Saturday, 16 March 2013

காலத்தே கிடைக்கின்ற அறிவும் அதன் பயன்பாடும்

           அது அழகான மாலை பொழுது.  முதிர்வின் விளைவால் ஆசான் விடை கேட்ட நேரம்.அந்த கல்லூரியின் வரலாற்றிற்க்கு வண்ணம் கொடுத்தவர். உண்மையில் குறைந்தது 50க்கும் மேற்ப்பட்ட மாணவர்கள் அவர் உதவியால் அறிவியலில் Ph.D.,  முடித்திருப்பார்கள்.

          எல்லோரும் தங்களின் மனதில் இருந்தவற்றை  கூறி வாழ்த்தினார்கள் அப்பொழுதுதான் அவரை மணந்தவற்க்கு வாய்ப்பளிக்கப்பட்டது.  அவர் இவ்வாறு ஆரம்பித்தார் ஒரு நாள் எங்கள் வீட்டில் மீன் விளக்கினை சிரமைக்கும் பலகை  பழுதடைந்திருந்தது.

          நான் அவரிடம் சரி செய்யும்படி கேட்டுக் கொண்டேன் அவர் முயற்ச்சி செய்து சரிசெய்ய முடியாமல்  மின்பொறியாளரை  அழைத்து சரி செய்ய சொன்னார் அவர் வந்து 5 நிமிடத்திற்க்குள் சரி செய்துவிட்டு ஆங்கிருந்து சென்றுவிட்டார், 

         எனது கணவரை அசிங்கப்படுத்துவதற்க்காக சொல்லவில்லை அவருக்குள் எவ்வளவு நல்ல விஷயங்கள் இருக்கிறது எனக்கு தெரியும்
ஆனாலும் நான் இங்கு சொல்வது ஏதார்த்தமான விஷயம்.

         நாம் கற்க்கின்றவை நடை முறையில் நமக்கு உதவுவதாக இருக்க வேண்டும். நல்ல அறிவு நல்லவற்றிற்க்கு பயன்பட வேண்டும், உலகில் வாழுகின்ற எண்ணத்தை அதிகப்படுத்துவதாக இருக்க வேண்டும்.
அடுத்தவரை பழிக்க, தீயவற்றிற்க்காக பயன்படுகின்ற அறிவு அவனிடமிருந்தும் அவன் பாமரனே என முடிக்கிறார்.

          இதனை கேட்டுவிட்டு அந்த ஆசானின் கண்ணில் கண்ணீர் பொல பொலவென சரிந்தன "நான்  தோல்வியுற்றிருப்பதை தெரியாமலே தோள் தட்டிக்கொண்டிருக்கிறேன்"

         இந்த நிகழ்வு 10 வருடத்திற்க்கு முன்பு நடந்திருந்தால்,  நடை முறையில் உதவுகின்ற அறிவினை சேர்த்து உங்களுடன் பகிர்ந்து கொள்ள முயற்ச்சித்திருப்பேன் என கர்வம் பேசாமல் கனத்தக் குரலுடன் கூறினார் 

"மாணவர்களே நான் கற்ப்பித்த பாடங்களை விட என் வாழ்வு ஒரு சிறந்த பாடமாக  இருக்கட்டும்.  நாவு நரம்புடன் படைக்கப்படவில்லை நல்லவற்றை மட்டும் பேசுவதற்க்கும், கேட்ட வார்த்தையில் கூனி குறிகிக் கொள்வதற்கும். நல்ல விஷயமுன்னு தெரிந்தால் எதிர் திசையில் காற்று பாலமாக அடித்தாலும் நடுங்காதே காலம் மாறி,  திசை மாறிய காற்றில் வீறு நடை போடுகின்ற காலம் வரும்."

             நான் நல்ல விதையை இங்கு விட்டு செல்கிறேன் எனது மனைவியின் ஏதார்த்தமான கேள்விக் கனையால், என்ற மன நிம்மதியுடன் தனது மாணவச் செல்வங்களுக்கு நன்றி கூறி  அங்கிருந்து விடை பெறுகிறார்.

No comments:

Post a Comment