இராமேஷ்வரம் என்னும் ஒரு தீவினில் பிறந்த சிறுவன் கேந்திர வித்யாலயா என்னும் பள்ளியில் கல்வியினைத் தொடங்கினான். பின்னர் திருச்சிராப்பள்ளியில் உள்ள செயின் சோசப் என்னும் கல்லூரியில் தனது பட்டப் படிப்பினையும் அங்கு படிக்கும் போதே "NCC" யில் "C" சான்றிதழினைப் பெற்றான்.
தனது தந்தையை ஒரு விபத்தில் பரிகொடுத்தவன் தனது தாயின் அரவனைப்பினில் தனது இரண்டு சகோதரிகளுடன் வளர்ந்தான்.
தனது பட்டப்படிப்பிற்க்கு பிறகு இந்திய இராணுவத்தில் இணைந்தவர் தமிழ்பூர், பிகார் மற்றும் பூட்டான் ஆகிய இடங்களில் பணிபுரிந்தார்.
ஒரு நாள் அவர் நண்பர்களுடன் பயணிக்கையில் அவர்கள் சென்ற பேருந்து விபத்துக் உள்ளாகியது. அவருடன் சென்ற எல்லோரும் அதிர்ச்சியில் நின்றிருக்க அவர் மட்டும் உயிருடன் இருப்பவர்களை கண்டறிந்து மருத்தவமனைக்கு கொண்டு சென்றார். அந்த அளவிற்க்கு மன உறுதியினையும் ராணுவப் பயிர்ச்சியினையும் பெற்றிருந்த வீரன்
1999 ஆம் ஆண்டு மேஜர் ஆக பதவி உயர்வு பெற்று கார்கிலுக்கு மாற்றப்பட்டார். மே 28 1999 அன்று அத்து மீறி உள் நுழைந்த பாகிஷ்த்தான் தீவிரவதிகளின் மீது தாக்குதல் மேற் கொண்டார். அப்பொழுது ராக்கெட் லாஞ்சர் என்னும் ஆயுதத்தால் இருவரை வீழ்த்தினார் அச்சமயம் அந்த ஆயுதத்தில் இருந்து வெளிப்பட்ட உலோகத் துகள்களால் அவர் பாதிக்கப் பட்டதால். மேலும் அப்பொழுது பெரும்பாலான வீரர்கள் காயப்பட்டிருந்தனர், அவரது உயர் அதிகாரி திரும்ப அழைத்த போதிலும் நிலமையை கருத்தில் கொண்டு நாங்கள் அவர்களுக்கு மிக அருகினில் இருக்கிறோம் இன்று திரும்ப இயலாது என பதிலளித்து விட்டு தனது தாக்குதலை தொடர்ந்தார். மேலும் இருவரை வீழ்த்துகையில் அணுகுண்டு அவர் தலை பகுதியினை துளைத்திருந்தது.
இந்தியாவின் முதல் படியினை வெற்றியாக்க மண்ணில் மே 29 ஆம் தேதி வீழ்ந்தவரின் சடலத்தை மீட்பதற்க்கு இந்திய ராணுவம் ஜூலை 3 ஆம் தேதி வரை போராட வேண்டியிருந்தது. இந்தியாவின் பட்டாலிக் என்னும் இடத்தை காத்து வீழ்ந்தவருக்கு "பட்டாலிக்கின் நாயகன்" என பட்டம் சூட்டினார்கள்.
அரசாங்கத்தின் வீர் சக்ரா என்ற உயரிய விருதும் அவருக்கு கிடைத்தது.
அவரது சடலத்தை கண்ட தாய் கூரிய வார்த்தைகள் "நான் என் மகனை நினைத்து கர்வம் கொள்கிறேன் அவன் இந்த கார்கில் போரில் போரிட்ட இந்திய இராணுவத்தில் முதலில் இறந்தவன் கடைசியா வீட்டுக்கு வந்தவன் என்பதில்"
திருச்சிராப் பள்ளியின் வீர மகன் என மக்களால் அன்புடன் அழைக்கப்படும் மேஜர் சரவணனின் வீரம் இங்கே விதையாக விதைக்கப் பட்டுள்ளது.
உந்தன் மரணமும் விதையானது
உள்ளத்தினில் - இந்தியனெனும்
உணர்வுடன் வாழ்ந்திருக்க
கிழக்கே விடியல் இருக்கும் வரை.
No comments:
Post a Comment