாச்சாரம், இன்று கானடிந்து கொண்டிருக்க அத்தி பூத்தர் போல நம் மனச் சிந்தனைகளை கிளர்வதாய் இம்மனத் தம்பதியினர் வாழ்வு.

Thursday, 28 August 2014

வெற்றிக்கு உதவாத உணர்ச்சி வசப்படுதலும் (ம) உண்மையான உணர்வில்லாமையின் சங்கடமும்

       ஒரு அழகான கிராமத்தில், அன்பான அண்ணன் தம்பிகள் இருவர் வசித்து வந்தனர், பழமொழிக்கு ஏற்றார் போல் சிறு வயது பருவம் வரை. வயது முதிருவடைந்த பின்  சொத்துக்காக இருவரும் அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டதுண்டு  ஆனாலும் இருவரும் ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுப்பதில்லை.

      ஊர் நல்ல அண்ணன் தம்பிகள் என கூறும் அளவிற்கு ஒற்றுமையுடன்  இருந்தனர். ஒரு நாள் அவர்களது மனைவிகளுக்கு நடுவில் ஏற்ப்பட்ட சண்டையில். தம்பி கடப்பாரையால் அண்ணனின் நெஞ்சினில் குத்தி; அண்ணன் அவ்விடத்திலே இறந்து விடுகிறான். அந்த விபரத முடிவிற்கு காரணம் வீட்டிற்கு தண்ணீர் எடுப்பதுதான்.

      அந்த நொடிப்பொழுதில் அதனை அறியாமல் செய்து விட்டு சிறை, வழக்கு என அவரது மீதி வாழ்க்கை சுக்கு நூறாகிப் போனது. எல்லோரும் கேட்டதற்கு இளையவன் கூறிய காரணம், முன்பு ஒரு முறை என்னை கத்தியால் வெட்டிவிட்ட சம்பவத்தை கூறி அவன் கை ஒங்கிய வேகத்திலும், பயத்திலும் நான்  கடப்பாரையை எடுத்து குத்தி விட்டேன், குத்திய பின் தான் எனக்கு தெரிய வந்தது அவன் ஒங்கியது வெறுங்கை என்று.

       மன ஆரச்சியாலர்கள் சொல்வார்கள், நமது நினைவு இரண்டு விதங்களில் வகைப்படுத்தப்படுவதாய்.  ஒன்று சாதாரண நினைவு(ஹிப்போகேம்பஷ்) இது அறிவின் மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது மற்றொன்று உணர்வின் நினைவுகள் (அமிக்டலா). சில நேரங்களில் இந்த உணர்வின் நினைவுகள் அனிச்சை செயலாய் நம்மை ஆட்கொண்டுவிடும்.

         என்னதான் நம்மிடம் நுன்னறிவு அதிகமாக இருந்தாலும் தன்னையும் தன் உணர்ச்சிகளை நேர்த்தியாக கையாலுவது, பிறரது ஊணர்வுகளை அறிந்து கொண்டு நடக்கும்  திறமை நம்மிடம் இல்லையெனில் அது நம் வெற்றிக்கு மிகப் பெரிய முட்டுக்கட்டை ஆகிவிடும்.

       இதுபோன்று நமது உணர்ச்சிகளை நேர்த்தியாக கையாலும் திறன் தேவைப்படுவது ஒரு புறமிருக்க...

        வாழ்வில் சிறு வயதில் கடினப்பட்டு படித்து முன்னேறிய ஒரு உன்னதமான மனிதர் மேடையில் ஏறி அங்கு குழுமியிருந்த மாணவர்களுக்கு தான் சேர்த்து வைத்த மதிப்புகளையும், நற்பண்புகளையும் கொட்டி விட்டு, தாய் தந்தையை மதித்து நடக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்க

       ஒரு மாணவன் எழுந்து ஐயா! உங்கள் அப்பா அம்மா எங்கே இருக்கிறார்கள் என்று கேட்க.. எனது தந்தை நான் சிறுவதில் இருக்கும் பொழுதே இறந்துவிட்டார். எனது தாயார் மட்டும் சர்க்கரை வியாதி அதிகமானதால் ஒரு கால் எடுக்கப்பட்டு ஆசரமத்தில் இருக்கிறார்கள் என்றார்

       அதற்கு அந்த சிறுவன், அய்யா கார்ல எல்லாம் வருகிறீர்கள் உங்கள் அம்மாவை உங்களால் பார்த்துக்கொள்ள முடியாதையா என்றான். அந்த மனிதரின் கண்களில் தண்ணீர் பொல பொல என சரிந்தன மறு வார்த்தையை கூட பேசாமால் மேடையில் இருந்து இறங்கி அவ்விடத்தை விட்டு அகன்றார். அவரது குடும்பத்திற்கு இருக்க வேண்டிய உண்மையான உணர்வின் குறைபாட்டில் வந்த சங்கடம்.

      வல்லுநர்கள் "வாழ்வில் மிக உயர்ந்த நிலைக்கு சென்றவர்கள் தங்கள் உணர்ச்சிகளை நேர்த்தியாக செயல்படுத்தியிருப்பதையும், அவர்கள்
மற்றவரது உணர்வகளை புரிந்து நடந்தவர்கள் என உறுதி செய்திருக்கிறார்கள்".

       உணர்ச்சி வசப்படுவது இன்று நமக்கு உதவாது...  அதனை புரிந்து நடந்து கொள்ள (ம) மற்றவர்களின் உணர்வுகளை அறிந்து நடந்து கொள்ள முயற்சி செய்வோமானால்.  நிம்மதி நிழலாய், வெற்றி விடியலாய் நம்மை தொடருமென்பது  நிச்சயம்...

Wednesday, 9 April 2014

தேவையற்றவை தேவையற்றவையே அது அத்தியாவசியம் ஆகும் வரை

          ஒரு நாள் ஒரு வயதான முதியவரும் நான்கு இளைஞர்களும் ஒரே இரயில் பெட்டியில் பயணம் செய்து கொண்டிருந்தனர். முதலில் அவர்கள்; அவர்கள் எடுத்துவந்த அலை பேசியில் பேசுவது, பாடல்கள் கேட்பது என்றுதான் அப்பயணம் தொடங்கியது
              
        அந்த பயணம் தொடங்கிய ஓர் இரு மணி நேரத்திற்குள் அனைவரும் அவர்கள் கொண்டுவந்த தொழில் நுட்ப கருவிகளில் சலித்து
போயிருந்தனர். அப்பொழுது அங்கிருந்த ஒருவரை பார்த்து நீ என்னப்பா செய்கிறாய் என கேட்டார். அதற்கு அவர் நான் இராணுவத்தில்தான்
வேலை செய்கிறேன் என்றார்.

        என்ன தம்பி இவ்வளவு சலிப்பா சொல்லுற, பின்ன என்னங்கையா நாங்க எங்கள் பிள்ளை, மனைவி எல்லாத்ததையும் விட்டுட்டு
காடு, மலை, பனின்னு பார்க்காம உழைக்கிறோம் யாருங்கையா எங்களையெல்லாம் மதிக்கிறது.

        மரியாதையெல்லாம் உள்ளுரிலே இருந்துகிட்டு தவறே செய்து சம்பாரித்தாலும் காருல போரவனுக்குதான மரியாதை, ஏதோ அந்த குடியரசு தினம், சுதந்திர தினம் என இரண்டு நாட்களில் மட்டும்தான் எங்களைப்பற்றி செய்தித்தாளில் வரும், எங்காவது எங்களில் நாலு பேர் செத்தா செய்தியா போடுவாங்க.

        நாங்கள் என்ன தியாகம் செய்தாலும் எங்கள் உயிரையே காசுக்கு விக்குறாங்க நம்மை ஆட்சி செய்பவர்கள். எங்களுக்கு கிடைக்கிற சம்பளத்தில் எங்கக பிள்ளைகளை நல்ல இடத்தில படிக்க வைக்க கூட முடியல, என அடுக்கி கொண்டே இருந்தார். அந்த பெரியவர் சரி தம்பி என்னதான் உன் ஆசை..!

      குடும்பத்தோட இருக்கனும், நல்ல சம்பாதிக்கனும், கார் வங்கனும், வீடு கட்டனும், எனுக்கு கல்யாணம் ஆயிடுச்சு இரண்டு குழந்தையும் இருக்கு அய்யா, அப்புறம் ஏதாவது நாலு பேருக்கு நல்லது பண்ணி நாலு பேருக்கு உதவியாக இருக்கனுமையா.

        அதற்கு அந்த பெரியவர் குறுக்கிட்டு அதை தான் நீ இப்ப செய்துக்கிட்டு இருக்கிறப்பா என்றார், அப்புறம் அந்த பெரியவர், நமக்கு சந்தோசம் தரும் உறவுகளையும்/உடைமைகளையும் நாம் நிர்ணயிக்கவும், கட்டுப்படுத்தவும் முடியாது.  அது நம்மை கேட்டுவிட்டு நம்முடன் இருப்பதில்லை,

        நாம் அடைய நினைக்கும் உடைமைகளும்/உறவுகளும் நமக்கு நீண்ட சந்தோசத்தை கொடுக்குமா அது நமக்கு தெரியாது.   இப்படி தெரியாத விசயங்களில் நமது வாழ்க்கையின் நிமிடங்களை வீணடிப்பதற்கு பதிலாக, உங்களுக்கு சந்தோசம் தரும் பணியினை முழு மனதுடன் செய்து கொண்டே இருங்கள் அது உங்கள் வாழ்வின் உயர்வுக்கு வழி வகுக்கும் என்றார்.

       அந்த இளைஞ்சர்கள் வந்துட்டாருடா வாத்தியாரு என தங்களுக்குள் கிண்டல் பேசிக்கொண்டு, நாங்கள் இராணுவத்தில் இருந்த வருகையில் மதுபானம் வாங்கி வந்திருக்கிறோம் உங்களுக்கு வேண்டுமா என்றனர்.

      அதற்கு அவர் இதனை குடித்தால் எல்லாத்தையும் மறப்போம் என்பார்கள் ஆனால் அது அவசியமல்ல வாழ்வில் நடப்பனவற்றை காணத்தான் படைக்கப் பட்டிருக்கிறேன். அங்கு சலசலப்பு அதிகரித்தது,

      இப்படி அவர்கள் கேள்விகளை அடிக்கிக் கொண்டிருக்க, இறுதியாக வெளியில ஓட்டல்ல கூட சாப்பிட மாட்டிங்களா என்றார்கள், இல்லை சாப்பிட மாட்டேன். அங்கு சாப்பாடு ருசியாயிருக்கும் ஆனா நான் நல்லா இருக்கனும் இதால எனக்கு எதுவும் ஆயிட கூடாது என்கிற அக்கறை இருக்காது. வெளியில சாப்பிட்டா அது பழங்கள்தான்.

       இப்படி வாழ்க்கையில் எவ்வளவோ விசயங்கள, அவசியமில்லாமலே நாம் நமது சுமைகளை கூட்டி கொண்டே இருக்கிறோம் அது அத்தியாவசியம் இல்லை என்றாலும்.

       நான் அஞ்சலகத்தில் பணி புரியும் சாதாரண அரசு தொழிலாளிதான்
எனது இரண்டு மகன்களில் ஒருவன் அமெரிக்காவிலும் மற்றொருவன் ஆஸ்திரேலியாவிலும் இருக்கிறான். நான் செய்ததெல்லாம் என்னுடைய பணியினை விரும்பியதுதான்.

      என் சம்பளம் என்னுடைய குடும்பதினை நடத்த கஷ்டமாகத்தான் இருந்தது நான் அடுத்தவர்களை பார்த்து அவர்களின் விருப்பதினை பின்பற்ற நினைத்த வரை. நான் என் பனியினை வெறுத்ததில்லை அதுதான் எனக்கு இன்றைக்கு இப்படி ஒரு சந்தோசமான வாழ்வினை கொடுத்திருக்கிறது என நம்புகிறேன் என்றார்.

       அந்த இளைஞர்கள் மன குழப்பத்துடன் தங்கள் ஊரில் இறங்கி நடந்தனர். அவர்கள் வாழ்வில் நல்ல மாற்றம் ஏற்பட்டிருக்குமென நம்புகிறேன்...

Saturday, 1 March 2014

முன்னேற்றப் பாதையை நோக்கி

            படகோட்டி ஒருவரிடம் ஒரு கேள்வி எழுப்பப்பட்டது காற்று பலமாக வீசும் போது உங்கள் மனநிலை எப்படி இருக்கும் என்று அதற்க்கு அவர்.

     காற்று பலமாக வீசும் போது அதன் பின்னால் நிச்சயம் ஓர் அமைதி கிடைக்கும் என்ற ஆழமான நம்பிக்கையின் தெளிவில் வருகிற இடையூருகளை எதிர் கொள்வோம் 

     அந்த முன்னேற்றத்தை நோக்கிய பாதையில் சிறு சிறு நிகழ்வுகலான வெற்றி தோல்வி எல்லாம் எங்கள் நினைவுகளில் நிற்காது அந்த அமைதி கிடைக்கின்ற நொடிப்பொழுதினை நினைத்ததுக் கொண்டே எங்கள் உழைப்பு முன்னோக்கி செல்லும் என்றார்.


          வாழ்வில் கிடைக்கின்ற வெற்றி தோல்விகளை விட முன்னேற்றப் பாதையில் பயணிக்க வேண்டும் என்ற எண்ணத்தை உங்கள் உள்மனதில் புகுத்துங்கள். அதுவே கிடைத்த வெற்றிக்காக பிறரை பழிப்பதையும், கிடைத்த தோல்விக்காக கூனி குறுகிக் கொள்ளவதையும் உங்களிடமிருந்து இருந்து தொலைந்து  போகச் செய்யும்,

        எது நடந்தாலும்,  எந்த ஒரு தடையாக இருந்தாலும் அதற்க்கு ஓர் வரையறை இருக்கிறது அதனை தாண்டும் வரைதான் நம் உழைப்பு அதிகம் தேவைப்படும்.  எந்த ஒரு தடையாளும் உங்களை நிரந்தரமாக முடக்க  முடியாது என்ற எண்ணம் உங்களுக்கு முன்னோக்கி செல்ல முதன்மை எண்ணத்தை கொடுக்கும்.

       இது தொடர்கையில், நீங்கள் பயணித்த பாதையினை பதிவுகளே உங்களுக்கு ஆசைக்க முடியாத நம்பிக்கையை கொடுக்கும், உங்கள் கனவுகளை எட்டும் வரை.

வெற்றியோ தோல்வியோ
         நிரந்தரமில்லை
வேசமிட்டுக் கொள்ளா
     பூமியின் சமநிலை - இங்கு
நிலைக்கும் வரை...!