Saturday, 25 August 2012

கண்ணோட்டம்

2004 ஆம் ஆண்டு சுனாமி ஏற்பட்ட பின் NSS மாணவர்கள் குழு அங்கு இருப்பவர்களுக்கு உதவவும் ஆறுதல் கூறவும் பொறையார் என்னும் பகுதிக்கு சென்றனர். அங்கே அவர்கள் கண்டது உருகுலைந்த மனித உடல்கள் கருவைக்குள் சிக்கிக்கொண்டு எங்கு பார்த்தாலும் பரவிக்கிடந்தன.

அங்கு அவர்கள் கண்ட மறுக்க முடியாத உண்மை ஒரு புறம் உறவுகளை இழந்து விட்ட கண்ணீர் துளிகள் மறுபுறம் தன் சுய சந்தோசத்திற்க்காக மட்டுமே வாழ்க்கின்ற மனித கூட்டத்தின் கொடூரம் பொன் நகைகளுக்காக சிதறிக் கிடந்த பிணங்களின் காது மூக்குகளை அறுத்துவிட்டு சென்றிருந்தனர்.

உண்மையில் உலகம் நன்மை தீமைகளால் படைக்கப் பட்டுள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. மனித உரிமை கழகம், காவல் துறை, நீதிதுறை மற்றும் பத்திரிக்கை துறை உதாரணங்களுடன் அந்த வரையறைகளை நமக்கு ஞாபகப்படுதுகின்றன அடுத்தவர்களை பழிப்பதல்ல அவர்களின் நோக்கம். இது தீய கண்ணோட்டமாக இருக்கலாம் நன்மை விளைகின்ற நோக்கத்தோடு.

நமது பழைய தவறுகளை அலசுவது உயர்வுக்கு வழி தேடவே ஊனின்  உணர்வினை காயப்படுத்துவதல்ல.கண்ணோட்டம் என்பது நடு நிலமையில் இருக்கும் போதுதான் அது உண்மையாக இருக்கும். உறவுகளில் விருப்பு வெறுப்புகளுக்குள் அது சிக்கிக் கொள்ளும்.

இந்தியாவினை எடுத்துக் கொள்ளுங்கள் நாம் நல்லன வற்றை மட்டுமே பார்க்கவேண்டும் என்ற கண்ணோட்டதில் மட்டும் இருந்தால் இந்தியா தொழில் துறை மற்றும் அறிவியலில் பல சாதனை புரியும் என்பது நிச்சயம் ஆனால் லஞ்சம், தனது தகுதிக்கு மேல் ஆசைப்பட்டு குறுக்கு வழியில் முன்னேற செய்கின்ற செயல்கள் இன்று இயல்பாய் மாறிவிட்டன நாம் இதனை குறைத்துக் கொள்ளாவிட்டால் எவ்வளவு தொழில் வளர்ச்சி கண்டாலும் நாட்டின் உண்மையான வளர்ச்சியினை காண இயலாது.

இது நம்மை நாமே பழித்திக் கொள்வது அல்ல நமக்குள் இருக்கின்ற குறைகளை  கண்டெடுக்கின்ற தீய கண்ணோட்டமாக இருந்தாலும் நம் வளர்ச்சிக்கு வித்திடுகின்ற நல்ல விதையாகத்தான் இருக்கும். மனிதம் குறைகள் நிறைந்ததுதான் ஆனால் அனுபவத்தில் அதனை திருத்திக்கொள்ளும் ஆசிர்வாதத்துடன் படைக்கப் பட்டுள்ளது.

கண்ணிமையின் விட்டம் அகற்றப்படாமல்
     குறைகள் தெரிவதில்லை
இவைகள் நிவர்த்தி செய்யப் படாமல்
     நிலையான வளர்ச்சி இருக்கப் போவதில்லை.

No comments:

Post a Comment