ஒரு நாள் ஒரு பெரியவர் தனது பாதனிகளை சரி செய்ய ஒரு பாதனி பணியாளரிடம் அதனை கொடுத்து விட்டு அவர் ஊனமுற்றிருப்பதை பார்க்கிறார். அந்த தொழிலாளி சரி செய்தபின் 20 ரூபாய் என்றார்.
அந்த முதியவர் 25 ரூபாய் கொடுத்து தேனீர் அருந்த வைத்துக்கொள் என்றார் அதற்க்கு அந்த பணியால் அய்யா நான் ஊனமாக பிறந்திருந்தாலும் கடவுள் எனக்கு நிறைய மன உறுதியினை கொடுத்திருக்கிறார் மேலும் நான் நிறைய சம்பதிக்கிறேன் என்று 5 ரூபாயினை திரும்பக் கொடுத்தார்.
அன்று அவர் முகத்தில் தனக்கு கால் இல்லா விட்டாலும் சொந்த காலில் நிற்கிறோம் என்ற சந்தோஷத்தையும். குறைவாக சம்பதித்தாலும் நிறைவான மனதினையும் பார்த்தேன்.
இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு அந்த பணியாலரை பாஷ்போர்ட் பதிவு செய்யும் அலுவலகத்தில் பார்த்த பின் அவரிடன் சென்று கேட்டார் அவர் அந்த பணியினைப் பார்த்துக்கொண்டே தொலைத்தூரக்கல்வியில் B.A தமிழ் படித்ததாகவும் அதன் பிறகு ஊனமுற்றவர் இட ஒதுக்கீட்டில் இவ்வேலை கிடைத்ததாகவும் இப்பொழுது அவர் தொலைதூரக்கல்வியில் M.A தமிழ் படித்துக் கொண்டிருப்பதாகவும் சிரித்த முகத்துடன் சொன்னார்.
அன்று, அவரது மன உறுதியும் விடாமுயற்ச்சியும் தான் அவர் உயர்வுக்கு காரணம் என்பதை யோசித்த வண்ணமே பெரியவர் வீடு திரும்பினார். கஷ்டம் வரும் போது "இதுவும் கடந்து போகும்" என்பதினை நினைத்துக் கொள்ளுங்கள் மன உறுதியினை மட்டும் இழந்து விடாதீர்கள் வாழ்வின் முன்னேற்றப் பாதையில் பயணிக்க வேண்டுமானால்.
Friday, 20 July 2012
Saturday, 30 June 2012
பசுமரத்தாணி
ஒரு சிறுவனின் தந்தை அதிகமாக குடிக்கின்ற பழக்கமுள்ளவர். ஒரு நாள் அளவுக்கு அதிகமாக குடித்தவர் தன் மனவியை வன்மையாக திட்டி அடிக்கிறார் அதனை பார்த்திருந்த சிறுவன் அழுது கொண்டு தன் தாயினை நாம் இறந்துவிடலாம் என அவள் கையினை பிடித்துக்கொண்டு அருகில் உள்ள கிணறினை நோக்கி விறைகிறான்.
கிணற்றின் அருகில் சென்றவன் உணர்ந்த மரண பயத்தில் தன் தாயினை கட்டி பிடித்துக்கொண்டு நாம் எங்கேயாவது போய் பிழைத்துக்கொள்ளலாம் என்கிறான்.
ஒரு கனம் யோசித்துப் பார்த்தால் உலகினை இரசிக்க வேண்டிய பருவத்தில் இறப்பினை நினைத்த வடுக்கள். இன்றும், அவர் கூறுகையில் அவரது கண்கள் கலங்கும்.
குடிப்பது கேடு என்பதை ஏற்றுக்கொள்ளாதவர்கள் உங்கள் உறவுகளையாவது காயப்படுத்தாமல் இருக்கலாம். அதிலும் உங்கள் எதிர்கால சந்ததியினருக்கு நல்ல விஷயங்களை விட்டு செல்லா விட்டாலும் நெருடுகின்ற வடுக்களை விட்டுச் செல்லாமல் இருக்கலாம்...

Thursday, 14 June 2012
கவலையெனும் கரையான்
ஒருவர் தனது அலுவலகத்தில் இருந்து வீடு திரும்புகிறார். அவர் சென்று சேர வேண்டிய இடம் சுமார் 20 கிலோ மீட்டர் அந்த வாகனத்தை ஏற்ப்பாடு செய்தவர்கள் சரியாக திட்டமிடாததால் வேறு வேறு திசைகளிள் உள்ளவர்களை ஏற்றி விடுகிறார்கள்.
அந்த மனிதர் வாகனத்தில் ஏறி அமர்ந்த உடன். யார் யார் எங்கு எங்கு செல்கிறார்கள் என்பதை கேட்டவுடன் ஆரம்பித்தவர்தான்
நான் தான் அதிக தூரம் போக வேண்டும் என பொலம்ப ஆரம்பித்தவர் தனது அலுவலகத்திற்க்கு போன் செய்தார் அந்த ஓட்டுனர் உடன் வக்குவாதம் என பொலம்பி தீர்த்துக் கொண்டே வந்தார்.
உண்மையில் அன்று அவர் 12 மணிக்கு வீட்டுக்கு செல்ல
வேண்டியவர் குறைந்தது 2 மணிக்குத்தான் சென்றிருப்பர் அதற்க்கு உண்மையான காரணம் அவரது கவலை படுகின்ற குணாதிசயம்.
அவர் அந்த வாகன ஓட்டுனரிடம் நிலையை எடுத்துக்கூறி விட்டு இருந்தால் அவர் விரைவாக ஓட்டுவதற்க்கு முயர்ச்சி செய்து விரைவில் கொண்டு சேர்த்திருப்பார். ஆனால் அவரது கவலை இங்கே வாக்குவாதம் ஆகி ஓட்டுனர் வண்டியை செலுத்துவதில் கூட கவனமில்லாமல் விவாதிக்க ஆரம்பித்துவிட்டார்.
இது போலத்தான் கவலை நமது கனவினை அடைகின்ற வேகத்தை கரைக்கின்ற கரையான். விட்டொழியுங்கள் இதனை உங்களது இலக்கினை சரியான நேரத்தில் அடைய வேண்டுமானால். அர்னால்டு கிலாச்கவ்வின் வார்த்தைகளின் படி
வெற்றி என்பது
சரியானவற்றை சரியான நேரத்தில் சரியாக செய்வது

Wednesday, 2 May 2012
மனித நேயம்
ஒரு நாள், தண்ணீரினை வீட்டுக்கு வீடு கொடுத்து வருபவர் அந்த கேனினை சுமந்து கொண்டு வாகன மின்விளக்கின் அறிவிப்புக்கு ஏற்ப்ப சாலையை கடக்க முயன்றார்.
அந்த கன நிமிட நேரத்தில் காகித ஆடை உடுத்திய அதிகாரி வாகனத்தில் அவரை மோதினார். அந்த குடி நீர் சுமப்பவர் சுமந்து வந்த
கேன் கீழே விழுந்து உடைகின்றது. உண்மையில் அந்த தொழிலாளியின் வருமானம் ஒரு நாளைக்கு ஏறக்குறைய இரண்டு நூறுக்கு குறைவு அதற்க்கு அந்த அதிகாரி ஒரு சிறு மன்னிப்பு கூட கேட்காமல் அங்கிருந்து விரைகின்றார்.
அந்த அதிகார தோரனையில் அழிக்கப்பட்டது ஒரு நாள் உழைப்பு மட்டுமல்ல அவனது சுய மரியாதை மற்றும் மனிதனுக்கு உரிய உயரிய குணமும்தான். முன்னோர்கள் கூறுவார்கள் "மன்னிக்க தெரிந்தவனே மனிதன் என்று". அந்த மனித நேயம் நம்மில் குறைந்து வருகின்றது என்பதற்க்கு இதுவும் ஓர் உதாரணம்.

Monday, 16 April 2012
இந்தியாவின் சிறப்பு
தெற்கே நாம் மின் விசிறியின் கீழ் அமர்ந்திருப்போம் ஆனால் வடக்கே பனி
குளிற் மழை பொழிந்து கொண்டிருக்கும்… இந்தியாவின் சூழ்நிலை ஒரு
முனையிலிருந்து மறுமுனைக்கு செல்ல ஓர் சீரான மாற்றம் இருக்கும். இந்த சீரான
மாற்றம் மனிதர்களுக்கும் பொருந்தும்(உதாரணம் தலை முடி மாற்றம்). இத்தகைய
மாறுபட்ட சூழ்நிலையில் நாம் எதனை வேண்டுமானாலும் விளைவிக்கலாம்.
நம் முன்னோர்களால் குடிசைத் தொழிலில் பிரித்து எடுத்த உலோகத்தில் கட்டப்பட்டதுதான் குதுப்மினார். இதன் சிறப்பு இன்றுவரை கண்டறியமுடியாத அளவிற்க்கு மிருதுவானதாகவும், துருப்பிடிக்காததாகவும் விளங்குகின்றது. இந்தகைய விந்தையான தொழிற் நுட்பம் இங்கிருந்திருக்கிறது.
ரைட் சகோதரர்கள் தங்கள் விமானக் கண்டுபிடிப்பினை அறிவிப்பதற்க்கு முன்பு அவர்கள் இந்தியாவிற்க்கு வந்து ஆறு மாத காலம் தங்கியிருந்திருந்திறார்கள் அதன் உள்நோக்கம் என்னவாக இருந்திருக்கும். நிச்சையமாக அவர்கள் கண்டு பிடிப்பிற்க்குத் தேவையானவை இந்தியாவில் இருந்திருக்கிறது.
இந்தியா என்னும் ஒற்றுமை ஏற்ப்பட்ட பின். நாம் எந்த நாட்டிடமும் போருக்கு சென்றதில்லை அதனால் நமக்கு வீரம் இல்லை என்றல்ல(உலகை வென்ற அலெக் சான்டரும் வியந்த வீரம் நம்மிடம் இருந்திருக்கிறது). நம்மை எதிர்த்து போரிட்டு எவரும் வென்றதில்லை(சீனப் போர், காஷ்மீர் போர்) “வம்பு சண்டைக்கு போறதில்லை வந்த சண்டையை விட்டதில்லை” என்கிற மாதிரி.
http://www.youtube.com/watch?v=Li-a6iAgbaE
கூத்தப்பக்கம் என்னும் கிராமத்தில் ஒரு தொண்டு நிறுவனம் சில உயர் தொழில் நுட்ப முறையினை பயன்படுத்தி அங்குள்ள குடிசை வீடுகளை அகற்றுவது மற்றும் அவர்களது வாழ்க்கை தரத்தை உயர்த்தும் முயர்ச்சி நடந்து கொண்டிருக்கின்றது. அவர்களது உயரிய நோக்கம் அதனை சிறந்த மதிரி கிராமம் ஆக்குவது… இந்த முயற்ச்சியினை பாராட்டி பிரான்சினை சேர்ந்த ஒரு நிறுவனம் பரிசு அளித்துள்ளது. ஆனால் இந்தியாவில் இது கண்டு கொள்ளப்படவில்லை.
http://www.worldhabitatawards.org/winners-and-finalists/project-details.cfm?lang=00&theProjectID=296
Tell me, why is the media here so negative? Why are we in India so embarrassed to recognise our own strengths, our achievements? We are such a great nation. We have so many amazing success stories but we refuse to acknowledge them. Why?

நாசாவால் புதனுக்கு அனுப்பப்பட்ட ரோவர் என்னும் ரோபோடிக் எந்திரத்தின் மாதிரிவடிவம்
YUPS TECH SOLUTION (India) என்னும் இந்திய நிறுவனத்தால் வடிவமைக்கப் பட்டது.
http://www.youtube.com/watch?v=Li-a6iAgbaE
கூத்தப்பக்கம் என்னும் கிராமத்தில் ஒரு தொண்டு நிறுவனம் சில உயர் தொழில் நுட்ப முறையினை பயன்படுத்தி அங்குள்ள குடிசை வீடுகளை அகற்றுவது மற்றும் அவர்களது வாழ்க்கை தரத்தை உயர்த்தும் முயர்ச்சி நடந்து கொண்டிருக்கின்றது. அவர்களது உயரிய நோக்கம் அதனை சிறந்த மதிரி கிராமம் ஆக்குவது… இந்த முயற்ச்சியினை பாராட்டி பிரான்சினை சேர்ந்த ஒரு நிறுவனம் பரிசு அளித்துள்ளது. ஆனால் இந்தியாவில் இது கண்டு கொள்ளப்படவில்லை.
http://www.worldhabitatawards.org/winners-and-finalists/project-details.cfm?lang=00&theProjectID=296
Tell me, why is the media here so negative? Why are we in India so embarrassed to recognise our own strengths, our achievements? We are such a great nation. We have so many amazing success stories but we refuse to acknowledge them. Why?
Abdul Kalam (President of India)
எல்லா வளமும் இங்கிருக்கிறது
எடுத்தாலுவதில் குறையிருக்கிறது
எடுத்தாலுவதில் குறையிருக்கிறது
விழித்துக்கொள் மானிடா
இந்தியாவின் வெற்றியை
இமயத்திற்க்கு கொண்டு செல்ல...!
இந்தியாவின் வெற்றியை
இமயத்திற்க்கு கொண்டு செல்ல...!
உள்ளுணர்வு
ஒரு நாள் சாலையோரம் ஓர் உயிர் துடித்துக் கொண்டிருந்தது அந்த வழியே வந்த
வலிமை படைத்த விளையாட்டு வீரன் விநாடிகள் விரைகின்றதென கண்டும் கானாது
செல்கிறான்.
அவ்வழி வந்த மருத்துவன் இலவச மருத்துவம் பார்க்க வேண்டி வருமோ என மருத்துவமனை வழியில் காத்து நின்றான் யாராவது கொண்டு வருவார்களா என்று.
ஊர்களை நல்வழி படுத்தும் பாதிரியார் அருகில் சென்று தொட்டு கரையான சட்டையும் பார்த்து அய்யய்யோ என பதறி விலகினார்.
உண்மையான உள்ளுணர்வு கொண்ட சிறுவன். அங்கிருந்தவர்களை அழைத்து அவரை மருத்துவமனையில் சேர்த்தான். அன்று அம்மனிதனின் மனைவி நீ தான் என் குல தெய்வமென கையெடுத்து கும்பிட்டாள் அச்சிறுவனை.
உண்மையில் சேவை செய்ய பணமோ, படையோ அல்லது பொருள் பலமோ தேவை இல்லை. உதவி செய்ய வேண்டும் என்ற உள்ளுணர்வு இருந்தால் போதும் அது எப்படியும் சாத்தியமாகும்.
இந்த உண்மை உணர்விற்க்கு உண்மையான உதாரணமாய்,
மெஜர் சரவணன்,
அண்ணா விருது பெற்ற பிரியா மற்றும் முருகன்.
இவர்களின் உள்ளுணர்வுகள் உலகினில் எதாவது ஓர் ஊனுக்குள் வாழ்ந்து கொண்டுதான் இருக்கும்.....

நம்பிக்கை
வாழ்வின் அடித்தலமாய் இந்த நம்பிக்கை...!
மலை ஏறுபவனுக்குத் தெரியாது தான் அந்த உச்சியை அடைவோமா என்று.
ஏற்கனவே தோற்றவர்கள் அவனுக்கு உதாரணங்கள். கயிறு கொண்டு ஏறினாலும் அவன் கொண்ட நம்பிக்கை தான் அவனது உண்மையான ஊன்றுகோல்...!
நம்பிக்கை இருந்தால் மட்டும் ஒன்றை தொடங்குங்கள் அது இல்லையேல்
நங்கூரம் இல்லா கப்பலை கடலுக்குள் இறக்குவதாகும்...!
நம்பிக்கை வரும் வரை காத்திருப்பதில் தவறில்லை.தொடங்கும் பொழுது முழு மனதுடன் நம்பிக்கை என்னும் ஊன்று கோலுடன் தொடங்குங்கள்...!
நடந்தவைகள் எல்லாமே உணர்த்துகின்ற உதாரணங்கள் அது
உண்மையான வாழ்வு அல்ல...!
நம்பிக்கையெனும் நரம்பில் தான் வழ்வின் உறவுகள் இணைக்கப்படுகின்றன. நம்பிக்கை என்னும் ஆனிவேரில் தான் வாழ்வு என்னும் பூக்கள் பூக்கின்றன...!
நம்பினால் தான் வெற்றி...!
நம்பினால் தான் உறவு...!
நம்பினால் தான் வழ்க்கை...!
நம்புங்கள் வெற்றி வரும்...!
நம்புங்கள் வசந்தம் வரும்...!
நம்புங்கள் நல்வாழ்வு வரும்...!

Subscribe to:
Posts (Atom)