2004 ஆம் ஆண்டு சுனாமி ஏற்பட்ட பின் NSS மாணவர்கள் குழு அங்கு இருப்பவர்களுக்கு உதவவும் ஆறுதல் கூறவும் பொறையார் என்னும் பகுதிக்கு சென்றனர். அங்கே அவர்கள் கண்டது உருகுலைந்த மனித உடல்கள் கருவைக்குள் சிக்கிக்கொண்டு எங்கு பார்த்தாலும் பரவிக்கிடந்தன.
அங்கு அவர்கள் கண்ட மறுக்க முடியாத உண்மை ஒரு புறம் உறவுகளை இழந்து விட்ட கண்ணீர் துளிகள் மறுபுறம் தன் சுய சந்தோசத்திற்க்காக மட்டுமே வாழ்க்கின்ற மனித கூட்டத்தின் கொடூரம் பொன் நகைகளுக்காக சிதறிக் கிடந்த பிணங்களின் காது மூக்குகளை அறுத்துவிட்டு சென்றிருந்தனர்.
உண்மையில் உலகம் நன்மை தீமைகளால் படைக்கப் பட்டுள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. மனித உரிமை கழகம், காவல் துறை, நீதிதுறை மற்றும் பத்திரிக்கை துறை உதாரணங்களுடன் அந்த வரையறைகளை நமக்கு ஞாபகப்படுதுகின்றன அடுத்தவர்களை பழிப்பதல்ல அவர்களின் நோக்கம். இது தீய கண்ணோட்டமாக இருக்கலாம் நன்மை விளைகின்ற நோக்கத்தோடு.
நமது பழைய தவறுகளை அலசுவது உயர்வுக்கு வழி தேடவே ஊனின் உணர்வினை காயப்படுத்துவதல்ல.கண்ணோட்டம் என்பது நடு நிலமையில் இருக்கும் போதுதான் அது உண்மையாக இருக்கும். உறவுகளில் விருப்பு வெறுப்புகளுக்குள் அது சிக்கிக் கொள்ளும்.
இந்தியாவினை எடுத்துக் கொள்ளுங்கள் நாம் நல்லன வற்றை மட்டுமே பார்க்கவேண்டும் என்ற கண்ணோட்டதில் மட்டும் இருந்தால் இந்தியா தொழில் துறை மற்றும் அறிவியலில் பல சாதனை புரியும் என்பது நிச்சயம் ஆனால் லஞ்சம், தனது தகுதிக்கு மேல் ஆசைப்பட்டு குறுக்கு வழியில் முன்னேற செய்கின்ற செயல்கள் இன்று இயல்பாய் மாறிவிட்டன நாம் இதனை குறைத்துக் கொள்ளாவிட்டால் எவ்வளவு தொழில் வளர்ச்சி கண்டாலும் நாட்டின் உண்மையான வளர்ச்சியினை காண இயலாது.
இது நம்மை நாமே பழித்திக் கொள்வது அல்ல நமக்குள் இருக்கின்ற குறைகளை கண்டெடுக்கின்ற தீய கண்ணோட்டமாக இருந்தாலும் நம் வளர்ச்சிக்கு வித்திடுகின்ற நல்ல விதையாகத்தான் இருக்கும். மனிதம் குறைகள் நிறைந்ததுதான் ஆனால் அனுபவத்தில் அதனை திருத்திக்கொள்ளும் ஆசிர்வாதத்துடன் படைக்கப் பட்டுள்ளது.
கண்ணிமையின் விட்டம் அகற்றப்படாமல்
குறைகள் தெரிவதில்லை
இவைகள் நிவர்த்தி செய்யப் படாமல்
நிலையான வளர்ச்சி இருக்கப் போவதில்லை.
Saturday, 25 August 2012
Tuesday, 14 August 2012
மரணமும் விதையானது
இராமேஷ்வரம் என்னும் ஒரு தீவினில் பிறந்த சிறுவன் கேந்திர வித்யாலயா என்னும் பள்ளியில் கல்வியினைத் தொடங்கினான். பின்னர் திருச்சிராப்பள்ளியில் உள்ள செயின் சோசப் என்னும் கல்லூரியில் தனது பட்டப் படிப்பினையும் அங்கு படிக்கும் போதே "NCC" யில் "C" சான்றிதழினைப் பெற்றான்.
தனது தந்தையை ஒரு விபத்தில் பரிகொடுத்தவன் தனது தாயின் அரவனைப்பினில் தனது இரண்டு சகோதரிகளுடன் வளர்ந்தான்.
தனது பட்டப்படிப்பிற்க்கு பிறகு இந்திய இராணுவத்தில் இணைந்தவர் தமிழ்பூர், பிகார் மற்றும் பூட்டான் ஆகிய இடங்களில் பணிபுரிந்தார்.
ஒரு நாள் அவர் நண்பர்களுடன் பயணிக்கையில் அவர்கள் சென்ற பேருந்து விபத்துக் உள்ளாகியது. அவருடன் சென்ற எல்லோரும் அதிர்ச்சியில் நின்றிருக்க அவர் மட்டும் உயிருடன் இருப்பவர்களை கண்டறிந்து மருத்தவமனைக்கு கொண்டு சென்றார். அந்த அளவிற்க்கு மன உறுதியினையும் ராணுவப் பயிர்ச்சியினையும் பெற்றிருந்த வீரன்
1999 ஆம் ஆண்டு மேஜர் ஆக பதவி உயர்வு பெற்று கார்கிலுக்கு மாற்றப்பட்டார். மே 28 1999 அன்று அத்து மீறி உள் நுழைந்த பாகிஷ்த்தான் தீவிரவதிகளின் மீது தாக்குதல் மேற் கொண்டார். அப்பொழுது ராக்கெட் லாஞ்சர் என்னும் ஆயுதத்தால் இருவரை வீழ்த்தினார் அச்சமயம் அந்த ஆயுதத்தில் இருந்து வெளிப்பட்ட உலோகத் துகள்களால் அவர் பாதிக்கப் பட்டதால். மேலும் அப்பொழுது பெரும்பாலான வீரர்கள் காயப்பட்டிருந்தனர், அவரது உயர் அதிகாரி திரும்ப அழைத்த போதிலும் நிலமையை கருத்தில் கொண்டு நாங்கள் அவர்களுக்கு மிக அருகினில் இருக்கிறோம் இன்று திரும்ப இயலாது என பதிலளித்து விட்டு தனது தாக்குதலை தொடர்ந்தார். மேலும் இருவரை வீழ்த்துகையில் அணுகுண்டு அவர் தலை பகுதியினை துளைத்திருந்தது.
இந்தியாவின் முதல் படியினை வெற்றியாக்க மண்ணில் மே 29 ஆம் தேதி வீழ்ந்தவரின் சடலத்தை மீட்பதற்க்கு இந்திய ராணுவம் ஜூலை 3 ஆம் தேதி வரை போராட வேண்டியிருந்தது. இந்தியாவின் பட்டாலிக் என்னும் இடத்தை காத்து வீழ்ந்தவருக்கு "பட்டாலிக்கின் நாயகன்" என பட்டம் சூட்டினார்கள்.
அரசாங்கத்தின் வீர் சக்ரா என்ற உயரிய விருதும் அவருக்கு கிடைத்தது.
அவரது சடலத்தை கண்ட தாய் கூரிய வார்த்தைகள் "நான் என் மகனை நினைத்து கர்வம் கொள்கிறேன் அவன் இந்த கார்கில் போரில் போரிட்ட இந்திய இராணுவத்தில் முதலில் இறந்தவன் கடைசியா வீட்டுக்கு வந்தவன் என்பதில்"
திருச்சிராப் பள்ளியின் வீர மகன் என மக்களால் அன்புடன் அழைக்கப்படும் மேஜர் சரவணனின் வீரம் இங்கே விதையாக விதைக்கப் பட்டுள்ளது.
உந்தன் மரணமும் விதையானது
உள்ளத்தினில் - இந்தியனெனும்
உணர்வுடன் வாழ்ந்திருக்க
கிழக்கே விடியல் இருக்கும் வரை.

Saturday, 4 August 2012
சந்தோசமான மன நிலை
ஒரு உழவன் தனது வாழ்வின் துவக்கத்திலிருந்து கடினப்பட்டு வளர்கிறான். வளர்ந்தபின் தான் எத்தனை ஏக்கர் நிலம் சம்பாதிக்க வேண்டும் எவ்வளவு பணம் வைத்திருக்க வேண்டும் என தீர்மானித்தும் அதற்க்காக கடினப்பட்டு உழைத்தான் ஒரு நாள் தனது இலக்கினையும் அடைந்து விட்டான் அன்று அவன் வாழ்வினை திரும்ப பார்க்கையில் தனது வாழ்வில் பல சந்தோச தருணங்கள் ஒரு நிகழ்வாக மட்டும் முடிந்திருப்பதை உணர்கிறான்.
வாழ்வில் வெற்றி மட்டும் தான் சந்தோசம் என்றால் இவர் ஏன் வருத்தப் படுகிறார். காரணம் இருக்கிறது மனித மனம் வல்லுனர்களால் இரண்டாக வகைப்படுத்தப்படுகிறது உள்மனம் மற்றும் வெளிமனம். நீக்கள் உள்மனத்திடம் உங்கள் இலக்கினை தெரிவித்தால் அது அதனை அடைவதற்க்கு மட்டுமே முயர்ச்சிக்கும் புற மனத்தை போன்று மனித உணர்வுக்களுக்கு கட்டுப் படாது.இந்த உள்மனத்தின் இலக்கினை அடைகின்ற முயர்ச்சியில் உங்கள் சந்தோசங்கள் மறைந்து போகலாம். (கையில் எண்ணையை வைத்துக் கொண்டு நராயணன் நாமம் உச்சரிக்க மறந்த நாரதனைப் போல)
இது நடந்தால் மட்டும் தான் சந்தோசமாக இருப்பேன் என்ற மன நிலையை நாம் மாற்றிக் கொண்டால் போதும் நம் வாழ்வில் சந்தோசத்தை அதிகப்படுத்துவதற்க்கு. வெற்றி என்பது சந்தோசத்தினை ஊக்குவிக்கும் காரணிதானே தவிர ஆதாரம் அல்ல.
சில நேரங்களில் நாம் கடினப்பட்டு உழைத்தாலும் சரியான வற்றை செய்தாலும் சமுதாயத்தின் வலிமையாலும் அது ஏற்படுத்தும் தடைகளாலும் தோற்க்க நேரிடலாம் உங்கள் சந்தோசமான மன நிலை அடுத்த முயர்ச்சிக்கான ஆற்றலை உங்களுக்குள் புகுத்திவிடும்.
வாழ்வின் முனேற்றத்திற்க்கு இலக்கு நிர்ணயுங்கள் சந்தோசமான மன நிலையுடன். அது உங்கள் தடைகளை எடுத்தெரிகின்ற ஆற்றலை உங்களுக்கு அளித்துக்கொண்டேயிருக்கட்டும் உங்கள் இலக்கினை அடையும் வரை.
எது நடந்தாலும் நான் சந்தோசமாக இருப்பேன் என்றும் (உங்களை உண்மையில் ஆதரிக்கின்ற உறவுகளை இழக்கின்ற தருணங்களைத் தவிர). உங்கள் சந்தோசத்தை எதனாலும் பரித்துக்கொள்ள முடியாது எனவும் நம்புங்கள். இந்த சந்தோசமென்னும் ஆற்றலை ஏற்றுக்கொண்டு எடுக்கின்ற முயர்ச்சியில் உங்கள் பெயரினை சரித்திரத்திலும் எழுதுங்கள்.

Subscribe to:
Posts (Atom)