Thursday, 25 October 2012

நல்லொழுக்கத்தில் நலிந்துபோகும் பழைய நம்பிக்கைகள்

                 ஒரு அழகான கிராமம், நன்றாக வறையறுக்கப்பட்ட தெருக்கள். அங்கு அதிகம் படிக்காவிட்டாலும் பாசத்தை மறக்காத மக்கள்.

அனுபவ அறிவினில்

          - தங்களை சரியாக வழி நடத்தவும்.
          - தங்கள் காலத்தை சரியாக பயன்படுத்தவும்.
          - காலனிலைகளை உணர்ந்து தொழில் புரியவும் .
          - உறவுகளுடன் வாழுகின்ற வாழ்வினை மட்டும் உயர்வாக 

               நினைக்க்கின்ற உன்னத வாழ்வையும் கற்றுக் கொண்டிருந்தனர் .

ஆனால் அவர்களது கல்வி அறிவு மட்டும் இருலாய் இருந்தது.

                படிக்கவேண்டுமானால் குறைந்தது 200 இலிருந்து 300 கிலோ மீட்டருக்கு அப்பால் தங்கள் குடும்பத்தினை விட்டு பிரிந்திருந்து படிக்க வேண்டியிருந்தது. அதனால் அங்கு வாழ்கின்ற மக்கள் தனது ஆண் குழந்தையினை படிக்க வைத்தாலும் தங்களது பெண் குழந்தைகளினை 10 ஆம் வகுப்பு அல்லது வயதிற்க்கு வந்த பின் நிறுத்துவது வழக்கமாக இருந்தது.

              அப்பொழுது வெளியே சென்று படித்துவந்த மாணவர்கள் சிலர் அங்கு வாழ்கின்ற மக்களுக்கு "பெண்கள் வெகுதுலைவிலிருந்தெல்லாம் படிக்க அங்கு வருவதாகவும் மேலும் அவர்கள் அங்குள்ள மக்களால் பாதுகாப்புடன் நடத்தப்படுவதாகவும் தெறிவித்தனர்" அதனை அங்குள்ள மக்கள் ஏற்றுக்கொள்ள மறுத்ததுடன் அவர்கள் முன்னோரு காலத்தில் நடந்த எதிர்பாராத விபத்தினை எடுத்துக்கொண்டு அதனை அவர்களிடம் விவரிக்க ஆரம்பித்துவிடுவார்கள்.

           உண்மையில் அது எதிர் பாராத விதமாகவோ அல்லது அந்த தனி மனிதத்தின் குறைபாட்டால் நிகழ்ந்திருக்கலாம் ஆனால் அந்த
நிகழ்வால் ஒரு ஒட்டுமொத்த சமூகமே பின்னடைவை சந்தித்தது.
இது காலம் காலமாக தொடர்ந்து கொண்டே இருந்தது.

           வெளியூர்களில் படித்து வரும் மாணவர்கள் விளையாட்டாக விவரித்தாலும். ஒன்றிரண்டு தைரியாமன பெற்றோர்கள் தங்கள் பெண்பிள்ளைகளின் மீது உள்ள நம்பிக்கையில் வெளியுருக்கு அவர்களை படிப்பதற்க்கு அனுப்புகிறார்கள்.

          அந்த உண்மை ஆன்மாக்களின்

              - நல்லொழுக்கத்தாலும் 
              - பின்னாளில் தங்கள் பெற்றோருக்கு உதவியவித்தாலும் .

         அக்கிராம மக்களின் பழம்பெரும் நம்பிக்கையினை தகர்த்தெரிந்து கல்லாமை என்னும் இருளினை அகற்றுகின்ற தீபத்தின் திரிகள் தூண்டிவிடப்பட்டது.  இன்று அந்த கிராமத்தில் இருந்து வெளியே சென்று படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை கனிசமாக உயர்ந்து கொண்டிருக்கிறது.

         அவர்களுக்கு தெரியாமலே அம்மக்களின் வாழ்வில் இருந்த அறியாமை இருளினை விலக்கி தேவையற்ற பழம் நம்பிக்கைகளைத் தகர்க்க உதவிய தூண்டுதலாய் அவர்களின் நல்லொழுக்கமும் நன்னடத்தையும்.

Monday, 1 October 2012

சந்தோசமென்னும் சரணாலயம்.

உலகத்தில் உள்ள அனைத்து உயிரினங்களின் இச்சையும் இன்பமாக வாழ வேண்டும் என்பதுதான். 

தடைகள்

 தன்னம்பிக்கை இல்லாமை:   நமக்குள் நம்மீது நம்பிக்கை குறையும் போது அடுத்தவர்களின் உதவியினை நாடவேண்டிவரும். நான் உதவுபவர்கள் உங்கள் எதிரி என கூறவில்லை அவர்கள் அவர்களது முதல் நண்பன் என்றுதான் சொல்கிறேன். (உங்கள் வாழ்வின் உடைமைகளை உரிமைகளை, முடிவுகளை, நீங்களே தேர்ந்தெடுங்கள் அதுதான் உங்களுக்கு உண்மையான சந்தோஷத்தைக் கொடுக்கும்.)

 பயம்:   நீங்கள் உடம்பில் முதுகெலும்பு இல்லாத புழுவாக இருந்தால் எரும்பு கூட உங்களை துன்புறுத்தும் அது அதன் வழியில் உங்களை வழி நடத்த ஆரம்பித்துவிடும். உங்களது பயம் தான் உங்கள் சுதந்திரத்தின் முதல் எதிரி. உங்கள் சுதந்திரம் பரிபோன பின் மனம் விரும்பும் செயலினைக்கூட செய்ய முடியாமல் இருக்கும் போது உங்கள் சந்தோசத்தின் நிலையினை நினைத்து கூட பார்க்க இயலாது(உறவுகளுக்காக முழு மனதுடன் விட்டுக் கொடுப்பது வேறு ஆனால் அது உங்கள் சுதந்திரத்தை கூண்டுக்குள் வைக்காமல் இருக்கட்டும்)

அடுத்தவர்களை பழித்தல்:  இந்த நம்பிக்கை குறைவு நமக்குள் ஒரு பயத்தினை உண்டாக்கி வாழ்வின் வலிமையை சந்திக்க இயலாத தடுமாற்ற நிலையினை உருவாக்கும். இந்த இயலாமை ஆழ்மன உலைச்சலினை  கொடுத்து. அடுத்தவர்களை குறை கூற ஆரம்பித்துவிடுவோம் அது நம் வாழ்வின் வெற்றிக்கு தேவையான (ம) வாழ்வின் இன்றியமையாத உறவுகளுக்கு மிகப்பெரிய தடையாகலாம்

தடையை தகர்த்தெரியும் மந்திரமாகலாம்

 

எண்ணங்களை ஆராய்தலும் கட்டுப்படுத்துதலும்:  உங்கள் எண்ணங்களை அலசுங்கள் எங்கு உங்கள் இதயம் சந்தோசமாக இருக்கிறது. அந்த செயல்களை உங்கள் வாழ்வின் பழக்கமாக்குங்கள் ஆனால் அதற்க்கு முன்பு அது சரியான செயலா என உங்களுக்குள் ஆராய்ந்துகொள்ளுங்கள்.

            ஏனெனில் சில செயல்கள் உடனடியாக சந்தோசத்தினை கொடுத்தாலும்(இந்த செயல்களை நீங்கள் உங்கள் வாழ்வின் அனுபவத்தினாலோ, அடுத்தவர்களின் வாழ்வில் நிகழ்பவனவற்றைக் கொண்டோ அல்லது மற்ற ஆதாரங்களிலிருந்து அறிந்துகொள்ளலாம்) பின்னாளில் அதுவே உங்கள் மனதின் உறுத்தலாகவோ அல்லது உங்கள் சந்தோசத்தை சிதைக்கின்ற காரணியாக மாறலாம்.

நிகழ்வுகளை(வெற்றி, தோல்வி) ஏற்றுக்கொள்ளல்:   வாழ்க்கையில் சில விஷயங்கள் நமது கட்டுப்பாட்டுக்குள் இல்லாமலே தோற்க்க நேரலாம். சில விஷயங்கள் நமது கட்டுப்பாட்டில் இருந்தாலும் தோற்க்க நேரலாம் அதற்க்காக கவலைப் பட்டுக் கொண்டிருப்போம்.  அதனை நினைத்து கவலைப்படுவதால் நம்மால் கடந்த காலத்திற்க்கு சென்று அதனை வெற்றியாக்க முடியுமா? என்ற கேள்வியினை உங்களுக்குள் கேட்டுக் கொள்ளுங்கள்.

            உண்மையில் நாம் முடிந்துபோன விஷயத்தில் நமது நேரத்தினை வீணாக்குகிறோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். வாழ்வில் தோல்வியில் நாம் நினைக்காத அளவிற்க்கு படிப்பினைகள் உள்ளன என்பதை எப்பொழுதும் மனிதில் கொள்ளுங்கள். தோல்வியோ வெற்றியோ முழு மனதுடன் ஏற்றுக் கொண்டு அதனை முரியடிக்கவோ அல்லது காத்துக் கொள்வதற்க்கான முயற்ச்சியினை தொடங்குங்கள்.

சந்தோசம் தன்னுல்தான் இருக்கிறதென நம்புதல் :   உங்கள் சந்தோசம் உங்களுக்குள்தான் இருக்கிறது என நம்புங்கள். மனிதத்தின் எதிற்பார்ப்புகளுக்கு எல்லையில்லை ஆனால் நடைமுறை எதார்த்தத்திற்க்கு நிறைய கட்டுப்பாடுகள் இருக்கின்றது என்பதினை மனிதம் உணர்ந்து எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்ளும் வரை அது உண்மையான சந்தோசத்தினை உணரயியலாது.

         நீங்கள் இந்த பொருளினை வாங்கினால்தான் இந்த உறவுகள் இப்படி நடந்து கொண்டால்தான் நான் சந்தோசமாக இருப்பேன் என உங்கள் சந்தோசத்திற்க்கு கட்டுப்பாடுகள் வைக்காதீர்கள். வாழ்வில் சின்ன சின்ன விஷயங்களுக்கு கூட சந்தோசப்பட பழகிக்கொள்ளுங்கள்(பேருந்துக்கு 5 நிமிடம் தாமதமாக சென்று அந்த பேருந்தினை பிடிக்கும் போது உள்ளுக்குள் பூரித்ததுண்டா (ம) கடும் வெயிலில் நடந்து வந்து வேம்பு மரத்தின் நிழலில் அதன் ஈரக்காற்றில் சிலிர்த்ததுண்டா)

         இப்படி நாம் சந்தோசப் படக்கூடிய நிறைய நிகழ்வுகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன நாம்தான் அவற்றை அடையாலம் கண்டுகொள்ள தவறுகிறோம் என்பதினை உணருங்கள்.

தியானமும் உடற்பயிற்ச்சியும்:   இந்த உடற்பயிற்ச்சியும் தியானத்தையும் பயிற்ச்சி செய்வதன் மூலம் நீங்கள் மனதளவில் உடல் ரீதியாக உங்களை கட்டுப்படுத்திக் கொள்ளலாம். நீங்கள் தியானத்தில் அடுத்தவர்களை  கட்டுப்படுத்துகின்ற வித்தையினை கற்றுக் கொள்ள வேண்டாம் ஆனால் உங்கள் சிந்தனையை 5 நிமிடங்கள் கட்டுப்பாடுக்குள் வைத்துக் கொள்ளும் மந்திரத்தினை கற்றுக் கொள்ளுங்கள் அது உங்கள் வாழ்வின் உண்மையான சந்தோஷத்தினை தேர்ந்தெடுக்கின்ற தெளிவினை உங்களுக்கு அளிக்கும் என்பது தின்னம்.

          உண்மையான சந்தோசம் அடுத்தவர்கள் உங்களுக்கு பிடித்தவாறு நடந்து கொள்வதில் இல்லை.(ஏனெனில் அது மற்றொரு ஊண் என்பதினை நாம் மறந்துவிடுகிறோம்)

நீங்கள்
              உங்களுக்கு பிடித்தவாறு நடந்து கொள்வது
              உங்களுக்கு பிடித்தவற்றை செய்வது
              உங்களுக்கு பிடித்தவற்றை தேர்ந்தெடுப்பது
              நினைக்கின்ற உரிமையுடனும் சுதந்திரத்துடன் வாழ்வது

நல்ல உறக்கம்:    இராமயணத்தில் கும்பகரனின் இறப்புக்கு காரணம் அவனை பாதி தூக்கத்தில் எழுப்பியதால் என கம்பர் எழுதுவார். அத்தகைய மகத்தானது இந்த உறக்கம் அது நமது சிந்தனையினை, எண்ணம், அசைவுகள் அனைத்தையும் கட்டுப்படுத்துகின்ற உன்னதம்.நீங்கள் இதனை கவனித்தால் உங்கள் சந்தோசம் கரையாமல் இருக்குமென்பது மறுக்க முடியாத உண்மை.

எதிர்பார்ப்பு என்னும் 
     எதிரியை எடுத்தெரிந்துவிட்டு
எதார்த்தம் என்னும் 

     எளிமையை  - வாழ்வின் 
தாரக மந்திரமாக்குங்கள்  - இந்த 
      சந்தோசமென்னும் சரணாலயத்தில் 
வாழ்ந்திருக்க...!

Sunday, 23 September 2012

வெற்றிக்கு வழியாகலாம்

தைரியத்தின் தட்சணை:   தைரியம் உங்களுக்குள்ளே விதைக்கப்பட்டுள்ள நண்பன். நம்புங்கள் முழுமையான நல்லவர்களும் இங்கில்லை முழுமையான தீயவர்களும் இங்கில்லை ஏனெனில் மனிதம் நிறை குறைகளுடன் படைக்கப் பட்டுள்ளதுதான்(பிரபல விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசனின் வாழ்வைப் பார்த்தால் 1000 கண்டுபிடிப்புகளை கண்டு பிடித்த மாமேதை தனது தனி மனித வாழ்வில் தடுமாறியது தெரியவரும்).

       "பெரியவர்களை கண்டு வியத்தலும் இலவே சிரியவர்களை கண்டு இகழ்தலும் இலவே" என்ற கனியன் பூங்குன்றனாரின் வார்த்தைகளையும் நினைவில் கொள்ளுங்கள் அந்த தைரியம் உங்கள் அடி மனதில் வேர் விட. உங்கள் வாழ்வில் ஒரு அடி எடுத்து வைக்க வேண்டுமானாலும் இந்த நண்பனின் உதவி இல்லாமல் இயலாது

சரியான இடத்தில் பழைய கட்டுப்பாடுகளை தகர்த்தல்: 
  பழைய நம்பிக்கைகள் நல்லவைதான் ஆனால் அது இந்த புதிய சூழலுக்கு பொருந்தாதாக இருக்காலாம். நம் வாழ்வில் வெற்றி பெற வேண்டுமானால் அந்த பழம் நம்பிக்கைகளை சரியான இடத்தில் தகர்த்தெரிய வேண்டும்.

       ராமயணத்தில் ராமன் வாலியை மறைந்து நின்று அம்பெய்து கொன்றான். அது அந்த காலத்து போர் முறைக்கு வகுக்கப் பட்ட கட்டுப்பாடுகலுக்கு புறம்பானதுதான். ஆனால் மக்களின் மனு தர்மத்தில் பின்னாலில் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

       இந்த உதாரணம் கட்டுப் பாடுகளை சரியான இடத்தில் தகர்க்கின்றது என நம்புகிறேன்.

தேவையற்றவற்றை மனதிலிருந்து நீக்குதலும்
எப்பொழுதும் நல்ல மாற்றங்களை ஏற்றுக்கொள்ள தயாராக இருத்தலும்:   நம்ம வீட்டினை அழகாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பது நாம் எல்லோரும் விரும்புவதுதான். நாம் ரொம்ப செண்டிமென்ட் ஆன மனிதர் என்றால் அந்த பொருள் நமது நடைமுறை வாழ்விற்க்கு தேவையே இல்லை என்றாலும் எனது தாத்தா கொடுத்தது பாட்டி கொடுத்தது என நம்மால் ஒரு பொருளையும் வெளியே தூக்கி எரிய முடியாது. அதனால் நமது வீட்டினில் புது நடைமுறை வாழ்விற்க்கு தேவையான பொருளை வாங்கி வைக்க முடியாமல் போகலாம்.

       அது போலத்தான் நாம் நம்பிக் கொண்டிருக்கும் சில பழைய நம்பிக்கைகளை அடையாலம் கண்டு கொண்டு தகர்த்தெரிந்து. உங்கள் மனதில் நல்ல மாற்றங்களை ஏற்றுக்கொள்ளத் தேவையான இடத்தினை எப்பொழுதும் தயாராக வைத்திருங்கள் .
 

      இந்த நல்ல மாற்றங்களை நீங்கள் ஏற்றுக் கொள்ளாவிட்டால் நீங்கள் இந்த சுழலுக்கு ஒவ்வாதவர் ஆகி விடுவீர்கள் அது உங்கள் வளர்ச்சியினை தடுத்து கொண்டே இருக்கும்.

நாம் செய்த மாற்றம் இந்த சூழலுக்கு ஒத்துவருமா என உறுதி செய்தல்: நாம் என்னதான் நல்ல மாற்றத்தை நமக்குள் ஏற்ப்படித்திக் கொண்டாலும் அது நாம் வாழ்கின்ற இந்த சூழலுக்கு ஏற்றதாக இருக்க வேண்டும் அப்படி இல்லாவிட்டால் நமது மாற்றம் முற்றிலும் தவறாகிவிடும்.

        இங்குதான் தொழில் முனைகின்ற நிறைய மனிதர்கள் தோல்வியினை தழுவியிருக்கிறார்கள். ஏனெனில் அவர்கள் அவர்களது பொருள்களில் நிறைய நல்ல மாற்றம் செய்தாலும் அவைகள் இந்த சூழலுக்கு ஏற்ற மாற்றமாக இருப்பதில்லை.

தைரியத்தை பாய்மரமாக்கி
          பழமையெனும் பயத்தினை
தடைகளாய் தகர்த்து
         நம்பிக்கையெனும் விடியலை நோக்கி
வாடைக் காற்றென்னும் சுழலுக்கேற்ப்ப
         வாழ்க்கைப் படகினை செலுத்துங்கள்
வெற்றியெனும் சொர்க்கத் தீவினை அடைய...!

Monday, 10 September 2012

உள்மன உணர்வும் வழி நடத்தும்

      ஒரு மாணவன் தனது கல்லூரிப் பருவத்தில் கலாச்சாரம் என்னும் தேர்வினை எழுதி அதில் தேர்ச்சி பெற்று  கலாச்சார முகாமிற்க்கான  தகுதியினைப் பெற்றான் அன்று அவனுக்கான நுழைவுச் சீட்டு வந்திருந்தது.

      அந்த நுழைவுச் சீட்டினைப் பெற்றுக் கொண்டவன் எப்பொழுதும் போல தனது நோட்டுக்குள் வைத்தான் அன்று மாலை தனது நண்பன் கணக்கு நோட்டினை கேட்க எப்பொழுதும் எதாவது உள்ளதா என பார்த்துவிட்டு கொடுப்பவன் அன்று மட்டும் சரியாக பார்க்கமல் கொடுத்துவிட்டு அனுப்புகிறான்.

      அன்று இரவு தனது பயணத்தை துடங்குவத்தற்க்கு முன் தனது நுழைவுச் சீட்டினை தேடுகையில் அது இல்லாதது தெறிய வந்தது. தான் அன்று கல்லுரிக்கு எடுத்துச் சென்ற அனைத்தினிலும் தேடி விட்டு தன் நண்பனிடம் நோட்டு கொடுத்த ஞாபகம் வந்தது அவனது வீட்டுற்க்கு போன் செய்தான் அன்று தொடர்புகள் துண்டிக்கப்பட்டு இருந்தன.

      உண்மையில் அவனுக்கு தனது நண்பனது ஊர் பெயர் மட்டும் தான் தெறியும் ஆனாலும் எப்படியாவது அவனைப் பார்த்து அவனிடம் நுழைவுச் சீட்டினை பெற்றுக் கொண்டு காலைக்குள் அங்கு சென்றுவிடலாம் என்ற உள் மன நம்பிக்கையுடன் தன்னுடன் வர இருந்த நண்பர்களை தனியாக செல்ல சொல்லி விட்டு தனது நண்பன் ஊருக்கு விரைந்தான்.

      பேருந்தில் பயணித்த போது அவன் மனதில் அது எப்படியும் கிராமமாகத் தான் இருக்கும் சுலபமாக கண்டுபிடித்து விடலாம் என்று நினைத்த வண்ணம் சென்றான் ஆனால் பேருந்தில் இருந்து இறங்கிப் பார்த்தால் அது ஒரு சிறு நகரம். அவனது நம்பிக்கை சற்று தடுமாறினாலும் உள் மன உணர்வு மட்டும் கூறிக் கொண்டே இருந்தது எப்படியும் அந்த முகாமிற்க்கு போய் விடுவான் என்று.  

       தனது கல்லுரியின் பெயரினை கூறி அங்கு படிக்கும் மாணவர்களைப் பற்றிகேட்டுக் கொண்டு சுமார் 2 கிலோ மீட்டர் நடந்திருப்பான். அதன் பிறகு தனது கல்லுரியில் படிக்கும் மாணவனின் விலாசம் கிடைத்தது. அவரிடம் சென்று கேட்கையில் தனது நண்பனின் ஊர் அங்கிருந்து 3 கிலோ மீட்டர் என தெரிந்து கொண்ட பின் அந்த இருண்ட சூழலில்  சென்று தனது நண்பன் வீட்டினை அடைந்தான்.

      நம்பிக்கை மீண்டும் துளிர் விட்டது. வீட்டுக்குள் சென்று அவரது அம்மாவிடம் கேட்ட போது அவன் அவனது அக்காவின் வீட்டிற்க்கு சென்றிருப்பதாக  கூறி ஒரு தொலைபோசி எண்ணினை கொடுத்தார்கள் அவர்களும் அவனை தொடர்புகொள்ள நினைத்தார்கள். மன நிம்மதிக்காக அவன் புத்தகங்களை வைக்கின்ற இடங்களை தேடிப் பார்த்துவிட்டு.

      மேலும் நம்பிக்கை தளர்ந்தவனாய் மறுபடியும் 3 இடங்களில் போன் செய்து பார்த்து.  உதவி செய்ய வந்தவருக்கு நன்றி கூறிவிட்டு தனது கல்லுரியினை நோக்கி பயனித்தான். நம்பிக்கை முழுவதினையும் இழந்தாலும் அவன் உள் மன உணர்வுகள் மட்டும் எப்படியும் அந்த முகாமிற்க்கு செல்வோம் என உணர்த்திய வண்ணம் இருந்தன.

       தனது கல்லுரிக்கு அருகில் இருக்கின்ற நகரத்துக்கு வந்த போது 11 மணி இருக்கும். அந்த முகாமிற்க்கு போக வேண்டுமானால் காலை 10 மணிக்குள் செல்ல வேண்டும் அந்த ஊருக்கு செல்வதற்க்கு குறைந்து 10 மணி நேரம் பயணிக்க வேண்டும். இறுதியாக ஒரு முறை போன் செய்து பார்க்க அவன் உள் மனம் அறிவித்துக் கொண்டே இருந்தது.

       நம்பிக்கையே இல்லாமல் அந்த எண்ணிர்க்கு போன் செய்தார். முதல் முறை மணி ஒளித்தது. அங்கே நண்பனின் சகோதரி அதனை எடுத்து தனது தம்பி வெளியில் சென்றிருப்பதாக. காத்திருப்பதின் வலி உண்மையில் இந்த மாதிரி சிக்கலான நிமிடங்களில் தான் நாம் உணர்வோம். அந்த கடைக்கார் தனது கடையினை மூடுவதற்க்கு தயாரானார்.

      அவன் எப்பொழுது வருவான் என தெரியாவிட்டலும் அந்த கடைக்காரரிடம் 10 நிமிடங்கள் கழித்து மூடுமாறு வேண்டி கேட்டுக் கொண்டான். அவன் உள் மனம் உணர்த்திய உணர்வுகள் வீண் போகவில்லை. தொலைபேசி மணி ஒளித்தது 7 ஆவது நிமிடத்தில். அவனது நண்பன் என்னாச்சு என சாந்தமாக கேட்டான். அவனிடம் தனது நுழைவுச்சீட்டு இருப்பதை உறுதி செய்து கொண்டு அவனை அருகில் உள்ள பேருந்து நிலையத்திற்கு வரச்சொன்னான்.

       அது வரை ஒளிந்திருந்த அதிஷ்டம் கை கொடுத்தார் போல. அவனுக்கு பேருந்துகள் உடனுக்குடன் கிடைத்தது. தனது நண்பன் இருந்த ஊரும் அவன் முகாமிற்க்கு போக வேண்டிய பாதையில் இருந்ததால். அவன் சுலபமாக அந்த நுழைவுச்சீட்டினை பெற்றுக் கொண்டு அந்த முகாமிற்க்கு சென்று சேர்ந்தான்.

       சில நேரங்களில் நமது  நம்பிக்கை தடுமாறினாலும் இந்த உள் மன உணர்வு(intuition) நமக்கு வழி காட்டும். நம்புங்கள் நல்லதே நடக்கும் என்று உங்கள் உள் மன வழிகாட்டுதலுடன்.

Saturday, 25 August 2012

கண்ணோட்டம்

2004 ஆம் ஆண்டு சுனாமி ஏற்பட்ட பின் NSS மாணவர்கள் குழு அங்கு இருப்பவர்களுக்கு உதவவும் ஆறுதல் கூறவும் பொறையார் என்னும் பகுதிக்கு சென்றனர். அங்கே அவர்கள் கண்டது உருகுலைந்த மனித உடல்கள் கருவைக்குள் சிக்கிக்கொண்டு எங்கு பார்த்தாலும் பரவிக்கிடந்தன.

அங்கு அவர்கள் கண்ட மறுக்க முடியாத உண்மை ஒரு புறம் உறவுகளை இழந்து விட்ட கண்ணீர் துளிகள் மறுபுறம் தன் சுய சந்தோசத்திற்க்காக மட்டுமே வாழ்க்கின்ற மனித கூட்டத்தின் கொடூரம் பொன் நகைகளுக்காக சிதறிக் கிடந்த பிணங்களின் காது மூக்குகளை அறுத்துவிட்டு சென்றிருந்தனர்.

உண்மையில் உலகம் நன்மை தீமைகளால் படைக்கப் பட்டுள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. மனித உரிமை கழகம், காவல் துறை, நீதிதுறை மற்றும் பத்திரிக்கை துறை உதாரணங்களுடன் அந்த வரையறைகளை நமக்கு ஞாபகப்படுதுகின்றன அடுத்தவர்களை பழிப்பதல்ல அவர்களின் நோக்கம். இது தீய கண்ணோட்டமாக இருக்கலாம் நன்மை விளைகின்ற நோக்கத்தோடு.

நமது பழைய தவறுகளை அலசுவது உயர்வுக்கு வழி தேடவே ஊனின்  உணர்வினை காயப்படுத்துவதல்ல.கண்ணோட்டம் என்பது நடு நிலமையில் இருக்கும் போதுதான் அது உண்மையாக இருக்கும். உறவுகளில் விருப்பு வெறுப்புகளுக்குள் அது சிக்கிக் கொள்ளும்.

இந்தியாவினை எடுத்துக் கொள்ளுங்கள் நாம் நல்லன வற்றை மட்டுமே பார்க்கவேண்டும் என்ற கண்ணோட்டதில் மட்டும் இருந்தால் இந்தியா தொழில் துறை மற்றும் அறிவியலில் பல சாதனை புரியும் என்பது நிச்சயம் ஆனால் லஞ்சம், தனது தகுதிக்கு மேல் ஆசைப்பட்டு குறுக்கு வழியில் முன்னேற செய்கின்ற செயல்கள் இன்று இயல்பாய் மாறிவிட்டன நாம் இதனை குறைத்துக் கொள்ளாவிட்டால் எவ்வளவு தொழில் வளர்ச்சி கண்டாலும் நாட்டின் உண்மையான வளர்ச்சியினை காண இயலாது.

இது நம்மை நாமே பழித்திக் கொள்வது அல்ல நமக்குள் இருக்கின்ற குறைகளை  கண்டெடுக்கின்ற தீய கண்ணோட்டமாக இருந்தாலும் நம் வளர்ச்சிக்கு வித்திடுகின்ற நல்ல விதையாகத்தான் இருக்கும். மனிதம் குறைகள் நிறைந்ததுதான் ஆனால் அனுபவத்தில் அதனை திருத்திக்கொள்ளும் ஆசிர்வாதத்துடன் படைக்கப் பட்டுள்ளது.

கண்ணிமையின் விட்டம் அகற்றப்படாமல்
     குறைகள் தெரிவதில்லை
இவைகள் நிவர்த்தி செய்யப் படாமல்
     நிலையான வளர்ச்சி இருக்கப் போவதில்லை.

Tuesday, 14 August 2012

மரணமும் விதையானது

          இராமேஷ்வரம் என்னும் ஒரு தீவினில் பிறந்த சிறுவன் கேந்திர வித்யாலயா என்னும் பள்ளியில் கல்வியினைத் தொடங்கினான். பின்னர் திருச்சிராப்பள்ளியில் உள்ள செயின் சோசப் என்னும் கல்லூரியில் தனது பட்டப் படிப்பினையும் அங்கு படிக்கும் போதே  "NCC" யில் "C" சான்றிதழினைப் பெற்றான்.

         தனது தந்தையை ஒரு விபத்தில் பரிகொடுத்தவன் தனது தாயின் அரவனைப்பினில் தனது இரண்டு சகோதரிகளுடன் வளர்ந்தான்.
தனது பட்டப்படிப்பிற்க்கு பிறகு இந்திய இராணுவத்தில் இணைந்தவர் தமிழ்பூர், பிகார் மற்றும் பூட்டான் ஆகிய இடங்களில் பணிபுரிந்தார்.

        ஒரு நாள் அவர் நண்பர்களுடன் பயணிக்கையில் அவர்கள் சென்ற பேருந்து விபத்துக் உள்ளாகியது. அவருடன் சென்ற எல்லோரும் அதிர்ச்சியில் நின்றிருக்க அவர் மட்டும் உயிருடன் இருப்பவர்களை கண்டறிந்து மருத்தவமனைக்கு கொண்டு சென்றார். அந்த அளவிற்க்கு மன உறுதியினையும் ராணுவப் பயிர்ச்சியினையும் பெற்றிருந்த வீரன்

       1999 ஆம் ஆண்டு மேஜர் ஆக பதவி உயர்வு பெற்று கார்கிலுக்கு மாற்றப்பட்டார். மே 28 1999 அன்று அத்து மீறி உள் நுழைந்த பாகிஷ்த்தான் தீவிரவதிகளின் மீது தாக்குதல் மேற் கொண்டார். அப்பொழுது ராக்கெட் லாஞ்சர் என்னும் ஆயுதத்தால் இருவரை வீழ்த்தினார் அச்சமயம் அந்த ஆயுதத்தில் இருந்து  வெளிப்பட்ட உலோகத் துகள்களால் அவர் பாதிக்கப் பட்டதால். மேலும் அப்பொழுது பெரும்பாலான வீரர்கள் காயப்பட்டிருந்தனர், அவரது உயர் அதிகாரி திரும்ப அழைத்த போதிலும் நிலமையை கருத்தில் கொண்டு நாங்கள் அவர்களுக்கு மிக அருகினில் இருக்கிறோம் இன்று திரும்ப இயலாது என பதிலளித்து விட்டு தனது தாக்குதலை தொடர்ந்தார். மேலும் இருவரை வீழ்த்துகையில் அணுகுண்டு அவர் தலை பகுதியினை துளைத்திருந்தது.

          இந்தியாவின் முதல் படியினை வெற்றியாக்க மண்ணில் மே 29 ஆம் தேதி வீழ்ந்தவரின் சடலத்தை மீட்பதற்க்கு இந்திய ராணுவம் ஜூலை 3 ஆம் தேதி வரை போராட வேண்டியிருந்தது. இந்தியாவின் பட்டாலிக் என்னும் இடத்தை காத்து வீழ்ந்தவருக்கு "பட்டாலிக்கின் நாயகன்" என பட்டம் சூட்டினார்கள்.

     அரசாங்கத்தின் வீர் சக்ரா என்ற உயரிய விருதும் அவருக்கு கிடைத்தது.
அவரது சடலத்தை கண்ட தாய் கூரிய வார்த்தைகள் "நான் என் மகனை நினைத்து கர்வம் கொள்கிறேன் அவன் இந்த கார்கில் போரில் போரிட்ட இந்திய இராணுவத்தில் முதலில் இறந்தவன் கடைசியா வீட்டுக்கு வந்தவன் என்பதில்"

      திருச்சிராப் பள்ளியின் வீர மகன் என மக்களால் அன்புடன் அழைக்கப்படும் மேஜர் சரவணனின் வீரம் இங்கே விதையாக விதைக்கப் பட்டுள்ளது.

உந்தன் மரணமும் விதையானது 
        உள்ளத்தினில் - இந்தியனெனும் 
உணர்வுடன் வாழ்ந்திருக்க 
       கிழக்கே விடியல் இருக்கும் வரை.

Saturday, 4 August 2012

சந்தோசமான மன நிலை

      ஒரு உழவன் தனது வாழ்வின் துவக்கத்திலிருந்து கடினப்பட்டு வளர்கிறான். வளர்ந்தபின் தான் எத்தனை ஏக்கர் நிலம் சம்பாதிக்க வேண்டும் எவ்வளவு பணம் வைத்திருக்க வேண்டும் என தீர்மானித்தும் அதற்க்காக கடினப்பட்டு உழைத்தான் ஒரு நாள் தனது இலக்கினையும் அடைந்து விட்டான் அன்று அவன் வாழ்வினை திரும்ப பார்க்கையில் தனது வாழ்வில் பல சந்தோச தருணங்கள் ஒரு நிகழ்வாக மட்டும் முடிந்திருப்பதை உணர்கிறான்.

      வாழ்வில் வெற்றி மட்டும் தான் சந்தோசம் என்றால் இவர் ஏன் வருத்தப் படுகிறார். காரணம் இருக்கிறது மனித மனம் வல்லுனர்களால் இரண்டாக வகைப்படுத்தப்படுகிறது உள்மனம் மற்றும் வெளிமனம். நீக்கள் உள்மனத்திடம் உங்கள் இலக்கினை தெரிவித்தால் அது அதனை அடைவதற்க்கு மட்டுமே முயர்ச்சிக்கும் புற மனத்தை போன்று மனித உணர்வுக்களுக்கு கட்டுப் படாது.இந்த உள்மனத்தின் இலக்கினை அடைகின்ற முயர்ச்சியில் உங்கள் சந்தோசங்கள் மறைந்து போகலாம். (கையில் எண்ணையை வைத்துக் கொண்டு நராயணன் நாமம் உச்சரிக்க மறந்த நாரதனைப் போல)

      இது நடந்தால் மட்டும் தான் சந்தோசமாக இருப்பேன் என்ற மன நிலையை நாம் மாற்றிக் கொண்டால் போதும் நம் வாழ்வில் சந்தோசத்தை அதிகப்படுத்துவதற்க்கு. வெற்றி என்பது சந்தோசத்தினை ஊக்குவிக்கும் காரணிதானே தவிர ஆதாரம் அல்ல.

     சில நேரங்களில் நாம் கடினப்பட்டு உழைத்தாலும் சரியான வற்றை செய்தாலும் சமுதாயத்தின் வலிமையாலும் அது ஏற்படுத்தும் தடைகளாலும் தோற்க்க நேரிடலாம் உங்கள் சந்தோசமான மன நிலை அடுத்த முயர்ச்சிக்கான ஆற்றலை உங்களுக்குள் புகுத்திவிடும்.

     வாழ்வின் முனேற்றத்திற்க்கு இலக்கு நிர்ணயுங்கள் சந்தோசமான மன நிலையுடன்.  அது உங்கள் தடைகளை எடுத்தெரிகின்ற ஆற்றலை உங்களுக்கு அளித்துக்கொண்டேயிருக்கட்டும் உங்கள் இலக்கினை அடையும் வரை.

      எது நடந்தாலும் நான் சந்தோசமாக இருப்பேன் என்றும் (உங்களை உண்மையில் ஆதரிக்கின்ற உறவுகளை இழக்கின்ற தருணங்களைத் தவிர). உங்கள் சந்தோசத்தை எதனாலும் பரித்துக்கொள்ள முடியாது எனவும் நம்புங்கள். இந்த சந்தோசமென்னும் ஆற்றலை ஏற்றுக்கொண்டு எடுக்கின்ற முயர்ச்சியில் உங்கள் பெயரினை சரித்திரத்திலும் எழுதுங்கள்.