அது தீபாவளியை ஒட்டிய ஒரு நாள். பேருந்தில் என்றும் இல்லாத அளவிற்க்கு அதிகமான கூட்டம். அந்த நெரிசலில் சிக்கிக் கொண்டு திணறிய பயணத்தில் டிரைவரின் எதிர்பாராத பிரேக்கில் ஒரு சிலர் தடு மாறி கீழே விழுந்து எழுந்தனர்.
அந்த நிலையாமை முடிந்து இயல்பு நிலைக்கு திரும்பிய அடுத்த கணம் இந்த மரண ஓலம் ஒலித்தது "எனக்கு இருந்த ஒரே மகனை கொன்று விட்டாளே என" கத்திய ஒரு தாயின் துயரக் குரல் கேட்டு துடித்த இதயங்கள் குழந்தையின் முகம் பார்க்க.
அதன் கண்கள் உயரே சென்று இருந்தன. மூர்ச்சையான நிலை அங்கிருந்தவர்களால் தண்ணீர் கொடுக்கப்பட்டது. பேருந்து அந்த இடத்திலேயே நிறுத்தப்பட்டு அந்த குழந்தையும் தாயாரும் இரு சக்கர வாகனத்தில் அனுப்பி வைக்கப்பட்டார்கள்.
இது நடந்து கொண்டிருக்கையிலே அந்த தாயின் தாயார் எங்கே அந்த கொல காரி எனது மாமா S.I ஆக இருக்கிறார் நான் அவளை சும்மா விட மாட்டேன் என ஆக்ரோஷ்மாக கத்த ஆரம்பித்துதார்.
பயணிகளின் மறைவில் நின்றிருந்த பெண்மணியின் கண்களில் இருந்து கண்ணீர் பொல பொலவென சரிந்தன நான் முன்னமே குழைந்தை இல்லாத வலியில் வாழ்பவள் நான் எப்படி இன்னொரு குழந்தையை கொள்வேன்.
பிரேக்கு அடிக்கப்பட்ட நிமிடத்தில் சற்று நிலை தடுமாறி அவர்கள் மீது லேசாக சாய்ந்துவிட்டேன் அவ்வளவுதான் என தேம்பித் தேம்பி அழ அங்கிருந்தவர்கள் நிலைமயை புரிந்து கொண்டு அந்த பெண் மணியை அந்த பக்கமாக செல்ல சொல்லிவிட்டு அவள் ஆங்கேயே இறங்கிவிட்டதாக கூறிவிட்டார்கள்.
அதன்பிறகு ஆக்ரோசமாடைந்த தாய் மருத்துவமனைக்கு முன் இறங்கி விசாரிக்க அந்த குழந்தை நன்றாக இருப்பதாகவும் அது மூச்சடைப்பால் ஏற்ப்பத்ததல்ல உள்ளுக்குள் அந்த குழந்தையின் உடல்நிலை பதிக்கப்பட்டிருந்ததாகவும் தெரியவந்தது.
இங்கு காவல் துறை என்னும் ஆளுமைத்தன்மை மேலோங்கியிருந்தாலும். மனிதத்தில் இன்றும் உயிருடன் இருக்கின்ற மனித நேயத்தில் காக்கப்படுகின்ற வலிமை குறைந்த ஊனின் வாழ்வும் அது ஆளுமைத்தன்மையை விட உன்னதமானது என்பதும் விளங்கும்.
Tuesday, 11 December 2012
Friday, 23 November 2012
வலியானாலும் வாழ்விற்கு வலுவூட்டும் வசந்தத்ததின் எதிரி
ஒரு மனிதர் தனது . தோட்டத்தில் உள்ள கிணற்றில் அடிக்கடி இறங்கி அங்கு பொறுத்தப்பட்டிருக்கும் மோட்டரினை பழுது பார்த்தது விட்டு மேலே ஏறி வருகின்ற பழக்கமுள்ளவர்.
பல வருடங்கள் இது அடிக்கடி நடக்கின்ற நிகழ்வாக இருந்து வந்தது. அன்று அவருக்கு வயது நாற்ப்பது இருக்கும். எப்பொழுதும் போல பழுதடைந்த மோட்டரினை பழுதுபார்க்க .இறங்கியவர் அந்த பனியினை முடித்தது மேலே ஏறி வருவதற்க்கு எத்தனிக்கிற பொழுதில் அவரது வயது முதிர்வால் இரண்டு முறை தவறி கீழே விழுந்துவிடுகிறார்.
இதனை அறிந்து கொண்ட இளைஞ்சர் கூட்டம் அங்கு சென்று அவருக்கு மேலே ஏறுவதற்க்கு பல விதமாக முயற்ச்சித்தார்கள் கயிறினில் மரத்தால் ஆன கோலினை அந்த கயிரினில் கட்டி ஏணி மாதிரி ஏறுவதற்க்கு உதவினார்கள்.
ஆனால் அதனை பயன்படுத்தி மேலே வர நினைத்தவர் காலில் இருந்த ஈரமான மண்ணில் வழுக்கி கீழே விழுகிறார். இந்த முறை அவர் மூர்ச்சையானார். அங்கு இருந்த கூட்டம் அவரை வேறு விதமாக மேலே கொண்டுவருதர்க்கு தயாரானார்கள்.
அதற்க்குள் கண் விழித்துக் கொண்டவர். இதனை கேட்டுவிட்டு அதெல்லாம் வேண்டாம் அந்த கோல்களை எடுத்து விட்டு வெறும் கயிரினை அனுப்பு என்கிறார். அதற்க்கு அங்குள்ள மக்கள் கூட்டம் வேண்டாம் என அது உங்கள் உயிருக்கு ஆபத்தாக அமைந்துவிடும் என கத்தினார்கள்.
அவர் அமைதியாக கயிரினை போடுங்கள் என்றார். சில நிமிடங்கள் யோசித்தவர் கயிரினை பிடித்து மல மல என மேலே ஏறி வந்தார் எல்லோரும் அதிர்ந்து போயிருந்தார்கள். அவர் அங்குள்ள இளைஞ்சர்களிடம் சொன்னார்
"சில நேரங்கலில் நாம் சில தோல்விகளைப் பார்த்தவுடன் நமது மனம் நம்மால் முடியாது என நினைக்கும் அதையே உலகமும் உரைக்கும் அதனை நம்பி உங்கள் தன்னம்பிக்கயை இழக்காதீர்கள். வாழ்வில் உங்கள் எதிர் திசையில் வலுவான காற்று வீசும்போது அதில் உங்கள் மனத்தினை உறமாக்கிக் கொள்ளுங்கள் உங்கள் எதிர் காலத்தின் வலிமையை சந்திக்கவும் (ம) சமுதாயம் தரும் இடையூருகளை எடுத்தெரியவும்."
எனக்கு தெரியும் எத்தனை முறை இந்த ஏறி இறங்குகின்ற வலியினை நான் கடந்திருக்கிறேன் என்று அதில் வலுவடைந்த மனமும் அதன் அசைக்க முடியா நம்பிக்கைதான் இன்று என்னை வெளியே கொண்டு வந்தது.
"தாயின் கருவரை உலகத்திலே மிகவும் பாதுகாப்பான இடம் என்பதற்க்காக ஆயுள் முழுவதும் அங்கேயே இருக்க முடியுமா இந்த மண்ணில் விழுந்து முட்டிகள் தேய்ந்து கிடைத்த வலிமையில்தானே நம் வாழ்வின் ஒவ்வொரு படியும் நகர்கிறது."

Friday, 9 November 2012
வார்த்தையின் வலிமை
ஒரு நாள், இரயில் நிலையத்தில் நான் நின்று கொண்டிருக்கையில், புதிதாக திருமணம் ஆன கணவனும் மனைவியும் அருகில் நின்று கொண்டிருந்தனர். அது மாலை நேரம் சுரியன் தனது முகத்தை மெல்ல மறைத்துக் கொண்டிருந்தது.
கடைத் தெரு விளக்குகள் மின்மினிப் பூச்சியின் ஒளிர்வினை காட்ட தொடங்கியிருந்தன. மக்கள் கூட்டம் எப்பொழுதும் போல இல்லாமல். சற்று குறைவாகவே காணப்பட்டது அப்பொழுதுதான் புது மன ஜோடி பேசிச் சிரித்ததுக் கொண்டு தங்கள் உலகம் மறந்திருந்தனர்.
எப்பொழுதும் மிகக் குறைந்த வேகத்தில் வந்தது நிற்கும் தொடர்வண்டி அன்று மட்டும் சற்று வேகமாக வருவது போல் தோன்றியது. அந்த இருவரும் அதனை கவனிக்கவில்லை மேலும் அவர்கள் நின்று கொண்டிருந்தது பாதுகாப்பு கோட்டிற்க்கு அப்பால்.
மற்றவர்கள் அதனை கவனிக்காவிட்டாலும் அந்த சிறுவன் அதனை பார்த்து விட்டு "அம்மா Train வேகமாக வருகிறது ஒதுங்குங்கள் என கத்தினான்". அதனை உணர்ந்து கொண்ட அந்தக் கணவர் தன் மனைவியின் கையினை பிடித்திழுத்து பாதுகாப்பு எல்லைக்குள் கொண்டுவந்தார். அந்த இருவரின் முகத்திலும் அதிர்ச்சியிலும் பயத்திலும் வழிந்தோடிய வியர்வைத் துளிகள்.
ஒரு அன்னை தனது சொந்த குழந்தையை பார்ப்பது போல் அந்த தாய் அந்த சிறுவன் முகத்தையே பார்த்து வருகிறாள் தான் இறங்கும் இடம் வரும் வரை. இங்கு அந்த சிறுவனின் வார்த்தைகளின் வலிமை ஒரு உயிரினை (ம) அவர்களது சந்தோசத்தினைக் காப்பாற்றும் அளவிற்க்கு மகத்துவமாகியது இங்கே.

Thursday, 25 October 2012
நல்லொழுக்கத்தில் நலிந்துபோகும் பழைய நம்பிக்கைகள்
ஒரு அழகான கிராமம், நன்றாக வறையறுக்கப்பட்ட தெருக்கள். அங்கு அதிகம் படிக்காவிட்டாலும் பாசத்தை மறக்காத மக்கள்.
அனுபவ அறிவினில்
- தங்களை சரியாக வழி நடத்தவும்.
- தங்கள் காலத்தை சரியாக பயன்படுத்தவும்.
- காலனிலைகளை உணர்ந்து தொழில் புரியவும் .
- உறவுகளுடன் வாழுகின்ற வாழ்வினை மட்டும் உயர்வாக
நினைக்க்கின்ற உன்னத வாழ்வையும் கற்றுக் கொண்டிருந்தனர் .
ஆனால் அவர்களது கல்வி அறிவு மட்டும் இருலாய் இருந்தது.
படிக்கவேண்டுமானால் குறைந்தது 200 இலிருந்து 300 கிலோ மீட்டருக்கு அப்பால் தங்கள் குடும்பத்தினை விட்டு பிரிந்திருந்து படிக்க வேண்டியிருந்தது. அதனால் அங்கு வாழ்கின்ற மக்கள் தனது ஆண் குழந்தையினை படிக்க வைத்தாலும் தங்களது பெண் குழந்தைகளினை 10 ஆம் வகுப்பு அல்லது வயதிற்க்கு வந்த பின் நிறுத்துவது வழக்கமாக இருந்தது.
அப்பொழுது வெளியே சென்று படித்துவந்த மாணவர்கள் சிலர் அங்கு வாழ்கின்ற மக்களுக்கு "பெண்கள் வெகுதுலைவிலிருந்தெல்லாம் படிக்க அங்கு வருவதாகவும் மேலும் அவர்கள் அங்குள்ள மக்களால் பாதுகாப்புடன் நடத்தப்படுவதாகவும் தெறிவித்தனர்" அதனை அங்குள்ள மக்கள் ஏற்றுக்கொள்ள மறுத்ததுடன் அவர்கள் முன்னோரு காலத்தில் நடந்த எதிர்பாராத விபத்தினை எடுத்துக்கொண்டு அதனை அவர்களிடம் விவரிக்க ஆரம்பித்துவிடுவார்கள்.
உண்மையில் அது எதிர் பாராத விதமாகவோ அல்லது அந்த தனி மனிதத்தின் குறைபாட்டால் நிகழ்ந்திருக்கலாம் ஆனால் அந்த
நிகழ்வால் ஒரு ஒட்டுமொத்த சமூகமே பின்னடைவை சந்தித்தது.
இது காலம் காலமாக தொடர்ந்து கொண்டே இருந்தது.
வெளியூர்களில் படித்து வரும் மாணவர்கள் விளையாட்டாக விவரித்தாலும். ஒன்றிரண்டு தைரியாமன பெற்றோர்கள் தங்கள் பெண்பிள்ளைகளின் மீது உள்ள நம்பிக்கையில் வெளியுருக்கு அவர்களை படிப்பதற்க்கு அனுப்புகிறார்கள்.
அந்த உண்மை ஆன்மாக்களின்
- நல்லொழுக்கத்தாலும்
- பின்னாளில் தங்கள் பெற்றோருக்கு உதவியவிதத்தாலும் .
அக்கிராம மக்களின் பழம்பெரும் நம்பிக்கையினை தகர்த்தெரிந்து கல்லாமை என்னும் இருளினை அகற்றுகின்ற தீபத்தின் திரிகள் தூண்டிவிடப்பட்டது. இன்று அந்த கிராமத்தில் இருந்து வெளியே சென்று படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை கனிசமாக உயர்ந்து கொண்டிருக்கிறது.
அவர்களுக்கு தெரியாமலே அம்மக்களின் வாழ்வில் இருந்த அறியாமை இருளினை விலக்கி தேவையற்ற பழம் நம்பிக்கைகளைத் தகர்க்க உதவிய தூண்டுதலாய் அவர்களின் நல்லொழுக்கமும் நன்னடத்தையும்.

Monday, 1 October 2012
சந்தோசமென்னும் சரணாலயம்.
உலகத்தில் உள்ள அனைத்து உயிரினங்களின் இச்சையும் இன்பமாக வாழ வேண்டும் என்பதுதான்.
தடைகள்
தன்னம்பிக்கை இல்லாமை: நமக்குள் நம்மீது நம்பிக்கை குறையும் போது அடுத்தவர்களின் உதவியினை நாடவேண்டிவரும். நான் உதவுபவர்கள் உங்கள் எதிரி என கூறவில்லை அவர்கள் அவர்களது முதல் நண்பன் என்றுதான் சொல்கிறேன். (உங்கள் வாழ்வின் உடைமைகளை உரிமைகளை, முடிவுகளை, நீங்களே தேர்ந்தெடுங்கள் அதுதான் உங்களுக்கு உண்மையான சந்தோஷத்தைக் கொடுக்கும்.)
பயம்: நீங்கள் உடம்பில் முதுகெலும்பு இல்லாத புழுவாக இருந்தால் எரும்பு கூட உங்களை துன்புறுத்தும் அது அதன் வழியில் உங்களை வழி நடத்த ஆரம்பித்துவிடும். உங்களது பயம் தான் உங்கள் சுதந்திரத்தின் முதல் எதிரி. உங்கள் சுதந்திரம் பரிபோன பின் மனம் விரும்பும் செயலினைக்கூட செய்ய முடியாமல் இருக்கும் போது உங்கள் சந்தோசத்தின் நிலையினை நினைத்து கூட பார்க்க இயலாது(உறவுகளுக்காக முழு மனதுடன் விட்டுக் கொடுப்பது வேறு ஆனால் அது உங்கள் சுதந்திரத்தை கூண்டுக்குள் வைக்காமல் இருக்கட்டும்)
அடுத்தவர்களை பழித்தல்: இந்த நம்பிக்கை குறைவு நமக்குள் ஒரு பயத்தினை உண்டாக்கி வாழ்வின் வலிமையை சந்திக்க இயலாத தடுமாற்ற நிலையினை உருவாக்கும். இந்த இயலாமை ஆழ்மன உலைச்சலினை கொடுத்து. அடுத்தவர்களை குறை கூற ஆரம்பித்துவிடுவோம் அது நம் வாழ்வின் வெற்றிக்கு தேவையான (ம) வாழ்வின் இன்றியமையாத உறவுகளுக்கு மிகப்பெரிய தடையாகலாம்
எண்ணங்களை ஆராய்தலும் கட்டுப்படுத்துதலும்: உங்கள் எண்ணங்களை அலசுங்கள் எங்கு உங்கள் இதயம் சந்தோசமாக இருக்கிறது. அந்த செயல்களை உங்கள் வாழ்வின் பழக்கமாக்குங்கள் ஆனால் அதற்க்கு முன்பு அது சரியான செயலா என உங்களுக்குள் ஆராய்ந்துகொள்ளுங்கள்.
ஏனெனில் சில செயல்கள் உடனடியாக சந்தோசத்தினை கொடுத்தாலும்(இந்த செயல்களை நீங்கள் உங்கள் வாழ்வின் அனுபவத்தினாலோ, அடுத்தவர்களின் வாழ்வில் நிகழ்பவனவற்றைக் கொண்டோ அல்லது மற்ற ஆதாரங்களிலிருந்து அறிந்துகொள்ளலாம்) பின்னாளில் அதுவே உங்கள் மனதின் உறுத்தலாகவோ அல்லது உங்கள் சந்தோசத்தை சிதைக்கின்ற காரணியாக மாறலாம்.
நிகழ்வுகளை(வெற்றி, தோல்வி) ஏற்றுக்கொள்ளல்: வாழ்க்கையில் சில விஷயங்கள் நமது கட்டுப்பாட்டுக்குள் இல்லாமலே தோற்க்க நேரலாம். சில விஷயங்கள் நமது கட்டுப்பாட்டில் இருந்தாலும் தோற்க்க நேரலாம் அதற்க்காக கவலைப் பட்டுக் கொண்டிருப்போம். அதனை நினைத்து கவலைப்படுவதால் நம்மால் கடந்த காலத்திற்க்கு சென்று அதனை வெற்றியாக்க முடியுமா? என்ற கேள்வியினை உங்களுக்குள் கேட்டுக் கொள்ளுங்கள்.
உண்மையில் நாம் முடிந்துபோன விஷயத்தில் நமது நேரத்தினை வீணாக்குகிறோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். வாழ்வில் தோல்வியில் நாம் நினைக்காத அளவிற்க்கு படிப்பினைகள் உள்ளன என்பதை எப்பொழுதும் மனிதில் கொள்ளுங்கள். தோல்வியோ வெற்றியோ முழு மனதுடன் ஏற்றுக் கொண்டு அதனை முரியடிக்கவோ அல்லது காத்துக் கொள்வதற்க்கான முயற்ச்சியினை தொடங்குங்கள்.
சந்தோசம் தன்னுல்தான் இருக்கிறதென நம்புதல் : உங்கள் சந்தோசம் உங்களுக்குள்தான் இருக்கிறது என நம்புங்கள். மனிதத்தின் எதிற்பார்ப்புகளுக்கு எல்லையில்லை ஆனால் நடைமுறை எதார்த்தத்திற்க்கு நிறைய கட்டுப்பாடுகள் இருக்கின்றது என்பதினை மனிதம் உணர்ந்து எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்ளும் வரை அது உண்மையான சந்தோசத்தினை உணரயியலாது.
நீங்கள் இந்த பொருளினை வாங்கினால்தான் இந்த உறவுகள் இப்படி நடந்து கொண்டால்தான் நான் சந்தோசமாக இருப்பேன் என உங்கள் சந்தோசத்திற்க்கு கட்டுப்பாடுகள் வைக்காதீர்கள். வாழ்வில் சின்ன சின்ன விஷயங்களுக்கு கூட சந்தோசப்பட பழகிக்கொள்ளுங்கள்(பேருந்துக்கு 5 நிமிடம் தாமதமாக சென்று அந்த பேருந்தினை பிடிக்கும் போது உள்ளுக்குள் பூரித்ததுண்டா (ம) கடும் வெயிலில் நடந்து வந்து வேம்பு மரத்தின் நிழலில் அதன் ஈரக்காற்றில் சிலிர்த்ததுண்டா)
இப்படி நாம் சந்தோசப் படக்கூடிய நிறைய நிகழ்வுகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன நாம்தான் அவற்றை அடையாலம் கண்டுகொள்ள தவறுகிறோம் என்பதினை உணருங்கள்.
தியானமும் உடற்பயிற்ச்சியும்: இந்த உடற்பயிற்ச்சியும் தியானத்தையும் பயிற்ச்சி செய்வதன் மூலம் நீங்கள் மனதளவில் உடல் ரீதியாக உங்களை கட்டுப்படுத்திக் கொள்ளலாம். நீங்கள் தியானத்தில் அடுத்தவர்களை கட்டுப்படுத்துகின்ற வித்தையினை கற்றுக் கொள்ள வேண்டாம் ஆனால் உங்கள் சிந்தனையை 5 நிமிடங்கள் கட்டுப்பாடுக்குள் வைத்துக் கொள்ளும் மந்திரத்தினை கற்றுக் கொள்ளுங்கள் அது உங்கள் வாழ்வின் உண்மையான சந்தோஷத்தினை தேர்ந்தெடுக்கின்ற தெளிவினை உங்களுக்கு அளிக்கும் என்பது தின்னம்.
உண்மையான சந்தோசம் அடுத்தவர்கள் உங்களுக்கு பிடித்தவாறு நடந்து கொள்வதில் இல்லை.(ஏனெனில் அது மற்றொரு ஊண் என்பதினை நாம் மறந்துவிடுகிறோம்)
நீங்கள்
உங்களுக்கு பிடித்தவாறு நடந்து கொள்வது
உங்களுக்கு பிடித்தவற்றை செய்வது
உங்களுக்கு பிடித்தவற்றை தேர்ந்தெடுப்பது
நினைக்கின்ற உரிமையுடனும் சுதந்திரத்துடன் வாழ்வது
நல்ல உறக்கம்: இராமயணத்தில் கும்பகரனின் இறப்புக்கு காரணம் அவனை பாதி தூக்கத்தில் எழுப்பியதால் என கம்பர் எழுதுவார். அத்தகைய மகத்தானது இந்த உறக்கம் அது நமது சிந்தனையினை, எண்ணம், அசைவுகள் அனைத்தையும் கட்டுப்படுத்துகின்ற உன்னதம்.நீங்கள் இதனை கவனித்தால் உங்கள் சந்தோசம் கரையாமல் இருக்குமென்பது மறுக்க முடியாத உண்மை.
எதிர்பார்ப்பு என்னும்
எதிரியை எடுத்தெரிந்துவிட்டு
எதார்த்தம் என்னும்
எளிமையை - வாழ்வின்
தாரக மந்திரமாக்குங்கள் - இந்த
சந்தோசமென்னும் சரணாலயத்தில்
வாழ்ந்திருக்க...!
தடைகள்
தன்னம்பிக்கை இல்லாமை: நமக்குள் நம்மீது நம்பிக்கை குறையும் போது அடுத்தவர்களின் உதவியினை நாடவேண்டிவரும். நான் உதவுபவர்கள் உங்கள் எதிரி என கூறவில்லை அவர்கள் அவர்களது முதல் நண்பன் என்றுதான் சொல்கிறேன். (உங்கள் வாழ்வின் உடைமைகளை உரிமைகளை, முடிவுகளை, நீங்களே தேர்ந்தெடுங்கள் அதுதான் உங்களுக்கு உண்மையான சந்தோஷத்தைக் கொடுக்கும்.)
பயம்: நீங்கள் உடம்பில் முதுகெலும்பு இல்லாத புழுவாக இருந்தால் எரும்பு கூட உங்களை துன்புறுத்தும் அது அதன் வழியில் உங்களை வழி நடத்த ஆரம்பித்துவிடும். உங்களது பயம் தான் உங்கள் சுதந்திரத்தின் முதல் எதிரி. உங்கள் சுதந்திரம் பரிபோன பின் மனம் விரும்பும் செயலினைக்கூட செய்ய முடியாமல் இருக்கும் போது உங்கள் சந்தோசத்தின் நிலையினை நினைத்து கூட பார்க்க இயலாது(உறவுகளுக்காக முழு மனதுடன் விட்டுக் கொடுப்பது வேறு ஆனால் அது உங்கள் சுதந்திரத்தை கூண்டுக்குள் வைக்காமல் இருக்கட்டும்)
அடுத்தவர்களை பழித்தல்: இந்த நம்பிக்கை குறைவு நமக்குள் ஒரு பயத்தினை உண்டாக்கி வாழ்வின் வலிமையை சந்திக்க இயலாத தடுமாற்ற நிலையினை உருவாக்கும். இந்த இயலாமை ஆழ்மன உலைச்சலினை கொடுத்து. அடுத்தவர்களை குறை கூற ஆரம்பித்துவிடுவோம் அது நம் வாழ்வின் வெற்றிக்கு தேவையான (ம) வாழ்வின் இன்றியமையாத உறவுகளுக்கு மிகப்பெரிய தடையாகலாம்
தடையை தகர்த்தெரியும் மந்திரமாகலாம்
ஏனெனில் சில செயல்கள் உடனடியாக சந்தோசத்தினை கொடுத்தாலும்(இந்த செயல்களை நீங்கள் உங்கள் வாழ்வின் அனுபவத்தினாலோ, அடுத்தவர்களின் வாழ்வில் நிகழ்பவனவற்றைக் கொண்டோ அல்லது மற்ற ஆதாரங்களிலிருந்து அறிந்துகொள்ளலாம்) பின்னாளில் அதுவே உங்கள் மனதின் உறுத்தலாகவோ அல்லது உங்கள் சந்தோசத்தை சிதைக்கின்ற காரணியாக மாறலாம்.
நிகழ்வுகளை(வெற்றி, தோல்வி) ஏற்றுக்கொள்ளல்: வாழ்க்கையில் சில விஷயங்கள் நமது கட்டுப்பாட்டுக்குள் இல்லாமலே தோற்க்க நேரலாம். சில விஷயங்கள் நமது கட்டுப்பாட்டில் இருந்தாலும் தோற்க்க நேரலாம் அதற்க்காக கவலைப் பட்டுக் கொண்டிருப்போம். அதனை நினைத்து கவலைப்படுவதால் நம்மால் கடந்த காலத்திற்க்கு சென்று அதனை வெற்றியாக்க முடியுமா? என்ற கேள்வியினை உங்களுக்குள் கேட்டுக் கொள்ளுங்கள்.
உண்மையில் நாம் முடிந்துபோன விஷயத்தில் நமது நேரத்தினை வீணாக்குகிறோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். வாழ்வில் தோல்வியில் நாம் நினைக்காத அளவிற்க்கு படிப்பினைகள் உள்ளன என்பதை எப்பொழுதும் மனிதில் கொள்ளுங்கள். தோல்வியோ வெற்றியோ முழு மனதுடன் ஏற்றுக் கொண்டு அதனை முரியடிக்கவோ அல்லது காத்துக் கொள்வதற்க்கான முயற்ச்சியினை தொடங்குங்கள்.
சந்தோசம் தன்னுல்தான் இருக்கிறதென நம்புதல் : உங்கள் சந்தோசம் உங்களுக்குள்தான் இருக்கிறது என நம்புங்கள். மனிதத்தின் எதிற்பார்ப்புகளுக்கு எல்லையில்லை ஆனால் நடைமுறை எதார்த்தத்திற்க்கு நிறைய கட்டுப்பாடுகள் இருக்கின்றது என்பதினை மனிதம் உணர்ந்து எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்ளும் வரை அது உண்மையான சந்தோசத்தினை உணரயியலாது.
நீங்கள் இந்த பொருளினை வாங்கினால்தான் இந்த உறவுகள் இப்படி நடந்து கொண்டால்தான் நான் சந்தோசமாக இருப்பேன் என உங்கள் சந்தோசத்திற்க்கு கட்டுப்பாடுகள் வைக்காதீர்கள். வாழ்வில் சின்ன சின்ன விஷயங்களுக்கு கூட சந்தோசப்பட பழகிக்கொள்ளுங்கள்(பேருந்துக்கு 5 நிமிடம் தாமதமாக சென்று அந்த பேருந்தினை பிடிக்கும் போது உள்ளுக்குள் பூரித்ததுண்டா (ம) கடும் வெயிலில் நடந்து வந்து வேம்பு மரத்தின் நிழலில் அதன் ஈரக்காற்றில் சிலிர்த்ததுண்டா)
இப்படி நாம் சந்தோசப் படக்கூடிய நிறைய நிகழ்வுகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன நாம்தான் அவற்றை அடையாலம் கண்டுகொள்ள தவறுகிறோம் என்பதினை உணருங்கள்.
தியானமும் உடற்பயிற்ச்சியும்: இந்த உடற்பயிற்ச்சியும் தியானத்தையும் பயிற்ச்சி செய்வதன் மூலம் நீங்கள் மனதளவில் உடல் ரீதியாக உங்களை கட்டுப்படுத்திக் கொள்ளலாம். நீங்கள் தியானத்தில் அடுத்தவர்களை கட்டுப்படுத்துகின்ற வித்தையினை கற்றுக் கொள்ள வேண்டாம் ஆனால் உங்கள் சிந்தனையை 5 நிமிடங்கள் கட்டுப்பாடுக்குள் வைத்துக் கொள்ளும் மந்திரத்தினை கற்றுக் கொள்ளுங்கள் அது உங்கள் வாழ்வின் உண்மையான சந்தோஷத்தினை தேர்ந்தெடுக்கின்ற தெளிவினை உங்களுக்கு அளிக்கும் என்பது தின்னம்.
உண்மையான சந்தோசம் அடுத்தவர்கள் உங்களுக்கு பிடித்தவாறு நடந்து கொள்வதில் இல்லை.(ஏனெனில் அது மற்றொரு ஊண் என்பதினை நாம் மறந்துவிடுகிறோம்)
நீங்கள்
உங்களுக்கு பிடித்தவாறு நடந்து கொள்வது
உங்களுக்கு பிடித்தவற்றை செய்வது
உங்களுக்கு பிடித்தவற்றை தேர்ந்தெடுப்பது
நினைக்கின்ற உரிமையுடனும் சுதந்திரத்துடன் வாழ்வது
நல்ல உறக்கம்: இராமயணத்தில் கும்பகரனின் இறப்புக்கு காரணம் அவனை பாதி தூக்கத்தில் எழுப்பியதால் என கம்பர் எழுதுவார். அத்தகைய மகத்தானது இந்த உறக்கம் அது நமது சிந்தனையினை, எண்ணம், அசைவுகள் அனைத்தையும் கட்டுப்படுத்துகின்ற உன்னதம்.நீங்கள் இதனை கவனித்தால் உங்கள் சந்தோசம் கரையாமல் இருக்குமென்பது மறுக்க முடியாத உண்மை.
எதிர்பார்ப்பு என்னும்
எதிரியை எடுத்தெரிந்துவிட்டு
எதார்த்தம் என்னும்
எளிமையை - வாழ்வின்
தாரக மந்திரமாக்குங்கள் - இந்த
சந்தோசமென்னும் சரணாலயத்தில்
வாழ்ந்திருக்க...!
Sunday, 23 September 2012
வெற்றிக்கு வழியாகலாம்
தைரியத்தின் தட்சணை: தைரியம் உங்களுக்குள்ளே விதைக்கப்பட்டுள்ள நண்பன். நம்புங்கள் முழுமையான நல்லவர்களும் இங்கில்லை முழுமையான தீயவர்களும் இங்கில்லை ஏனெனில் மனிதம் நிறை குறைகளுடன் படைக்கப் பட்டுள்ளதுதான்(பிரபல விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசனின் வாழ்வைப் பார்த்தால் 1000 கண்டுபிடிப்புகளை கண்டு பிடித்த மாமேதை தனது தனி மனித வாழ்வில் தடுமாறியது தெரியவரும்).
"பெரியவர்களை கண்டு வியத்தலும் இலவே சிரியவர்களை கண்டு இகழ்தலும் இலவே" என்ற கனியன் பூங்குன்றனாரின் வார்த்தைகளையும் நினைவில் கொள்ளுங்கள் அந்த தைரியம் உங்கள் அடி மனதில் வேர் விட. உங்கள் வாழ்வில் ஒரு அடி எடுத்து வைக்க வேண்டுமானாலும் இந்த நண்பனின் உதவி இல்லாமல் இயலாது
சரியான இடத்தில் பழைய கட்டுப்பாடுகளை தகர்த்தல்: பழைய நம்பிக்கைகள் நல்லவைதான் ஆனால் அது இந்த புதிய சூழலுக்கு பொருந்தாதாக இருக்காலாம். நம் வாழ்வில் வெற்றி பெற வேண்டுமானால் அந்த பழம் நம்பிக்கைகளை சரியான இடத்தில் தகர்த்தெரிய வேண்டும்.
ராமயணத்தில் ராமன் வாலியை மறைந்து நின்று அம்பெய்து கொன்றான். அது அந்த காலத்து போர் முறைக்கு வகுக்கப் பட்ட கட்டுப்பாடுகலுக்கு புறம்பானதுதான். ஆனால் மக்களின் மனு தர்மத்தில் பின்னாலில் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
இந்த உதாரணம் கட்டுப் பாடுகளை சரியான இடத்தில் தகர்க்கின்றது என நம்புகிறேன்.
தேவையற்றவற்றை மனதிலிருந்து நீக்குதலும் எப்பொழுதும் நல்ல மாற்றங்களை ஏற்றுக்கொள்ள தயாராக இருத்தலும்: நம்ம வீட்டினை அழகாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பது நாம் எல்லோரும் விரும்புவதுதான். நாம் ரொம்ப செண்டிமென்ட் ஆன மனிதர் என்றால் அந்த பொருள் நமது நடைமுறை வாழ்விற்க்கு தேவையே இல்லை என்றாலும் எனது தாத்தா கொடுத்தது பாட்டி கொடுத்தது என நம்மால் ஒரு பொருளையும் வெளியே தூக்கி எரிய முடியாது. அதனால் நமது வீட்டினில் புது நடைமுறை வாழ்விற்க்கு தேவையான பொருளை வாங்கி வைக்க முடியாமல் போகலாம்.
அது போலத்தான் நாம் நம்பிக் கொண்டிருக்கும் சில பழைய நம்பிக்கைகளை அடையாலம் கண்டு கொண்டு தகர்த்தெரிந்து. உங்கள் மனதில் நல்ல மாற்றங்களை ஏற்றுக்கொள்ளத் தேவையான இடத்தினை எப்பொழுதும் தயாராக வைத்திருங்கள் .
இந்த நல்ல மாற்றங்களை நீங்கள் ஏற்றுக் கொள்ளாவிட்டால் நீங்கள் இந்த சுழலுக்கு ஒவ்வாதவர் ஆகி விடுவீர்கள் அது உங்கள் வளர்ச்சியினை தடுத்து கொண்டே இருக்கும்.
நாம் செய்த மாற்றம் இந்த சூழலுக்கு ஒத்துவருமா என உறுதி செய்தல்: நாம் என்னதான் நல்ல மாற்றத்தை நமக்குள் ஏற்ப்படித்திக் கொண்டாலும் அது நாம் வாழ்கின்ற இந்த சூழலுக்கு ஏற்றதாக இருக்க வேண்டும் அப்படி இல்லாவிட்டால் நமது மாற்றம் முற்றிலும் தவறாகிவிடும்.
இங்குதான் தொழில் முனைகின்ற நிறைய மனிதர்கள் தோல்வியினை தழுவியிருக்கிறார்கள். ஏனெனில் அவர்கள் அவர்களது பொருள்களில் நிறைய நல்ல மாற்றம் செய்தாலும் அவைகள் இந்த சூழலுக்கு ஏற்ற மாற்றமாக இருப்பதில்லை.

தைரியத்தை பாய்மரமாக்கி
பழமையெனும் பயத்தினை
தடைகளாய் தகர்த்து
நம்பிக்கையெனும் விடியலை நோக்கி
வாடைக் காற்றென்னும் சுழலுக்கேற்ப்ப
வாழ்க்கைப் படகினை செலுத்துங்கள்
வெற்றியெனும் சொர்க்கத் தீவினை அடைய...!
பழமையெனும் பயத்தினை
தடைகளாய் தகர்த்து
நம்பிக்கையெனும் விடியலை நோக்கி
வாடைக் காற்றென்னும் சுழலுக்கேற்ப்ப
வாழ்க்கைப் படகினை செலுத்துங்கள்
வெற்றியெனும் சொர்க்கத் தீவினை அடைய...!
Monday, 10 September 2012
உள்மன உணர்வும் வழி நடத்தும்
ஒரு மாணவன் தனது கல்லூரிப் பருவத்தில் கலாச்சாரம் என்னும் தேர்வினை எழுதி அதில் தேர்ச்சி பெற்று கலாச்சார முகாமிற்க்கான தகுதியினைப் பெற்றான் அன்று அவனுக்கான நுழைவுச் சீட்டு வந்திருந்தது.
அந்த நுழைவுச் சீட்டினைப் பெற்றுக் கொண்டவன் எப்பொழுதும் போல தனது நோட்டுக்குள் வைத்தான் அன்று மாலை தனது நண்பன் கணக்கு நோட்டினை கேட்க எப்பொழுதும் எதாவது உள்ளதா என பார்த்துவிட்டு கொடுப்பவன் அன்று மட்டும் சரியாக பார்க்கமல் கொடுத்துவிட்டு அனுப்புகிறான்.
அன்று இரவு தனது பயணத்தை துடங்குவத்தற்க்கு முன் தனது நுழைவுச் சீட்டினை தேடுகையில் அது இல்லாதது தெறிய வந்தது. தான் அன்று கல்லுரிக்கு எடுத்துச் சென்ற அனைத்தினிலும் தேடி விட்டு தன் நண்பனிடம் நோட்டு கொடுத்த ஞாபகம் வந்தது அவனது வீட்டுற்க்கு போன் செய்தான் அன்று தொடர்புகள் துண்டிக்கப்பட்டு இருந்தன.
உண்மையில் அவனுக்கு தனது நண்பனது ஊர் பெயர் மட்டும் தான் தெறியும் ஆனாலும் எப்படியாவது அவனைப் பார்த்து அவனிடம் நுழைவுச் சீட்டினை பெற்றுக் கொண்டு காலைக்குள் அங்கு சென்றுவிடலாம் என்ற உள் மன நம்பிக்கையுடன் தன்னுடன் வர இருந்த நண்பர்களை தனியாக செல்ல சொல்லி விட்டு தனது நண்பன் ஊருக்கு விரைந்தான்.
பேருந்தில் பயணித்த போது அவன் மனதில் அது எப்படியும் கிராமமாகத் தான் இருக்கும் சுலபமாக கண்டுபிடித்து விடலாம் என்று நினைத்த வண்ணம் சென்றான் ஆனால் பேருந்தில் இருந்து இறங்கிப் பார்த்தால் அது ஒரு சிறு நகரம். அவனது நம்பிக்கை சற்று தடுமாறினாலும் உள் மன உணர்வு மட்டும் கூறிக் கொண்டே இருந்தது எப்படியும் அந்த முகாமிற்க்கு போய் விடுவான் என்று.
தனது கல்லுரியின் பெயரினை கூறி அங்கு படிக்கும் மாணவர்களைப் பற்றிகேட்டுக் கொண்டு சுமார் 2 கிலோ மீட்டர் நடந்திருப்பான். அதன் பிறகு தனது கல்லுரியில் படிக்கும் மாணவனின் விலாசம் கிடைத்தது. அவரிடம் சென்று கேட்கையில் தனது நண்பனின் ஊர் அங்கிருந்து 3 கிலோ மீட்டர் என தெரிந்து கொண்ட பின் அந்த இருண்ட சூழலில் சென்று தனது நண்பன் வீட்டினை அடைந்தான்.
நம்பிக்கை மீண்டும் துளிர் விட்டது. வீட்டுக்குள் சென்று அவரது அம்மாவிடம் கேட்ட போது அவன் அவனது அக்காவின் வீட்டிற்க்கு சென்றிருப்பதாக கூறி ஒரு தொலைபோசி எண்ணினை கொடுத்தார்கள் அவர்களும் அவனை தொடர்புகொள்ள நினைத்தார்கள். மன நிம்மதிக்காக அவன் புத்தகங்களை வைக்கின்ற இடங்களை தேடிப் பார்த்துவிட்டு.
மேலும் நம்பிக்கை தளர்ந்தவனாய் மறுபடியும் 3 இடங்களில் போன் செய்து பார்த்து. உதவி செய்ய வந்தவருக்கு நன்றி கூறிவிட்டு தனது கல்லுரியினை நோக்கி பயனித்தான். நம்பிக்கை முழுவதினையும் இழந்தாலும் அவன் உள் மன உணர்வுகள் மட்டும் எப்படியும் அந்த முகாமிற்க்கு செல்வோம் என உணர்த்திய வண்ணம் இருந்தன.
தனது கல்லுரிக்கு அருகில் இருக்கின்ற நகரத்துக்கு வந்த போது 11 மணி இருக்கும். அந்த முகாமிற்க்கு போக வேண்டுமானால் காலை 10 மணிக்குள் செல்ல வேண்டும் அந்த ஊருக்கு செல்வதற்க்கு குறைந்து 10 மணி நேரம் பயணிக்க வேண்டும். இறுதியாக ஒரு முறை போன் செய்து பார்க்க அவன் உள் மனம் அறிவித்துக் கொண்டே இருந்தது.
நம்பிக்கையே இல்லாமல் அந்த எண்ணிர்க்கு போன் செய்தார். முதல் முறை மணி ஒளித்தது. அங்கே நண்பனின் சகோதரி அதனை எடுத்து தனது தம்பி வெளியில் சென்றிருப்பதாக. காத்திருப்பதின் வலி உண்மையில் இந்த மாதிரி சிக்கலான நிமிடங்களில் தான் நாம் உணர்வோம். அந்த கடைக்கார் தனது கடையினை மூடுவதற்க்கு தயாரானார்.
அவன் எப்பொழுது வருவான் என தெரியாவிட்டலும் அந்த கடைக்காரரிடம் 10 நிமிடங்கள் கழித்து மூடுமாறு வேண்டி கேட்டுக் கொண்டான். அவன் உள் மனம் உணர்த்திய உணர்வுகள் வீண் போகவில்லை. தொலைபேசி மணி ஒளித்தது 7 ஆவது நிமிடத்தில். அவனது நண்பன் என்னாச்சு என சாந்தமாக கேட்டான். அவனிடம் தனது நுழைவுச்சீட்டு இருப்பதை உறுதி செய்து கொண்டு அவனை அருகில் உள்ள பேருந்து நிலையத்திற்கு வரச்சொன்னான்.
அது வரை ஒளிந்திருந்த அதிஷ்டம் கை கொடுத்தார் போல. அவனுக்கு பேருந்துகள் உடனுக்குடன் கிடைத்தது. தனது நண்பன் இருந்த ஊரும் அவன் முகாமிற்க்கு போக வேண்டிய பாதையில் இருந்ததால். அவன் சுலபமாக அந்த நுழைவுச்சீட்டினை பெற்றுக் கொண்டு அந்த முகாமிற்க்கு சென்று சேர்ந்தான்.
சில நேரங்களில் நமது நம்பிக்கை தடுமாறினாலும் இந்த உள் மன உணர்வு(intuition) நமக்கு வழி காட்டும். நம்புங்கள் நல்லதே நடக்கும் என்று உங்கள் உள் மன வழிகாட்டுதலுடன்.

Subscribe to:
Posts (Atom)