Sunday, 30 November 2014

நிறைவானதாய் நிலைத்திருக்கும் நிம்மதி

          வாண்டுகளின் வழித்தடங்களுக்கிடையில் இளைப்பார அமைக்ககப்பட்ட இருக்கையில் நடை தளர்ந்த நரைமுடியுடன் அமர்ந்திருந்த முதியவரும் அவர் தோள் சாய்ந்தபடி கண் கலங்கியிருந்த அவரது துணைவியும்.

          தூரத்தில் விளையாடிய சிறுவர்களின் பந்து அவர்களது காலடியில் வந்து விழுந்தது. அங்கு அதனை எடுக்கச் சென்ற சிறுவன் பந்தினை, அவனது நண்பர்களிடம் எரிந்துவிட்டு. ஏன் தாத்தா பாட்டி அழுறாங்க  ஏதாவது பிரச்சனையா என்றான் .

        அதுக்கு அவர்கள் பிரச்சனையெல்லாம் ஒன்றும் இல்லைப்பா.. இன்று எங்களுக்கு திருமணமாகி 40 வருடம் ஆகின்றது, இன்று எங்கள் திருமண நாள் அதான் காலையில கோயிலுக்கு போயிட்டு இங்கே வந்தோம், வேற ஒன்றும் இல்லப்பா நீ போயி விளையாடு என்றார்கள்.

        அந்த சிறுவன் அந்த பாட்டியிடம் என்ன பாட்டி தாத்த உங்களை சந்தோசமா/வசதியா வைச்சிருக்களையா அழுகுறிங்க. பாட்டி, வசததியாவா இவரான்னு ஒரு இழு இழுத்தார்... அரசாங்க உத்தியோகம் நிதித்- துறையிலதான் இருக்கருன்னு பேரு, ஆயுள் முழுக்க வாடகை வீடுதான் என ஆரம்பித்து பட்டியளிட்டார்.

        அதற்கு அந்த பெரியவர் தங்கள் வாழ்வில் நடந்த இரண்டு முன்று சம்பவங்களை கூறி இந்த மாதிரி சின்ன சின்ன தவறு செய்திருந்தாலும்
கூட வசதியா வாழ்ந்திருக்கலாமில்ல அன்றெல்லாம் என்னை தடுத்துவிட்டு இன்றைக்கு குறை சொல்கிறாய் என்றார் சற்று ஆவேசத்துடன்.


       இவர் இந்த மாதிரி  பட படனு பேசுவாரு ஆனா யாருக்கும் எந்த தீங்கும் செய்யமாட்டார், எந்த தருணத்திலும் இந்த தோள் என்னை தோற்கடித்ததே இல்ல தம்பி, அதுதான் என் வாழ்வில் எனக்கு கிடைத்த மிகப் பெரிய நிம்மதி தம்பி என்று கூறி அவரது கண்ணீர் அதிகமாகியது.


        இந்த மாதிரி அவளுக்கு எத்தைனையோ எதிர்பார்ப்புகள் இருந்தும், சிறு சிறு தவறுகள் செய்யாமல் அத்தகைய வருமானம் வராது என தெரிந்தும் அவள் என்னை சிறு தவறு  கூட செய்ய விட்டதில்லை அது தான் இன்றைக்கும் எனக்கு மிகப் பெரிய நிம்மதியை கொடுத்திருக்கு.


        இறுதியாக அந்தப் பெரியவர் "ஆயிரம் பேரைக் கொன்று
அரியனையில் அமர்ந்து அரை நிமிடம் கூட நிம்மதியாய் இல்லாத வாழ்க்கையை விட. பிறருக்கு தீய்மை செய்யாத நிம்மதியை இப்பிறப்பு முழுவதும் நிரப்புகின்ற கொள்கையுடவன் நான் என்றார்". சிறுவன் ஒரு நிமிடம் தன் புருவம் உயர்த்தி, ஏதோ சிந்திப்பதாய் அவ்விருவரிடமும் வருகிறேன் என கூறி அவ்விடம் விட்டு நகர்கிறான்.


       மாறிவரும் கலாச்சாரத்தில் மண்ணின் மணத்துடன் வாழ்ந்திருந்த தம்பதியினர் எற்றி வைத்த சிறு அகல் விளக்கு என நம்புகிறேன்,
கடலுக்குள் எல்லா கப்பல்களும் ஒரே திசை நோக்கி படையெடுக்க வைத்த கலாச்சாரம், இன்று கானடிந்து கொண்டிருக்க அத்தி பூத்தர் போல நம் மனச் சிந்தனைகளை கிளர்வதாய் இம்மனத் தம்பதியினர் வாழ்வு.

No comments:

Post a Comment