Saturday, 13 April 2013

நல் வாழ்விற்க்கான தூண்டுதல்

          ஒருஇரயில்பயணத்தின் போது ஒருவர் தனது நண்பரிடம் தனது மகன் Diploma படிப்பதாக கூறினார் அதற்க்கு அவர் நல்ல படிப்புதான் ஆனால் படித்து முடித்து விட்டு வேலைக்கு சென்றபின் தொலை தூர கல்வியில்  B.E படிக்கச் சொல்லுங்கள் என்கிறார். 

         அடுத்த நிமிடம் அது சரிதானா தம்பி என என்னைக் கேட்க நான் ஆமாம் என சொல்வதற்க்குள் அந்த தந்தை சொன்னார் "இதுவே என் தகுதிக்கு    அப்பாற்பட்டது அவன் வேலைக்கு சென்று படிப்பதாக இருந்தால் படிக்கட்டும் இதுவே வங்கியில் கடன் வாங்கிதான் படிக்க வைக்கிறேன்.

          அதுவும் எத்தனையோ வங்கியில் சுய நலன்களுக்காக கடன் கொடுக்க மறுத்தாலும் தனது வாங்கியின் மேனேஜர் பெயரினைக் கூறி அந்த புண்ணியவான் நல்லா இருக்கணும் அவர் பசங்கலெல்லாம் நல்லா இருக்கட்டும் எங்கள் வாழ்வில் விளக்கேற்றிய பெரிய மனிதன்"
என கூறிவிட்டு கலங்க ஆரம்பித்து விட்டார்.

          உண்மையில் உலகத்தில் நல்வழியில் நடப்பது கொஞ்சம் கஷ்டமான விஷயமாக இருந்தாலும் அதற்க்கு சிறு சிறு ஆசைகளை இழக்க வேண்டியிருந்தாலும் இந்த மாதிரியான வாழ்த்துகள் நிச்சயமாக அவருக்கு மன நிம்மதியையும் சந்தோசத்தையும் கொடுக்கும். 

         தீமைகள் அதிகமிருக்குமிடத்து நன்மை வாழ்வது கஷ்டம்தான் என்றாலும் நன்மை இருக்குமிடத்து தீமைகள் இருப்பதும் கஷ்டம்தான்.  தீமைகள் உங்களை சூழ்ந்து கொண்டால் இதனை நினைவில் கொள்ளுங்கள்.

        ஒரு நாள் புத்தர் நடந்து சென்ற பாதையில் அவரை பிடிக்காதவர் நின்று கொண்டு சரா மாறியாக திட்‌டினாராம் புத்தர் சிரித்ததுவிட்டு ஆங்கிருந்து விலகி சென்றாராம் அதனைப் பற்றி மக்கள் அவரிடம் கேட்க புத்தர் சொன்னாராம்.

        உங்களுக்கு யாராவது அன்பளிப்பு கொடுத்தால் அது பிடித்தால் தானே ஏற்றுக் கொள்வீர்கள் அது போலத்தான் அவன் கொடுத்த அன்பளிப்பு எனக்கு ஒவ்வாதது மேலும் அது எனக்கு பிடிக்கவில்லை அதனால் அது என்னுடையதில்லை  என கூறிவிட்டு சென்றாராம். 

        நம்மால் எல்லாருக்கும் நல்லவராகவோ தீயவராகவோ இருக்க முடியாது அதுதான் எதார்த்தமும் கூட என்பதினை மனதில் கொண்டு நமக்கு ஒத்துபோகிற. பிடித்தவற்றை. தேவையானவற்றை ஏற்றுக்கொண்டும் தேவையற்ற, ஒவ்வாத, பிடிக்காதவற்றை எனதில்லை என்ற உணர்வுடன் நல்லனவற்றை நோக்கி பயனிப்போம்.  விடிகிற காலை நம் சந்தோசத்தின் விடியலாய் இருக்க.

No comments:

Post a Comment