ஒரு நாள் நான் தொடர்வண்டியில் பயனித்திருக்கையில் தீபங்கள் எரிக்க உதவும் தீக்குச்சியினை தயாரிக்கின்ற வீதியில் இருந்து வந்த பெண்மணி அவர்கள் ஊரில் நிகழ்ந்த தீ வீபத்திணைப் பற்றி விவரித்ததுக் கொண்டு வந்தார்கள்.
அப்பொழுது அவர்கள் கூரிய உண்மை. அந்த விபத்தில் இறந்த தொழிலாளர்களை விட அங்கு இருந்த வெடி பொருள்களை அள்ளிக் கொள்ள வந்துவர்கள்தான் அதிகம் என்று.
ஒரு நிமிடம் எங்கள் மனம் பதறினாலும் அந்த அளவிற்க்கு நாம் இலவசமாக கிடைக்கின்ற பொருள்களை வாங்கிக் கொண்டு வாழுவதற்க்கு பழகிக்கொண்டிருக்கிறோம் என்பதும் உண்மை.
அந்த பெண்மணி மேலும் கூறினார்.
எனது துனைவர் சில நாட்களுக்கு முன்னால் விபத்தில் தனது கால்களை பரி கொடுத்தார் ஆனால் இன்று நான் சென்னையில் ஒரு ஆடை தயாரிக்கும் நிறுவநத்தில் பணிபுரிந்து எனது குடும்பத்தினை நடத்தி வருகிறேன் உண்மையில் அன்று அவ்விபத்தில் இறந்தவர்கள் பெரும்பாலும் இளைஞ்சர்கள்.
அதிகம் படிக்காத பெண் நான் எனக்கு இருக்கும் தன்னம்பிக்கை கூட அவர்களுக்கு இல்லாது போனதே எல்லாத்திற்க்கும் காரணம் இந்த இலவசங்கள்தான்.
அரிசி இலவசம், அடுப்பு இலவசம், T.V இலவசம் என இந்த இலவசப் பொருள்களை வாங்கி வைத்துக் கொண்டு ஒரு வட்டத்துக்குள் வாழ்ந்து வாழ்வின் முன்னேற்றத்திற்க்கு உழைக்காத சோம்பேரிகாலாக மாறிக்கு கொண்டு இருக்கிறார்கள் அதுதான் இத்தனை உயிரழப்புக்கு காரணம் என சொல்லி கலங்கினார்.
இந்த இலவசங்கள் நம் முன்னேற்றத்திற்க்கு மறைமுகமான முட்டுக்கட்டையாக அதனை நம்பி வாழ்கின்ற மக்கள் சோம்பேரிகலாக
தங்கள் உண்மை இயல்பினை, தன்னம்பிக்கையினை, உழைத்து உண்ணுகின்ற மகத்துவத்தை மறந்து வருகின்றோம்.
அந்த பெண்மணி கூறியது போல் அவருக்குள் இருக்கின்ற தன்னம்பிக்கை நமக்குள் எங்கு இருக்கிறது தேடுங்கள். இன்றும் சாலையோரம் 60 வயது ஆனாலும் சிறு தொழில் செய்து பிழைக்கின்ற முதியவர்கள் இருக்கையில் இந்த முதுகெலும்பு இல்லாத வாழ்க்கை நமக்கெதற்க்கு.
எனது மகன் நல்ல வேளையிலிருந்தாலும் உழைக்காமல் உண்ணப் பிடிக்கவில்லை என கூறுகின்ற அவர்கள் வார்த்தை நமது வாழ்வாக வித்திடுங்கள். வண்ணமயமான வாழ்வினை வாழ்ந்து வனப்பான சூழலினை உருவாக்க.
Tuesday, 25 December 2012
Tuesday, 11 December 2012
ஆளுமைத்தன்மையினை தாண்டிய மனித நேயம்
அது தீபாவளியை ஒட்டிய ஒரு நாள். பேருந்தில் என்றும் இல்லாத அளவிற்க்கு அதிகமான கூட்டம். அந்த நெரிசலில் சிக்கிக் கொண்டு திணறிய பயணத்தில் டிரைவரின் எதிர்பாராத பிரேக்கில் ஒரு சிலர் தடு மாறி கீழே விழுந்து எழுந்தனர்.
அந்த நிலையாமை முடிந்து இயல்பு நிலைக்கு திரும்பிய அடுத்த கணம் இந்த மரண ஓலம் ஒலித்தது "எனக்கு இருந்த ஒரே மகனை கொன்று விட்டாளே என" கத்திய ஒரு தாயின் துயரக் குரல் கேட்டு துடித்த இதயங்கள் குழந்தையின் முகம் பார்க்க.
அதன் கண்கள் உயரே சென்று இருந்தன. மூர்ச்சையான நிலை அங்கிருந்தவர்களால் தண்ணீர் கொடுக்கப்பட்டது. பேருந்து அந்த இடத்திலேயே நிறுத்தப்பட்டு அந்த குழந்தையும் தாயாரும் இரு சக்கர வாகனத்தில் அனுப்பி வைக்கப்பட்டார்கள்.
இது நடந்து கொண்டிருக்கையிலே அந்த தாயின் தாயார் எங்கே அந்த கொல காரி எனது மாமா S.I ஆக இருக்கிறார் நான் அவளை சும்மா விட மாட்டேன் என ஆக்ரோஷ்மாக கத்த ஆரம்பித்துதார்.
பயணிகளின் மறைவில் நின்றிருந்த பெண்மணியின் கண்களில் இருந்து கண்ணீர் பொல பொலவென சரிந்தன நான் முன்னமே குழைந்தை இல்லாத வலியில் வாழ்பவள் நான் எப்படி இன்னொரு குழந்தையை கொள்வேன்.
பிரேக்கு அடிக்கப்பட்ட நிமிடத்தில் சற்று நிலை தடுமாறி அவர்கள் மீது லேசாக சாய்ந்துவிட்டேன் அவ்வளவுதான் என தேம்பித் தேம்பி அழ அங்கிருந்தவர்கள் நிலைமயை புரிந்து கொண்டு அந்த பெண் மணியை அந்த பக்கமாக செல்ல சொல்லிவிட்டு அவள் ஆங்கேயே இறங்கிவிட்டதாக கூறிவிட்டார்கள்.
அதன்பிறகு ஆக்ரோசமாடைந்த தாய் மருத்துவமனைக்கு முன் இறங்கி விசாரிக்க அந்த குழந்தை நன்றாக இருப்பதாகவும் அது மூச்சடைப்பால் ஏற்ப்பத்ததல்ல உள்ளுக்குள் அந்த குழந்தையின் உடல்நிலை பதிக்கப்பட்டிருந்ததாகவும் தெரியவந்தது.
இங்கு காவல் துறை என்னும் ஆளுமைத்தன்மை மேலோங்கியிருந்தாலும். மனிதத்தில் இன்றும் உயிருடன் இருக்கின்ற மனித நேயத்தில் காக்கப்படுகின்ற வலிமை குறைந்த ஊனின் வாழ்வும் அது ஆளுமைத்தன்மையை விட உன்னதமானது என்பதும் விளங்கும்.

Subscribe to:
Comments (Atom)