Friday, 19 April 2013

விதைப்பதும் விளைவதும்

           நன்றாக வசதி படைத்தவர் ஒருவர் தன் தாய் தந்தையுடன் வசித்து வந்தார் நல்ல உழைப்பாளி ஆனால் தனது பெற்றோரை பாதுகாப்பதில் (ம) கவனித்துக் கொள்வதில் ஒரு சிறு தடுமாற்றம் இரக்கமும் சகிப்பு தன்மை இல்லாமை அவர்களை தனி அறையில் வாழ வைத்து வந்தார்.

          அவர்களுக்கென தனி அறை தனித்த பொருட்கள் அவர்கள் உபயோகப் படுத்தும் பொருட்களை கூட அவர் தொட மாட்டார் அவருடைய மனைவி இந்த காலத்து பெண்மனி மேலும் தன் சந்தோசத்தை மட்டும் பெரிதாக நினைத்ததுக் கொண்டு வாழ்பவள்.

         மகனின் மூலம் இவ்வாறு நடத்தப்பட்ட அவர்கள் பெறும் மன உழைச்சலுக்கு ஆலாகி ஒரு நாளில் இறந்து போயினர். அவர்களது இறுதி சடங்கு முடிந்தபின் அந்த அறையில் உள்ள பொருட்களையெல்லாம் எடுத்த எறிந்துவிட்டு அந்த பாத்திரங்களையெல்லாம் வெளியேற்றிக் கொண்டிருந்தார்.

         அதனைப் பார்த்துவிட்டு அந்த சிறுவன் ஓடிவந்து அப்பா அப்பா அவைகளை  ஏன் தூக்கி எறிகிறீர்கள். அவைகளையெல்லாம் அகற்றிவிட்டால் நான் உங்களை எங்கு தங்கவைப்பது எதில் சோறு போடுவது என கேட்டான்?

        விளையாட்டு பிள்ளை ஆனால் எதார்த்தமான கேள்வி "நாம் எதனை கொண்டு அடுத்தவர்களை அளக்கிறோமே அதனைக் கொண்டே நாம் அளக்கப்படுவோம்"  அந்த தந்தை  பேச முடியாமல் மலைத்துப் போய் அவ்விடத்திலே உட்கார்ந்து விட்டார்.

       மனிதம் நேர்மறை (ம) எதிர்மறை உணர்வகளோடு படைக்கப் பட்டிருக்கிறது.  ஏன் உலகம் போற்றும் தலைவர்கள் கூட சில எதிர்மறையான உணர்வுகளுடன் வாழ்ந்திருக்கிறார் ஆனால் அவைகள் குறுகிய வட்டத்துக்குள் வைக்கப்பட்டு  நேர்மாறையான உணர்வுகள் மட்டும் பரப்பப்பட்டன அதுவே அவர்களின் வெற்றிக்கும் தூண்டுதலாய் இருந்திருக்கிறது.

          ஒரு சிறு எதிர்மறையான உணர்வுக்கு உதாரணமாய் கோபம் இது நம் உள்ளத்தில் நினைத்த ஒன்று நிகழாத ஆதங்கத்தின் வெளிப்பாடு.  அது வந்தவுடன் அதற்க்கு காரணமானவர்கள் மீது கல்வீச காத்திருக்கிற காலம். அதற்க்காக சிதறடிக்கப்படுகின்ற நம் கவனச் சிதறல்கள் அதனால் நாம் இழந்துவிடுகின்ற நிகழ்கால நிமிடங்கள் என அடுக்கி  கொண்டே போகலாம்.

         ஆனால் நேர்மறையான நம் தாயின் அன்பு;  உலகில் எத்தனை உறவுகள் வந்தாலும் சரி செய்ய இயலாது என நினைக்க வைக்கிற அவளது அன்பும் அக்கறையும்   இப்படி எத்தனை எத்தனையோ நேர்மறை  (ம) எதிர் மறையான உணர்வுகள் நம்மில்.

        எது நமக்கு வெற்றியையும் நல்ல சந்தோசமான சூழ்நிலையையும் கொடுக்கும் எதனை இங்கு விதையாக விட்டுச் செல்லப் போகிறோம்  அதனால் என்ன விளையப் போகிறது என்ற விடை தெறியா வினாவிற்க்கு விடை தேடுகின்ற தாகமாய் விரைகிற காலம்.

No comments:

Post a Comment