ஒரு நாள்; ஓர் அலுவலகத்தில் சிறப்பு விருது வழங்கும் விழா மேடையில் சில வெற்றியாலர்கள் குழுமியிருக்க அங்கே, வந்தவர்களிடம் விழாவின் தலைவர் அவர்கள் ஒரே கேள்வியினை பலரிடமும் கேட்டார். உங்கள் வெற்றிக்கு வழி காட்டி யார் என்று.
அதற்கு பலரும் தங்கள் துறையில் தலை சிறந்த தலைவர்களையும் மேதைகளையும் அடிக்கிக் கொண்டு, அவர்களது புகழ் பாடிக் கொண்டிருக்கையில். அம்மையார் ஒருவர் சொன்னார்.
எனது அன்றாட வாழ்வினில் நான் கண்டு உள்வாங்கிக் கொண்ட எனது தந்தையார் செயல் தொடங்கி என் அன்றாட வாழ்வில் நான் உயர்வாய் நினைக்கின்ற ஒவ்வொரு ஜிவனும், காயத்தால் என்னை கடினப்படுத்திய எனது தோல்விகள், வெற்றியின் வீரியத்தில் அறிந்து கொள்ளா பாதை வழி.
இப்படி எத்தனை எத்தனையோ ஊக்கங்களும் அதில் ஒளிந்திருந்த உற்ச்சாகமும், எனக்கு வழி காட்டியது என்றார். அதற்கு அங்கிருந்தவர்கள் சிரித்ததுக் கொண்டு அப்புறம் எப்படி அம்மையார் இந்த துறையில் சாதிக்க முடிந்ததாம் என்றார்கள் கிண்டலும் கேலியுடன்.
அதற்கு அவர் ஆமாம் நான் எனது துறையில் சிறந்து விளங்கிய தலைவர்களின் புத்தகங்களை படித்திருக்கிறேன் அவைகள் என்னை பக்குவ படுத்தியிருக்கின்றன. ஆனால் தண்ணீரும் கல்லும் சேர்த்து சுடுகின்ற கலவையாய் உருவாக்க முடியுமா என கேட்டாள்?
என் தந்தையார் எனது வீட்டிற்கு சுண்ணாம்பு அடிக்க கிளிஞ்சல்களை தண்ணீருடன் கலக்கிய கலவைதான், என் கண் முன்னே தோன்றும் அதுதான் நான் முடிவெடுக்க வழிகோலும். இந்த உள்ளுணர்வுகள் நான் விரும்பி ஏற்றுக் கொண்ட மாற்றங்கள் (ம) தடுமாறிய தருணங்களில் வந்த தாக்கங்கள், என வாழ்வின் ஒவ்வொரு நொடிப் பொழுதிலும் நான் அறிந்து கொண்ட எளிமையும் எதார்த்தமும்தான் என்னை வழி நடத்தியது என நம்புகிறேன் என்றார்.
அங்கிருந்த கூட்டத்தின் சல சலப்பு நின்று போனது, நடுவர் வாயசைக்க தொடங்கினார் இங்கிருக்கின்ற நிறைய வெற்றியாளர்கள், நிறைவான காரணங்களைச் சொன்னாலும். எளிமை என்கின்ற எதார்த்தத்தின் அழகும் அது தருகின்ற ஆழ்மன நிம்மதியின் மகத்துவமும் நிச்சயம்; நாம் எல்லாரும் விரும்புகின்ற விருட்சம்தான் என முடிக்கின்றார் புன்னகையுடன்.
Monday, 19 August 2013
Sunday, 11 August 2013
உள் மன அமைதியின் மகத்துவம்
ஒரு ஊரில் மன அமைதியுடன் நிம்மதியாக வாழ வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர், செய்வதறியாது தடு மாறிக் கொண்டிருந்தார் எல்லோரும் தன்னை எதிர்ப்பதாகவும், என்னால் ஏன் மற்றவர்களுடன் ஒத்து போக முடிவதில்லை. இயல்பாகவே எனது நடத்தையில் ஏதேனும் மாற்றம் தேவையா என்ற சிந்தனை, என பல்வேறு வகையான எண்ணங்களில் மன உலைச்சலுக்கு ஆலாகியிருந்தார்.
இந்த மனப் போராட்டத்தில் வாழ்வின் சந்தோச நிமிடங்கள் குறைவதாக மட்டும் உணர்ந்திருக்கையில், பலரிடம் கேட்டும் பலனில்லாமல் பாதை நகர்ந்து கொண்டிருக்கையில்.
ஒரு நாள் ஒரு முதியவரை ஏதார்ச்சியா தான் பயணம் செய்த பேருந்தில் பார்க்கிறார். அன்று அவருக்கு தெரிந்திருக்காது அது அவர் வாழ்வின் பாதையை மற்ற வந்த முக்கிய மூன்று மணித்துளிகள் என்று.
அப்பொழுது அவர்கள் பேசிக் கொண்டிருக்கையில், இவர் தனது மன உலைச்சலைப் பற்றி சொல்ல அந்த பெரியவர் சிரித்ததுவிட்டு கூறினார்.
தம்பி நம் உடல் உருவாக்கும் நிழலை விட குறைந்த தொலைவில் நம்முடனே இணைந்திருக்கும் நம் உடலும் மனமும் சில நேரத்தில் நாம் சொல்வதைக் கேட்பதில்லை.
நீ வெளியில் இருக்கின்ற, என்ன நோக்கத்துடன் படைக்கப்பட்டதென்று தெறியாத ஒன்று என்னை எதிர்க்கிறது, நான் சொல்வதை கேட்பதில்லை என நினைத்து வருத்தப்படுகின்றாய். ஒன்றினை மட்டும் நினவில் வைத்துக்கொள் உனக்கு சாதகமான சூழலினை உனக்குள் மட்டும்தான் உருவாக்க முடியும் அது வெளியுலகில் தேடி கிடைப்பதில்லை.
மற்றவர்களை உனக்கு சாதகமானவர்காளாக மாற்ற நினைக்காதே உந்தன் எண்ணங்களின் அலைவரிசையில் படைக்கப்பட்ட ஜீவன்கள் வாழுகின்ற சூழலில், உனக்குள் சின்ன சின்ன மாற்றங்களை உருவாக்கி அதில் உன்னை வழி நடத்தக் கற்றுக்கொள், அதுவே உனக்கு சந்தோசாமாக வாழுகின்ற சூழலினைக் கொடுக்கும் என்றார்.

இந்த மனிதர் தான் செய்து கொண்டிருந்த தவறினை உணர்ந்து, தன் உள் மன சூழலினை சரி செய்கின்ற செயலினை [Inner Engineering]
தொடங்கி. இன்று சந்தோசாமான வாழ்வினை வாழ்த்து கொண்டிருக்கிறார்.
நாம் கற்றுக் கொண்ட பின் வாழத்தொடங்கவில்லை தவறுதல்
நடக்காமல் இருப்பதற்க்கு, நீங்கள் உங்களுக்குள் எற்படுத்துகின்ற மாற்றங்கள் உங்களுக்கு மன நிம்மதியினையும் சந்தோசாத்தையும் கொடுப்பதாக இருக்கட்டும்.

Saturday, 29 June 2013
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்
நண்பர்
ஒருவர் தனது சிறிய தந்தைக்கு
பிறந்த குழந்தைக்கு உடல் நிலை சரியில்லாததால்
அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்தது
செல்கிறார். அப்பொழுது அங்குள்ள மருத்துவர்கள் குழந்தையின் நிலமை கவலைக்கிடமாக இருக்கிறது
சீிக்கிரம் பெரிய மருத்துவமனைக்கு அழைத்து
செல்லுங்கள் என்றார்கள்.
அந்த சமயத்தில் அதனைப் பார்த்துக் கொண்டிருந்த ஒரு நபர் அந்த நண்பரிடம் சென்று ஏதாவது ஆச்சினா சொல்லுங்க நம்ம வண்டியில் ஊருக்கு போயிரலாம் என்றார் தனது அமரர் ஊர்தியினைக் காட்டி. அந்த நண்பர் முகம் சிவந்து அந்த இடம் விட்டு அகன்றார் அது மருத்துவமனை என்பதால். காசுக்காக எவ்வளவு அருவருக்கத் தக்க எண்ணம்.
சில நாட்களுக்கு முன்பு ஒரு ஆட்டோ டிரைவர் ஒருவர் தனது நண்பர் "எப்படி இருந்தது அந்த பயணம் பணம் கரைந்திருக்குமே?". என கேட்கையில் அது உண்மைதான் ஆனால் அந்த சந்தோச நினைவுகள் எனக்குள் சில காலம் உழைக்கின்ற ஆற்றலை கொடுத்திருக்கிறது என சொன்னார் சிரித்த முகத்துடன்.
பணம் பதவிக்கு பலம் எதற்க்கும் அடிபனியாத இந்த சந்தோசம் நம் அழகான எண்ணத்தில்தான் அமைந்திருக்கிறது. நான் கண்டு வந்த சில நூல்கள் சொல்லின "உங்கள் சந்தோசம் நீங்கள் வரையறுத்ததாக இருக்கட்டும் அது உங்களுக்கு முழு மன திருப்தியை கொடுக்கும்".
சந்தோசம் சாத்திரமல்ல மற்றவரின் சந்தோச பதிவுகளை பாதையாக்கிக் கொள்ள அது நம் நடைமுறையில் தோன்றுகின்ற தனித்துவமான உணர்வு. அவர்கள் செய்வது போல செய்வதுதான் சந்தோசம் என்ற எண்ணத்தை விடுங்கள் ஏனெனில் வாழ்ந்து முடித்து வாழ்பவர்கள் இங்கில்லை.
ஒன்றை மட்டும் மனத்தில் கொள்ளுங்கள் நமது நீண்ட கால சந்தோசம் நமது நிகழ்காலத்தில் தோன்றுகின்ற எண்ணங்களால் மட்டும் நிர்ணயிக்கப் படுவதில்லை. அதற்கான அடிப்படை மூலம் நம் எண்ணத்தில்தான் இருக்கிறது அது அழகானால் நாம் வாழ்வு அழகாவது தின்னம்.
Saturday, 11 May 2013
கலாச்சார நினைவு சின்னங்களும் அதன் அவசியமும்
சில நாட்களுக்கு முன்பு நான் சென்று வந்த ஊரில் நான் பார்த்த இந்த தேரினைப் பார்த்தவுடன் உங்களுக்கு என்ன தோன்றுகின்றது. சிறு கனம் என்னை என் நினைவுகள் அந்த குருச்சேத்திரப் போருக்குத்தான் கொண்டு சென்றது.
கிருஷ்ணர் தேரினை
செலுத்த அதில் ஆக்ரோசத்துடன்
நின்றிருந்த அர்ச்சுனன், படை
சிறியதாய் இருந்தாலும் உண்மையையும் ஒரு ஆயுதமாய் கொண்டு
போராடிய கூட்டம் மறுபுறம்,
செய்தது துரோகமானாலும் துடிக்காத இதயத்தில் தோன்றிய கௌரவத்தை காக்க
துடிக்கின்ற கௌரவர்கள், கருணையே உருவான கர்னனின் கம்பீர தோற்றத்துடன் நின்றிருந்த காட்சியும் அங்கே அறிவுறுத்தப்பற்றட்ட நன்னெறிகள் என்
கண் முன்னே வந்து சென்றது.
இன்று எத்னை எத்தனையோ அறுவருக்கத்
தக்க விஷயங்கள் நடந்து கொண்டு இருக்கின்றன
அதற்கு நமக்குள்ளே இதுதான் காரணமா அதுதான்
காரணமா என ஒருவருக்கு ஒருவர்
சண்டையிட்டுக் கொண்டிருக்கிறோம்
ஒரு கனம் யோசித்துப் பார்த்தால்
இதற்கெல்லாம் காரணம் மேற்கத்திய கலாச்சாரத்தின்
தாக்கமும் நாம் மறந்து விட்ட
நம் கலாச்சாரத்தின் சில நல்ல விஷயங்களும்தான் காரணம் என்பது தெறியவறும் அதற்காக நான் மற்ற கலாச்சாரத்தினை பின்பற்றாதீர்கள் என கூறவில்லை
எல்லா கலாச்சாரத்திற்குள்ளும் அதற்கே உறித்தான நன்மை தீமைகள் இருக்கின்றன, ஆனால் இன்று நாம், நமது கலாச்சாரத்தில் இருக்கின்ற நல்ல விஷயங்களை இழந்திருக்கிறோம் மேலும் நமது உணவு, உடை, செயல்பாடுகளில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய மாற்றங்களால்தான். இத்தகைய அருவறுக்கத்தக்க நிகழ்வுகள் நடந்தேரிக் கொண்டிருக்கின்றன.
இங்கு தவறுக்கு காரணம் ஆணா பெண்ணா என்ற வாதம் உபயோகமற்றதாக தெரிகிறது. இன்று அவசியமானது நமது கலாச்சாரத்தில் நாம் இழந்திருக்கிற நல்ல விஷயங்களை கண்டெடுத்து அதனையே உங்களது பழக்கமாக்கிக் கொள்ளுங்கள். முடிந்தால், இந்த தேரினைப் போன்று நம் கலாச்சாரத்தினை நினைவு படுத்துகின்ற நினைவுச் சின்னங்களை உங்களுடன் வைத்திருங்கள், அது நம் கலாச்சாரத்தின் நல்லனவற்றை நினைவுபடுத்திய வண்ணம் இருக்கட்டும், இது நிச்சயம் நமது சமுதாயத்தில் நல்ல மாற்றத்தை கொடுப்பது திண்ணம்.
Sunday, 21 April 2013
மனிதனின் முன்னேற்றப் பாதையும் நல்லுறவுகளின் அவசியமும்
ஒரு மாணவன் தனது கல்லூரிப் பருவத்தில் NCC முகாமினில் பாங்கேற்கிறான் அதற்கு அவன் அவனுக்கு பழக்கமில்லா நீண்ட துரம் செல்ல வேண்டியிருந்தது. ஆனாலும் தான் பெருமிதமாக செய்கின்ற அப்பனிக்காக அங்கு சென்று விட்டு திரும்புகையில் சாலையோரம் குடித்துவிட்டு ஓட்டி வந்த வாகனத்துக்குள் சிக்கிக் கொண்டான்.
அங்கு இருந்தவர்கள் அவன் குறிப்பேட்டினை எடுத்தப் பார்க்க அவனது உறவுகள் வெகு தொலைவில் இருப்பது தெரிய வருகிறது தெய்வாதீனமாக அந்த ஊருக்கு அருகாமையில் உள்ள ஒரு நபரின் தொலை பேசி எண்ணினைப் பார்த்து விட்டு அவருக்கு போன் செய்து சொன்னதும்.
அடுத்த 30 மணித்துளிகளுக்குள் அவர் அவனை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு தனது இரத்தத்தையும் கொடுத்து அவனது விட்டிற்க்கு போன் செய்து கொண்டிருந்தார் அங்கிருந்தவர்கள் நீங்கள் யார் இவருக்கு என்றார் எனது பள்ளி பருவத்து நண்பன் என்றார்.
உண்மையில் ஒருவனின் முன்னேற்றத்திற்கும் சந்தோசத்திற்கும் உண்மையான தூண்டுதலாய் இருப்பது அவனது நட்பும் உறவுளும்தான். அவர்கள் தகரம் தகரம் என கூறினால் தங்கம் கூட தகரமாகிவிடும் என்பார்கள் அது போலில்லாது உங்களை சூழ்ந்து நிற்கிற நட்பும், உறவுகளும் உங்களை ஆதரிப்பதாக இருக்கட்டும். அது இல்லாத நிலையில் அதனை தூரத்தில் வைக்க கூட தயங்காதிர்கள்.
ஒவ்வொரு வெற்றியாலனுக்குப் பின்னும் அவனை ஆதரித்த குழுமம் அலட்டிக் கொள்ளாமல் அமைதியுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறது என்பது மறுக்க முடியாத ஒன்று. உங்களிடம் உண்மையாய் இருக்கின்ற நட்புக்கும் உறவுகளுக்கும் உண்மையாய் இருங்கள் அது உங்களையும் உங்கள் சூழலையும் சந்தோசமாக்குவதுடன் அதுவே உங்களது வெற்றிப் பாதைக்கும் வழி வகுக்கும்.

Friday, 19 April 2013
விதைப்பதும் விளைவதும்
நன்றாக வசதி படைத்தவர் ஒருவர் தன் தாய் தந்தையுடன் வசித்து வந்தார் நல்ல உழைப்பாளி ஆனால் தனது பெற்றோரை பாதுகாப்பதில் (ம) கவனித்துக் கொள்வதில் ஒரு சிறு தடுமாற்றம் இரக்கமும் சகிப்பு தன்மை இல்லாமை அவர்களை தனி அறையில் வாழ வைத்து வந்தார்.
அவர்களுக்கென தனி அறை தனித்த பொருட்கள் அவர்கள் உபயோகப் படுத்தும் பொருட்களை கூட அவர் தொட மாட்டார் அவருடைய மனைவி இந்த காலத்து பெண்மனி மேலும் தன் சந்தோசத்தை மட்டும் பெரிதாக நினைத்ததுக் கொண்டு வாழ்பவள்.
மகனின் மூலம் இவ்வாறு நடத்தப்பட்ட அவர்கள் பெறும் மன உழைச்சலுக்கு ஆலாகி ஒரு நாளில் இறந்து போயினர். அவர்களது இறுதி சடங்கு முடிந்தபின் அந்த அறையில் உள்ள பொருட்களையெல்லாம் எடுத்த எறிந்துவிட்டு அந்த பாத்திரங்களையெல்லாம் வெளியேற்றிக் கொண்டிருந்தார்.
அதனைப் பார்த்துவிட்டு அந்த சிறுவன் ஓடிவந்து அப்பா அப்பா அவைகளை ஏன் தூக்கி எறிகிறீர்கள். அவைகளையெல்லாம் அகற்றிவிட்டால் நான் உங்களை எங்கு தங்கவைப்பது எதில் சோறு போடுவது என கேட்டான்?
விளையாட்டு பிள்ளை ஆனால் எதார்த்தமான கேள்வி "நாம் எதனை கொண்டு அடுத்தவர்களை அளக்கிறோமே அதனைக் கொண்டே நாம் அளக்கப்படுவோம்" அந்த தந்தை பேச முடியாமல் மலைத்துப் போய் அவ்விடத்திலே உட்கார்ந்து விட்டார்.
மனிதம் நேர்மறை (ம) எதிர்மறை உணர்வகளோடு படைக்கப் பட்டிருக்கிறது. ஏன் உலகம் போற்றும் தலைவர்கள் கூட சில எதிர்மறையான உணர்வுகளுடன் வாழ்ந்திருக்கிறார் ஆனால் அவைகள் குறுகிய வட்டத்துக்குள் வைக்கப்பட்டு நேர்மாறையான உணர்வுகள் மட்டும் பரப்பப்பட்டன அதுவே அவர்களின் வெற்றிக்கும் தூண்டுதலாய் இருந்திருக்கிறது.
ஒரு சிறு எதிர்மறையான உணர்வுக்கு உதாரணமாய் கோபம் இது நம் உள்ளத்தில் நினைத்த ஒன்று நிகழாத ஆதங்கத்தின் வெளிப்பாடு. அது வந்தவுடன் அதற்க்கு காரணமானவர்கள் மீது கல்வீச காத்திருக்கிற காலம். அதற்க்காக சிதறடிக்கப்படுகின்ற நம் கவனச் சிதறல்கள் அதனால் நாம் இழந்துவிடுகின்ற நிகழ்கால நிமிடங்கள் என அடுக்கி கொண்டே போகலாம்.
ஆனால் நேர்மறையான நம் தாயின் அன்பு; உலகில் எத்தனை உறவுகள் வந்தாலும் சரி செய்ய இயலாது என நினைக்க வைக்கிற அவளது அன்பும் அக்கறையும் இப்படி எத்தனை எத்தனையோ நேர்மறை (ம) எதிர் மறையான உணர்வுகள் நம்மில்.
எது நமக்கு வெற்றியையும் நல்ல சந்தோசமான சூழ்நிலையையும் கொடுக்கும் எதனை இங்கு விதையாக விட்டுச் செல்லப் போகிறோம் அதனால் என்ன விளையப் போகிறது என்ற விடை தெறியா வினாவிற்க்கு விடை தேடுகின்ற தாகமாய் விரைகிற காலம்.

Saturday, 13 April 2013
நல் வாழ்விற்க்கான தூண்டுதல்
ஒருஇரயில்பயணத்தின் போது ஒருவர் தனது நண்பரிடம் தனது மகன்
Diploma படிப்பதாக கூறினார் அதற்க்கு அவர் நல்ல படிப்புதான் ஆனால் படித்து முடித்து விட்டு வேலைக்கு சென்றபின் தொலை தூர கல்வியில் B.E படிக்கச் சொல்லுங்கள் என்கிறார்.
தீமைகள் அதிகமிருக்குமிடத்து நன்மை வாழ்வது கஷ்டம்தான் என்றாலும் நன்மை இருக்குமிடத்து தீமைகள் இருப்பதும் கஷ்டம்தான். தீமைகள் உங்களை சூழ்ந்து கொண்டால் இதனை நினைவில் கொள்ளுங்கள்.
அடுத்த நிமிடம் அது சரிதானா தம்பி என என்னைக் கேட்க நான் ஆமாம் என சொல்வதற்க்குள் அந்த தந்தை சொன்னார் "இதுவே என் தகுதிக்கு அப்பாற்பட்டது அவன் வேலைக்கு சென்று படிப்பதாக இருந்தால் படிக்கட்டும் இதுவே வங்கியில் கடன் வாங்கிதான் படிக்க வைக்கிறேன்.
அதுவும் எத்தனையோ வங்கியில் சுய நலன்களுக்காக கடன் கொடுக்க மறுத்தாலும் தனது வாங்கியின் மேனேஜர் பெயரினைக் கூறி அந்த புண்ணியவான் நல்லா இருக்கணும் அவர் பசங்கலெல்லாம் நல்லா இருக்கட்டும் எங்கள் வாழ்வில் விளக்கேற்றிய பெரிய மனிதன்"
என கூறிவிட்டு கலங்க ஆரம்பித்து விட்டார்.
என கூறிவிட்டு கலங்க ஆரம்பித்து விட்டார்.
உண்மையில் உலகத்தில் நல்வழியில் நடப்பது கொஞ்சம் கஷ்டமான விஷயமாக இருந்தாலும் அதற்க்கு சிறு சிறு ஆசைகளை இழக்க வேண்டியிருந்தாலும் இந்த மாதிரியான வாழ்த்துகள் நிச்சயமாக அவருக்கு மன நிம்மதியையும் சந்தோசத்தையும் கொடுக்கும்.
தீமைகள் அதிகமிருக்குமிடத்து நன்மை வாழ்வது கஷ்டம்தான் என்றாலும் நன்மை இருக்குமிடத்து தீமைகள் இருப்பதும் கஷ்டம்தான். தீமைகள் உங்களை சூழ்ந்து கொண்டால் இதனை நினைவில் கொள்ளுங்கள்.
ஒரு நாள் புத்தர் நடந்து சென்ற பாதையில் அவரை பிடிக்காதவர் நின்று கொண்டு சரா மாறியாக திட்டினாராம் புத்தர் சிரித்ததுவிட்டு ஆங்கிருந்து விலகி சென்றாராம் அதனைப் பற்றி மக்கள் அவரிடம் கேட்க புத்தர் சொன்னாராம்.
உங்களுக்கு யாராவது அன்பளிப்பு கொடுத்தால் அது பிடித்தால் தானே ஏற்றுக் கொள்வீர்கள் அது போலத்தான் அவன் கொடுத்த அன்பளிப்பு எனக்கு ஒவ்வாதது மேலும் அது எனக்கு பிடிக்கவில்லை அதனால் அது என்னுடையதில்லை என கூறிவிட்டு சென்றாராம்.
நம்மால் எல்லாருக்கும் நல்லவராகவோ தீயவராகவோ இருக்க முடியாது அதுதான் எதார்த்தமும் கூட என்பதினை மனதில் கொண்டு நமக்கு ஒத்துபோகிற. பிடித்தவற்றை. தேவையானவற்றை ஏற்றுக்கொண்டும் தேவையற்ற, ஒவ்வாத, பிடிக்காதவற்றை எனதில்லை என்ற உணர்வுடன் நல்லனவற்றை நோக்கி பயனிப்போம். விடிகிற காலை நம் சந்தோசத்தின் விடியலாய் இருக்க.
Subscribe to:
Posts (Atom)