Saturday, 16 November 2013

கட்டுப்பாடுகளை தாண்டிய கண்ணியம்

       சிறுவன் ஒருவனின் தந்தை மிகவும் மரியாதைக்குறியவர். தன்னை போலவே தனது மகனும் இருக்க வேண்டும் என்ற ஆவல் அவருக்கு சற்று அதிகமே இருந்திருந்ததது. நிறைய கட்டுப்பாடுகள் அவன் சுதந்திரம் அதற்குள் சிக்கிக் கொண்டது. அவன் செய்யும் சிறு  தவறுகளும் அவனை மிகப் பெரிய தண்டனைக்கு உள்ளாக்கியிருந்தது.

     அவன் நாட்கள் நகர்ந்தன நரகமென. கல்லூரிப் பருவமும் வந்தது தாய் தந்தையினை பிறிந்து இருக்க வேண்டிய நிர்பந்தம். அது முதலில் அவனை வாட்டினாலும் அவன் சுதந்திரம் அவனுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை தகர்த்திக் கொள்ள வழி வகுத்தது.

     தன் பிள்ளை நன்கு படித்து தன்னை போல் நல்ல மரியாதைக்குரியாவனாக வாழ்வான் அதற்க்கான விதையினை  விதைத்துவிட்ட நிம்மதியில்,  அவன் தந்தை வாழ்ந்து கொண்டிருக்க. அழைப்பு வந்தது தன் மகனின் உடல்
எடுத்துச் செல்ல.

     இத்தந்தைக்கு ஒன்றும் விளங்கவில்லை பிள்ளையை பறிகொடுத்த பதற்றத்தில் அங்கு உள்ளவரிடம் சென்று கேட்க அவனுக்கு நிறைய தீய பழக்கம் இருந்ததையும் ஏதோ ஒரு அற்பமான தோல்விக்கு அவன் உயிர் பிரிந்ததாகவும் தெரியவந்தது.

     அன்று முதல் அவர்  சிறுவர்களை அடித்தால் நடுங்க வைக்காதே அன்பினில் வாழ கற்றுக் கொடு. கட்டுப்பாடுகளை அதிகம் விதைக்காதே கண்ணியத்துடன் வாழக் கற்றுக் கொடு என்பாராம் அன்று முதல் இவ்வுலகம் அவரை பிள்ளையை பறிகொடுத்த பைத்தியம் என அழைக்க ஆரம்பித்துவிட்டது.

     உலகில் எல்லோரின் விருப்பங்களை நிறைவேற்ற நினைப்பவன் வெற்றியாலனாய் இருக்க முடியாது என்பார்கள்.   

    கட்டுப்பாடுகள் அவசியம் தான் அதற்காக அதனை மட்டும் விதிக்கத் தெரிந்த அது வளர்ச்சியினை தடுக்கும் என்ற எண்ணமும்,  சிறு தவறானாலும் ஒருவரை ஒருவர் பழித்துக் கொள்ளும் எதிர்மறையான சூழலில் மூச்சி முட்டி இறப்பதற்குள், அதனை விடுத்து விலகிச் சென்று கண்ணியத்துடன் வாழக் கற்றுக் கொள்ளுங்கள். அது உங்களை சுமந்தவர்களின் மன நிம்மதியினை நிச்சயம் குறைக்காது.

     மனிதம் விழைவது இங்கே விழுகையில் வலுவுட்டும் கரங்களைத்தான் விழுந்தபின் துளைக்கின்ற வல்லுருக்களை அல்ல.  நீங்கள் வாழுகின்ற சூழல் உங்கள் சுதந்திரத்தை பறிக்காத, விருப்பங்களுடன் ஒத்துப் போகின்ற, வளர்ச்சியினை தடுக்காததாக இருக்கட்டும் அதே சமயம் உங்கள் செயல்பாடுகள் அவர்களுக்கு இதே நிலைமையினை கொடுப்பதாகவும்  இருக்கட்டும்.  

Saturday, 21 September 2013

கடந்தகால கஷ்டங்களை தாண்டிய நிம்மதி

      ஓர் குழந்தை பிறந்தது, கிருஷ்ண ஜெயந்தி என்னும் நன்னாளில் நாளில், ரோகிணி என்னும் நட்சத்திரத்தில்... அக் குழந்ததையின் மாமா அவர்கள் மிகவும் வசதி படைத்தவர் என்றாலும் தான் என்ற அகந்தையில் சிக்கிக் கொண்டிருந்தவர்.

     அப்பொழுது அவர்களது குடும்ப ஜோதிடர் கூறினாராம் இந்த குழந்தை நிம்மதியாய் இருக்க இருக்க உங்கள் நிம்மதி குறையும் என்று . அன்று முதல் அக் குழந்தையின் மாமா தன் சந்தோசத்தை விட,  அக் குழந்தை சந்தோசமாக இருக்கக் கூடாது என்பதில் மிகவும் கவனத்துடன் இருந்தாராம்.

     பள்ளி பருவம் தொடங்கி கல்லூரி பருவம் வரையில் அவனுக்கு பிடித்தவைகள் அவனுக்கு கிடைக்கக் கூடாது என்பதற்காக எல்லாவற்றையும் செய்தாராம்.   இந்த மாணவனது வாழ்க்கை ஒரு மாதிரியான விரத்தியில் சென்று கொண்டிருக்க அவன் பார்த்து இரசித்த ஒரு முதியவரின் நட்பு கிடைத்தது

     அவரிடம் இந்த மாணவன் கேட்டான் அய்யா எப்படி இந்த வயதிலும் இவ்வளவு சந்தோசமாக இருக்கிறீர்கள் என்று. அவர் சொன்னாராம் தம்பி ஒன்றை மட்டும் தெறிந்துக்கொள் வாழ்வில் சந்தோசத்திற்காக, நிம்மதிக்காக போராடாதீர்கள் அது நமக்கு கிடைக்காது

[Don’t force to get it,  Let it flow] 


அது நமது வாழ்வில் இயல்பாய் நிகழக் கூடியது.அன்று முதல் அவன் சந்தோசத்தை தேடி ஓடுவதில்லையாம் ஆனாலும் நிம்மதியான அவன் எண்ணத்தில் இச்சந்தோசம் புகுந்து கொண்டது. 

      அன்று முதல் அவன் மாமாவால் இவன் சந்தோசத்தை குறைக்க முடிவதில்லை. உண்மையில் நாம் ஒரு கனம் சிந்தித்து பார்த்தால் நமது வாழ்க்கை எப்படி தொடங்கியது என்பதில் இல்லை நாம் என்னவாக நடக்கிறோம் என்பதில் தான் இருக்கிறது.

It doesn’t matter how we started,  it matters what we choose to be…

Saturday, 14 September 2013

நட்பின் நரம்புகளும் சந்தோசத்தின் உறைவிடமும்

         ஒரு நாள் எனது நண்பர் ஒருவர், தனது நண்பருடன் பொருட்கள் வாங்குவதற்க்கு சென்றிருந்தார். அங்கு சென்ற எனது நண்பர் எனக்கு அது வேண்டும் இது வேண்டும் என எடுத்‌துக் கொண்டிருக்க அவரது நண்பர் ஓர் இரு பொருளை எடுத்துவிட்டு நான் முடித்துவிட்டேன் என கூறினாராம்.

       அதற்கு எனது நண்பர் என்னடா காசு இல்லையா வேண்டியதை எடுத்துக்கோ அப்புறமா திருப்பி கொடு, நான் பணம் கொடுக்கிறேன் என்றாராம் அதற்கு மற்றொருவர் எனக்கு தேவையில்லை. நீ உனக்கு தேவையானவற்றை எடுத்‌துக் கொண்டு வா என பொன் சிரிப்புடன் கூறிவிட்டு அங்கிருக்கும் பொருட்களின் தரம் மற்றும் விலையினை விசாரிக்க ஆரம்பித்தாராம்.

       இந்த மற்றொறு நண்பர் தனக்கு தேவையான இன்னும் சிலவற்றை எடுத்‌துக் கொண்டு போகலாம் என்றாராம்.   அப்பொழுது அவர் நண்பர் இவரது அருகில் வந்து தனது பர்சில் இருந்த பணத்தினை எடுத்துக் கொடுத்தாராம், இது நான் முன்னமே உன்னிடம் வாங்கியதுதான்.

       அப்பொழுது அவர் சொன்னாராம் நீ நெனைக்கிற மாதிரி எனது சந்தோசம் இந்த பர்சுக்குள்ளேயோ அல்லது அந்த பொருளோடோ ஓட்டியிருக்கவில்லை நண்பா!.

        அது நான் வாழ்கின்ற வாழ்வில் நான் பழகுகின்ற உன் நட்பில் இருக்கிறது, வருமானம் குறைவெனினும் எனது வருவாயில் வாழுகின்ற துணிவில் இருக்கிறது,

       இறைவன் எனக்கு உன்னை போன்ற நல்ல மனம் படைத்த நண்பர்களை கொடுத்திதிருக்கிறார், சின்ன சின்ன ஆசைகள் இருந்தும் அளவாய் வாழ யோசிக்கின்ற நல்ல உறவுக்ளை கொடுத்திதிருக்கிறார் என கூறினார்.

      இந்த நண்பர் காலப்போக்கில் தான் அடைந்திருந்த மாற்றத்தை உணர்ந்து கன்னத்தில் அறைந்தார் போல அதிர்ச்சியில் நின்றிருக்க, அதையெல்லாம் விடுடா என தனது பழங்க்கால சுவாரசியமான நிகழ்வுகளுக்கு கொண்டு சென்றாராம்.

      எது புரிந்ததோ இல்லையோ எனது நண்பருக்கு ஒன்று மட்டும் தெளிவாக தெரிந்ததாம், நாம் எல்லோரும் விரும்புகின்ற இந்த சந்தோசம் எதனுடனும் ஓட்டியிருக்கவில்லை அது நம் எண்ணங்களின் அலைவரிசையில் இருக்கிறது அதில் நாம் ஏற்படுத்துகின்ற ஒழுக்கத்தில் இருக்கிறது. இது மட்டும் ஒழுங்குபடுத்தப் பட்டால் உலகத்தில் ஏற்றத்தாழ்வு என்ற வரம்பினை ஏற்ப்படுத்தும் ஊன்கள்  கூட யோசிக்கும் என்பது தின்னம்...

Monday, 19 August 2013

ஏதார்த்தமும் எளிமையும்

        ஒரு நாள்; ஓர் அலுவலகத்தில் சிறப்பு விருது வழங்கும் விழா மேடையில் சில வெற்றியாலர்கள் குழுமியிருக்க அங்கே, வந்தவர்களிடம் விழாவின்  தலைவர் அவர்கள் ஒரே கேள்வியினை பலரிடமும் கேட்டார். உங்கள் வெற்றிக்கு வழி காட்டி யார் என்று.

      அதற்கு பலரும் தங்கள் துறையில் தலை சிறந்த தலைவர்களையும் மேதைகளையும் அடிக்கிக் கொண்டு, அவர்களது புகழ் பாடிக் கொண்டிருக்கையில். அம்மையார் ஒருவர் சொன்னார்.

     எனது அன்றாட வாழ்வினில் நான் கண்டு உள்வாங்கிக் கொண்ட எனது தந்தையார் செயல் தொடங்கி என் அன்றாட வாழ்வில் நான் உயர்வாய் நினைக்கின்ற ஒவ்வொரு ஜிவனும், காயத்தால் என்னை கடினப்படுத்திய எனது தோல்விகள், வெற்றியின் வீரியத்தில் அறிந்து கொள்ளா பாதை வழி.

      இப்படி  எத்தனை எத்தனையோ ஊக்கங்களும் அதில் ஒளிந்திருந்த உற்ச்சாகமும்,  எனக்கு வழி காட்டியது என்றார். அதற்கு அங்கிருந்தவர்கள் சிரித்ததுக் கொண்டு அப்புறம் எப்படி அம்மையார் இந்த துறையில் சாதிக்க முடிந்ததாம் என்றார்கள் கிண்டலும் கேலியுடன்.

      அதற்கு அவர் ஆமாம் நான் எனது துறையில் சிறந்து விளங்கிய தலைவர்களின் புத்தகங்களை படித்திருக்கிறேன் அவைகள் என்னை பக்குவ படுத்தியிருக்கின்றன. ஆனால் தண்ணீரும் கல்லும் சேர்த்து சுடுகின்ற கலவையாய் உருவாக்க முடியுமா என கேட்டாள்?

     என் தந்தையார் எனது வீட்டிற்கு  சுண்ணாம்பு அடிக்க கிளிஞ்சல்களை தண்ணீருடன் கலக்கிய கலவைதான், என் கண் முன்னே தோன்றும் அதுதான் நான் முடிவெடுக்க வழிகோலும். இந்த உள்ளுணர்வுகள் நான் விரும்பி ஏற்றுக் கொண்ட மாற்றங்கள் (ம) தடுமாறிய தருணங்களில் வந்த தாக்கங்கள், என வாழ்வின் ஒவ்வொரு நொடிப் பொழுதிலும் நான் அறிந்து கொண்ட எளிமையும் எதார்த்தமும்தான்  என்னை வழி நடத்தியது என நம்புகிறேன் என்றார்.

     அங்கிருந்த கூட்டத்தின் சல சலப்பு நின்று போனது,  நடுவர் வாயசைக்க தொடங்கினார் இங்கிருக்கின்ற நிறைய வெற்றியாளர்கள், நிறைவான காரணங்களைச் சொன்னாலும்.  எளிமை என்கின்ற எதார்த்தத்தின் அழகும் அது தருகின்ற ஆழ்மன  நிம்மதியின் மகத்துவமும் நிச்சயம்; நாம் எல்லாரும் விரும்புகின்ற விருட்சம்தான் என முடிக்கின்றார் புன்னகையுடன்.

Sunday, 11 August 2013

உள் மன அமைதியின் மகத்துவம்

       ஒரு ஊரில் மன அமைதியுடன் நிம்மதியாக வாழ வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர், செய்வதறியாது தடு மாறிக் கொண்டிருந்தார் எல்லோரும் தன்னை எதிர்ப்பதாகவும், என்னால் ஏன் மற்றவர்களுடன் ஒத்து போக முடிவதில்லை. இயல்பாகவே எனது நடத்தையில் ஏதேனும் மாற்றம் தேவையா என்ற சிந்தனை, என பல்வேறு வகையான எண்ணங்களில் மன உலைச்சலுக்கு ஆலாகியிருந்தார்.

      இந்த மனப் போராட்டத்தில் வாழ்வின் சந்தோச நிமிடங்கள் குறைவதாக மட்டும் உணர்ந்திருக்கையில்,  பலரிடம் கேட்டும் பலனில்லாமல் பாதை நகர்ந்து கொண்டிருக்கையில்.

      ஒரு நாள் ஒரு முதியவரை ஏதார்ச்சியா தான் பயணம் செய்த பேருந்தில் பார்க்கிறார். அன்று அவருக்கு தெரிந்திருக்காது அது அவர் வாழ்வின் பாதையை மற்ற வந்த முக்கிய மூன்று மணித்துளிகள் என்று.

      அப்பொழுது அவர்கள் பேசிக் கொண்டிருக்கையில், இவர் தனது மன உலைச்சலைப் பற்றி சொல்ல அந்த பெரியவர் சிரித்ததுவிட்டு கூறினார்.
தம்பி நம் உடல் உருவாக்கும் நிழலை விட குறைந்த தொலைவில் நம்முடனே இணைந்திருக்கும் நம் உடலும் மனமும் சில நேரத்தில் நாம் சொல்வதைக் கேட்பதில்லை.

      நீ வெளியில் இருக்கின்ற, என்ன நோக்கத்துடன் படைக்கப்பட்டதென்று தெறியாத ஒன்று என்னை எதிர்க்கிறது, நான் சொல்வதை கேட்பதில்லை என நினைத்து வருத்தப்படுகின்றாய். ஒன்றினை மட்டும் நினவில் வைத்துக்கொள் உனக்கு சாதகமான சூழலினை உனக்குள் மட்டும்தான் உருவாக்க முடியும் அது வெளியுலகில் தேடி கிடைப்பதில்லை.

      மற்றவர்களை உனக்கு சாதகமானவர்காளாக மாற்ற நினைக்காதே உந்தன் எண்ணங்களின் அலைவரிசையில் படைக்கப்பட்ட ஜீவன்கள் வாழுகின்ற சூழலில், உனக்குள் சின்ன சின்ன மாற்றங்களை உருவாக்கி  அதில் உன்னை வழி நடத்தக் கற்றுக்கொள், அதுவே உனக்கு சந்தோசாமாக வாழுகின்ற சூழலினைக் கொடுக்கும் என்றார்.

      இந்த மனிதர் தான் செய்து கொண்டிருந்த தவறினை உணர்ந்து, தன் உள் மன சூழலினை சரி செய்கின்ற செயலினை [Inner Engineering]
தொடங்கி. இன்று சந்தோசாமான வாழ்வினை வாழ்த்து கொண்டிருக்கிறார்.

      நாம் கற்றுக் கொண்ட பின் வாழத்தொடங்கவில்லை தவறுதல்
நடக்காமல் இருப்பதற்க்கு, நீங்கள் உங்களுக்குள் எற்படுத்துகின்ற மாற்றங்கள் உங்களுக்கு மன நிம்மதியினையும் சந்தோசாத்தையும் கொடுப்பதாக இருக்கட்டும்.

Saturday, 29 June 2013

எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

     நண்பர் ஒருவர் தனது சிறிய தந்தைக்கு பிறந்த குழந்தைக்கு உடல் நிலை சரியில்லாததால் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்தது செல்கிறார். அப்பொழுது அங்குள்ள மருத்துவர்கள் குழந்தையின் நிலமை கவலைக்கிமாக இருக்கிறது சீிக்கிரம் பெரிய மருத்துவமனைக்கு அழைத்து செல்லுங்கள் என்றார்கள்

      அந்த சமயத்தில் அதனைப் பார்த்துக் கொண்டிருந்த ஒரு நபர் அந்த நண்பரிடம் சென்று ஏதாவது ஆச்சினா சொல்லுங்க நம்ம வண்டியில் ஊருக்கு போயிரலாம் என்றார் தது அமரர் ஊர்தியினைக் காட்டி.  அந்த நண்பர் முகம் சிவந்து அந்த இடம் விட்டு அகன்றார் அது மருத்துவமனை என்பதால். காசுக்காக எவ்வளவு அருவருக்கத் தக்க எண்ணம்.

       சில  நாட்களுக்கு முன்பு ஒரு ஆட்டோ டிரைவர் ஒருவர் தனது நண்பர் "எப்படி இருந்தது அந்த பயணம் பணம் கரைந்திருக்குமே?". என கேட்கையில் அது உண்மைதான் ஆனால் அந்த சந்தோச நினைவுகள் எனக்குள் சில காலம் உழைக்கின்ற ஆற்றலை கொடுத்திருக்கிறது என சொன்னார் சிரித்த முகத்துடன். 

       பணம் பதவிக்கு பலம் எதற்க்கும் அடிபனியாத இந்த சந்தோசம் நம் அழகான எண்ணத்தில்தான் அமைந்திருக்கிறது. நான் கண்டு வந்த சில நூல்கள் சொல்லின "உங்கள் சந்தோசம் நீங்கள் வரையறுத்ததாக இருக்கட்டும் அது உங்களுக்கு முழு மன திருப்தியை கொடுக்கும்".

      சந்தோசம் சாத்திரமல்ல மற்றவரின் சந்தோச பதிவுகளை பாதையாக்கிக் கொள்ள அது நம் நடைமுறையில் தோன்றுகின்ற தனித்துவமான உணர்வு. அவர்கள் செய்வது போல செய்வதுதான் சந்தோசம் என்ற எண்ணத்தை விடுங்கள் ஏனெனில் வாழ்ந்து முடித்து வாழ்பவர்கள் இங்கில்லை.

     ஒன்றை மட்டும் மனத்தில் கொள்ளுங்கள் நமது நீண்ட கால சந்தோசம் நமது நிகழ்காலத்தில் தோன்றுகின்ற எண்ணங்களால் மட்டும் நிர்ணயிக்கப் படுவதில்லை. அதற்கான அடிப்படை மூலம் நம் எண்ணத்தில்தான் இருக்கிறது அது அழகானால் நாம் வாழ்வு அழகாவது தின்னம்.

Saturday, 11 May 2013

கலாச்சார நினைவு சின்னங்களும் அதன் அவசியமும்


  சில நாட்களுக்கு முன்பு நான் சென்று வந்த ஊரில் நான் பார்த்த இந்த தேரினைப் பார்த்தவுடன் உங்களுக்கு என்ன தோன்றுகின்றது. சிறு கனம் என்னை என் நினைவுகள் அந்த குருச்சேத்திரப் போருக்குத்தான் கொண்டு சென்றது.

  கிருஷ்ணர்  தேரினை செலுத்த  அதில் ஆக்ரோசத்துன்  நின்றிருந்த அர்ச்சுனன்,  படை சிறியதாய் இருந்தாலும் உண்மையையும் ஒரு ஆயுதமாய் கொண்டு போராடிய கூட்டம் மறுபுறம், செய்தது துரோகமானாலும் துடிக்காத இதயத்தில் தோன்றிய கௌரவத்தை காக்க துடிக்கின்ற கௌரவர்கள், கருணையே உருவான கர்னனின் கம்பீர தோற்றத்துன் நின்றிருந்த காட்சியும் அங்கே அறிவுறுத்தப்பற்றட்ட நன்னெறிகள் என் கண் முன்னே வந்து சென்றது.


   இன்று எத்னை எத்தனையோ அறுவருக்கத் தக்க விஷயங்கள் நடந்து கொண்டு இருக்கின்றன அதற்கு நமக்குள்ளே இதுதான் காரணமா அதுதான் காரணமா என ஒருவருக்கு ஒருவர் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறோம்

ஒரு ம் யோசித்துப் பார்த்தால் இதற்கெல்லாம் காரணம் மேற்கத்திய கலாச்சாரத்தின் தாக்கமும் நாம் மறந்து விட்ட நம் கலாச்சாரத்தின் சில நல்ல விஷயங்களும்தான் காரணம் என்பது தெறியவறும் அதற்காக நான் மற்ற கலாச்சாரத்தினை பின்பற்றாதீர்கள் என கூறவில்லை

  எல்லா கலாச்சாரத்திற்குள்ளும் அதற்கே உறித்தான நன்மை தீமைகள் இருக்கின்றன, ஆனால் இன்று நாம், நமது கலாச்சாரத்தில் இருக்கின் நல்ல விஷயங்களை இழந்திருக்கிறோம் மேலும் நமது உணவு, உடை, செயல்பாடுகளில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய மாற்றங்களால்தான். த்தகைய அருவறுக்கத்தக்க நிகழ்வுகள் நந்தேரிக் கொண்டிருக்கின்றன.

     இன்று கோயிலுக்கு செல்கின்ற மக்கள் கூட்டத்தை விட இருட்டுக் கடைக்கு செல்கின்ற கூட்டம் அதிகரித்திருக்கிறது. உணவுகளில்[ Negative Pranic Food ] உணர்ச்சிகளை தூண்டும் உணவுப் பொருட்கள் அதிகரித்திருக்கின். மக்கள் தொகை குறைவாக உள்ள நாட்டில் கண்டு எடுக்கப்பட்ட கலாச்சாரம் மக்கள் தொகை அதிகம் உள்ள நாட்டில் ஒவ்வாமை எற்படுத்திக்கொண்திருக்கிறது

    இங்கு தவறுக்கு காரணம் ஆணா பெண்ணா என்ற வாதம் உபயோகமற்றதாக தெரிகிறது.  இன்று அவசியமானது நமது கலாச்சாரத்தில் நாம் இழந்திருக்கிற நல்ல விஷயங்களை கண்டெடுத்து  அதனையே உங்களது பழக்கமாக்கிக் கொள்ளுங்கள். முடிந்தால், இந்த தேரினைப் போன்று நம் கலாச்சாரத்தினை நினைவு படுத்துகின்ற நினைவுச் சின்னங்களை உங்களுன் வைத்திருங்கள், அது நம் கலாச்சாரத்தின் நல்லவற்றை நினைவுபடுத்திய வண்ணம் இருக்கட்டும், இது நிச்சயம் நமது சமுதாயத்தில் நல்ல மாற்றத்தை கொடுப்பது திண்ணம்.