Saturday, 29 June 2013

எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

     நண்பர் ஒருவர் தனது சிறிய தந்தைக்கு பிறந்த குழந்தைக்கு உடல் நிலை சரியில்லாததால் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்தது செல்கிறார். அப்பொழுது அங்குள்ள மருத்துவர்கள் குழந்தையின் நிலமை கவலைக்கிமாக இருக்கிறது சீிக்கிரம் பெரிய மருத்துவமனைக்கு அழைத்து செல்லுங்கள் என்றார்கள்

      அந்த சமயத்தில் அதனைப் பார்த்துக் கொண்டிருந்த ஒரு நபர் அந்த நண்பரிடம் சென்று ஏதாவது ஆச்சினா சொல்லுங்க நம்ம வண்டியில் ஊருக்கு போயிரலாம் என்றார் தது அமரர் ஊர்தியினைக் காட்டி.  அந்த நண்பர் முகம் சிவந்து அந்த இடம் விட்டு அகன்றார் அது மருத்துவமனை என்பதால். காசுக்காக எவ்வளவு அருவருக்கத் தக்க எண்ணம்.

       சில  நாட்களுக்கு முன்பு ஒரு ஆட்டோ டிரைவர் ஒருவர் தனது நண்பர் "எப்படி இருந்தது அந்த பயணம் பணம் கரைந்திருக்குமே?". என கேட்கையில் அது உண்மைதான் ஆனால் அந்த சந்தோச நினைவுகள் எனக்குள் சில காலம் உழைக்கின்ற ஆற்றலை கொடுத்திருக்கிறது என சொன்னார் சிரித்த முகத்துடன். 

       பணம் பதவிக்கு பலம் எதற்க்கும் அடிபனியாத இந்த சந்தோசம் நம் அழகான எண்ணத்தில்தான் அமைந்திருக்கிறது. நான் கண்டு வந்த சில நூல்கள் சொல்லின "உங்கள் சந்தோசம் நீங்கள் வரையறுத்ததாக இருக்கட்டும் அது உங்களுக்கு முழு மன திருப்தியை கொடுக்கும்".

      சந்தோசம் சாத்திரமல்ல மற்றவரின் சந்தோச பதிவுகளை பாதையாக்கிக் கொள்ள அது நம் நடைமுறையில் தோன்றுகின்ற தனித்துவமான உணர்வு. அவர்கள் செய்வது போல செய்வதுதான் சந்தோசம் என்ற எண்ணத்தை விடுங்கள் ஏனெனில் வாழ்ந்து முடித்து வாழ்பவர்கள் இங்கில்லை.

     ஒன்றை மட்டும் மனத்தில் கொள்ளுங்கள் நமது நீண்ட கால சந்தோசம் நமது நிகழ்காலத்தில் தோன்றுகின்ற எண்ணங்களால் மட்டும் நிர்ணயிக்கப் படுவதில்லை. அதற்கான அடிப்படை மூலம் நம் எண்ணத்தில்தான் இருக்கிறது அது அழகானால் நாம் வாழ்வு அழகாவது தின்னம்.

Saturday, 11 May 2013

கலாச்சார நினைவு சின்னங்களும் அதன் அவசியமும்


  சில நாட்களுக்கு முன்பு நான் சென்று வந்த ஊரில் நான் பார்த்த இந்த தேரினைப் பார்த்தவுடன் உங்களுக்கு என்ன தோன்றுகின்றது. சிறு கனம் என்னை என் நினைவுகள் அந்த குருச்சேத்திரப் போருக்குத்தான் கொண்டு சென்றது.

  கிருஷ்ணர்  தேரினை செலுத்த  அதில் ஆக்ரோசத்துன்  நின்றிருந்த அர்ச்சுனன்,  படை சிறியதாய் இருந்தாலும் உண்மையையும் ஒரு ஆயுதமாய் கொண்டு போராடிய கூட்டம் மறுபுறம், செய்தது துரோகமானாலும் துடிக்காத இதயத்தில் தோன்றிய கௌரவத்தை காக்க துடிக்கின்ற கௌரவர்கள், கருணையே உருவான கர்னனின் கம்பீர தோற்றத்துன் நின்றிருந்த காட்சியும் அங்கே அறிவுறுத்தப்பற்றட்ட நன்னெறிகள் என் கண் முன்னே வந்து சென்றது.


   இன்று எத்னை எத்தனையோ அறுவருக்கத் தக்க விஷயங்கள் நடந்து கொண்டு இருக்கின்றன அதற்கு நமக்குள்ளே இதுதான் காரணமா அதுதான் காரணமா என ஒருவருக்கு ஒருவர் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறோம்

ஒரு ம் யோசித்துப் பார்த்தால் இதற்கெல்லாம் காரணம் மேற்கத்திய கலாச்சாரத்தின் தாக்கமும் நாம் மறந்து விட்ட நம் கலாச்சாரத்தின் சில நல்ல விஷயங்களும்தான் காரணம் என்பது தெறியவறும் அதற்காக நான் மற்ற கலாச்சாரத்தினை பின்பற்றாதீர்கள் என கூறவில்லை

  எல்லா கலாச்சாரத்திற்குள்ளும் அதற்கே உறித்தான நன்மை தீமைகள் இருக்கின்றன, ஆனால் இன்று நாம், நமது கலாச்சாரத்தில் இருக்கின் நல்ல விஷயங்களை இழந்திருக்கிறோம் மேலும் நமது உணவு, உடை, செயல்பாடுகளில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய மாற்றங்களால்தான். த்தகைய அருவறுக்கத்தக்க நிகழ்வுகள் நந்தேரிக் கொண்டிருக்கின்றன.

     இன்று கோயிலுக்கு செல்கின்ற மக்கள் கூட்டத்தை விட இருட்டுக் கடைக்கு செல்கின்ற கூட்டம் அதிகரித்திருக்கிறது. உணவுகளில்[ Negative Pranic Food ] உணர்ச்சிகளை தூண்டும் உணவுப் பொருட்கள் அதிகரித்திருக்கின். மக்கள் தொகை குறைவாக உள்ள நாட்டில் கண்டு எடுக்கப்பட்ட கலாச்சாரம் மக்கள் தொகை அதிகம் உள்ள நாட்டில் ஒவ்வாமை எற்படுத்திக்கொண்திருக்கிறது

    இங்கு தவறுக்கு காரணம் ஆணா பெண்ணா என்ற வாதம் உபயோகமற்றதாக தெரிகிறது.  இன்று அவசியமானது நமது கலாச்சாரத்தில் நாம் இழந்திருக்கிற நல்ல விஷயங்களை கண்டெடுத்து  அதனையே உங்களது பழக்கமாக்கிக் கொள்ளுங்கள். முடிந்தால், இந்த தேரினைப் போன்று நம் கலாச்சாரத்தினை நினைவு படுத்துகின்ற நினைவுச் சின்னங்களை உங்களுன் வைத்திருங்கள், அது நம் கலாச்சாரத்தின் நல்லவற்றை நினைவுபடுத்திய வண்ணம் இருக்கட்டும், இது நிச்சயம் நமது சமுதாயத்தில் நல்ல மாற்றத்தை கொடுப்பது திண்ணம்.

Sunday, 21 April 2013

மனிதனின் முன்னேற்றப் பாதையும் நல்லுறவுகளின் அவசியமும்

           ஒரு மாணவன் தனது கல்லூரிப் பருவத்தில் NCC முகாமினில் பாங்கேற்கிறான் அதற்கு அவன் அவனுக்கு பழக்கமில்லா நீண்ட  துரம் செல்ல வேண்டியிருந்தது.  ஆனாலும் தான் பெருமிதமாக செய்கின்ற அப்பனிக்காக அங்கு சென்று விட்டு திரும்புகையில் சாலையோரம் குடித்துவிட்டு  ஓட்டி வந்த வாகனத்துக்குள் சிக்கிக் கொண்டான்.

          அங்கு இருந்தவர்கள் அவன் குறிப்பேட்டினை எடுத்‌தப் பார்க்க அவனது உறவுகள் வெகு தொலைவில் இருப்பது தெரிய வருகிறது தெய்வாதீனமாக அந்த ஊருக்கு அருகாமையில் உள்ள ஒரு நபரின் தொலை பேசி எண்ணினைப் பார்த்து விட்டு அவருக்கு போன் செய்து சொன்னதும்.

        அடுத்த 30 மணித்துளிகளுக்குள் அவர் அவனை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு தனது இரத்தத்தையும் கொடுத்து அவனது விட்டிற்க்கு போன் செய்து கொண்டிருந்தார் அங்கிருந்தவர்கள் நீங்கள் யார் இவருக்கு என்றார் எனது பள்ளி  பருவத்து நண்பன் என்றார்.

         உண்மையில் ஒருவனின் முன்னேற்றத்திற்கும் சந்தோசத்திற்கும்  உண்மையான தூண்டுதலாய் இருப்பது அவனது நட்பும் உறவுளும்தான். அவர்கள் தகரம் தகரம் என கூறினால் தங்கம் கூட தகரமாகிவிடும் என்பார்கள் அது போலில்லாது உங்களை சூழ்ந்து நிற்கிற நட்பும், உறவுகளும் உங்களை ஆதரிப்பதாக இருக்கட்டும். அது இல்லாத நிலையில்  அதனை தூரத்தில் வைக்க கூட தயங்காதிர்கள்.

          ஒவ்வொரு வெற்றியாலனுக்குப் பின்னும் அவனை ஆதரித்த குழுமம் அலட்டிக் கொள்ளாமல் அமைதியுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறது  என்பது மறுக்க முடியாத ஒன்று.  உங்களிடம் உண்மையாய் இருக்கின்ற நட்புக்கும் உறவுகளுக்கும் உண்மையாய் இருங்கள் அது உங்களையும் உங்கள் சூழலையும் சந்தோசமாக்குவதுடன் அதுவே உங்களது வெற்றிப் பாதைக்கும் வழி வகுக்கும்.

Friday, 19 April 2013

விதைப்பதும் விளைவதும்

           நன்றாக வசதி படைத்தவர் ஒருவர் தன் தாய் தந்தையுடன் வசித்து வந்தார் நல்ல உழைப்பாளி ஆனால் தனது பெற்றோரை பாதுகாப்பதில் (ம) கவனித்துக் கொள்வதில் ஒரு சிறு தடுமாற்றம் இரக்கமும் சகிப்பு தன்மை இல்லாமை அவர்களை தனி அறையில் வாழ வைத்து வந்தார்.

          அவர்களுக்கென தனி அறை தனித்த பொருட்கள் அவர்கள் உபயோகப் படுத்தும் பொருட்களை கூட அவர் தொட மாட்டார் அவருடைய மனைவி இந்த காலத்து பெண்மனி மேலும் தன் சந்தோசத்தை மட்டும் பெரிதாக நினைத்ததுக் கொண்டு வாழ்பவள்.

         மகனின் மூலம் இவ்வாறு நடத்தப்பட்ட அவர்கள் பெறும் மன உழைச்சலுக்கு ஆலாகி ஒரு நாளில் இறந்து போயினர். அவர்களது இறுதி சடங்கு முடிந்தபின் அந்த அறையில் உள்ள பொருட்களையெல்லாம் எடுத்த எறிந்துவிட்டு அந்த பாத்திரங்களையெல்லாம் வெளியேற்றிக் கொண்டிருந்தார்.

         அதனைப் பார்த்துவிட்டு அந்த சிறுவன் ஓடிவந்து அப்பா அப்பா அவைகளை  ஏன் தூக்கி எறிகிறீர்கள். அவைகளையெல்லாம் அகற்றிவிட்டால் நான் உங்களை எங்கு தங்கவைப்பது எதில் சோறு போடுவது என கேட்டான்?

        விளையாட்டு பிள்ளை ஆனால் எதார்த்தமான கேள்வி "நாம் எதனை கொண்டு அடுத்தவர்களை அளக்கிறோமே அதனைக் கொண்டே நாம் அளக்கப்படுவோம்"  அந்த தந்தை  பேச முடியாமல் மலைத்துப் போய் அவ்விடத்திலே உட்கார்ந்து விட்டார்.

       மனிதம் நேர்மறை (ம) எதிர்மறை உணர்வகளோடு படைக்கப் பட்டிருக்கிறது.  ஏன் உலகம் போற்றும் தலைவர்கள் கூட சில எதிர்மறையான உணர்வுகளுடன் வாழ்ந்திருக்கிறார் ஆனால் அவைகள் குறுகிய வட்டத்துக்குள் வைக்கப்பட்டு  நேர்மாறையான உணர்வுகள் மட்டும் பரப்பப்பட்டன அதுவே அவர்களின் வெற்றிக்கும் தூண்டுதலாய் இருந்திருக்கிறது.

          ஒரு சிறு எதிர்மறையான உணர்வுக்கு உதாரணமாய் கோபம் இது நம் உள்ளத்தில் நினைத்த ஒன்று நிகழாத ஆதங்கத்தின் வெளிப்பாடு.  அது வந்தவுடன் அதற்க்கு காரணமானவர்கள் மீது கல்வீச காத்திருக்கிற காலம். அதற்க்காக சிதறடிக்கப்படுகின்ற நம் கவனச் சிதறல்கள் அதனால் நாம் இழந்துவிடுகின்ற நிகழ்கால நிமிடங்கள் என அடுக்கி  கொண்டே போகலாம்.

         ஆனால் நேர்மறையான நம் தாயின் அன்பு;  உலகில் எத்தனை உறவுகள் வந்தாலும் சரி செய்ய இயலாது என நினைக்க வைக்கிற அவளது அன்பும் அக்கறையும்   இப்படி எத்தனை எத்தனையோ நேர்மறை  (ம) எதிர் மறையான உணர்வுகள் நம்மில்.

        எது நமக்கு வெற்றியையும் நல்ல சந்தோசமான சூழ்நிலையையும் கொடுக்கும் எதனை இங்கு விதையாக விட்டுச் செல்லப் போகிறோம்  அதனால் என்ன விளையப் போகிறது என்ற விடை தெறியா வினாவிற்க்கு விடை தேடுகின்ற தாகமாய் விரைகிற காலம்.

Saturday, 13 April 2013

நல் வாழ்விற்க்கான தூண்டுதல்

          ஒருஇரயில்பயணத்தின் போது ஒருவர் தனது நண்பரிடம் தனது மகன் Diploma படிப்பதாக கூறினார் அதற்க்கு அவர் நல்ல படிப்புதான் ஆனால் படித்து முடித்து விட்டு வேலைக்கு சென்றபின் தொலை தூர கல்வியில்  B.E படிக்கச் சொல்லுங்கள் என்கிறார். 

         அடுத்த நிமிடம் அது சரிதானா தம்பி என என்னைக் கேட்க நான் ஆமாம் என சொல்வதற்க்குள் அந்த தந்தை சொன்னார் "இதுவே என் தகுதிக்கு    அப்பாற்பட்டது அவன் வேலைக்கு சென்று படிப்பதாக இருந்தால் படிக்கட்டும் இதுவே வங்கியில் கடன் வாங்கிதான் படிக்க வைக்கிறேன்.

          அதுவும் எத்தனையோ வங்கியில் சுய நலன்களுக்காக கடன் கொடுக்க மறுத்தாலும் தனது வாங்கியின் மேனேஜர் பெயரினைக் கூறி அந்த புண்ணியவான் நல்லா இருக்கணும் அவர் பசங்கலெல்லாம் நல்லா இருக்கட்டும் எங்கள் வாழ்வில் விளக்கேற்றிய பெரிய மனிதன்"
என கூறிவிட்டு கலங்க ஆரம்பித்து விட்டார்.

          உண்மையில் உலகத்தில் நல்வழியில் நடப்பது கொஞ்சம் கஷ்டமான விஷயமாக இருந்தாலும் அதற்க்கு சிறு சிறு ஆசைகளை இழக்க வேண்டியிருந்தாலும் இந்த மாதிரியான வாழ்த்துகள் நிச்சயமாக அவருக்கு மன நிம்மதியையும் சந்தோசத்தையும் கொடுக்கும். 

         தீமைகள் அதிகமிருக்குமிடத்து நன்மை வாழ்வது கஷ்டம்தான் என்றாலும் நன்மை இருக்குமிடத்து தீமைகள் இருப்பதும் கஷ்டம்தான்.  தீமைகள் உங்களை சூழ்ந்து கொண்டால் இதனை நினைவில் கொள்ளுங்கள்.

        ஒரு நாள் புத்தர் நடந்து சென்ற பாதையில் அவரை பிடிக்காதவர் நின்று கொண்டு சரா மாறியாக திட்‌டினாராம் புத்தர் சிரித்ததுவிட்டு ஆங்கிருந்து விலகி சென்றாராம் அதனைப் பற்றி மக்கள் அவரிடம் கேட்க புத்தர் சொன்னாராம்.

        உங்களுக்கு யாராவது அன்பளிப்பு கொடுத்தால் அது பிடித்தால் தானே ஏற்றுக் கொள்வீர்கள் அது போலத்தான் அவன் கொடுத்த அன்பளிப்பு எனக்கு ஒவ்வாதது மேலும் அது எனக்கு பிடிக்கவில்லை அதனால் அது என்னுடையதில்லை  என கூறிவிட்டு சென்றாராம். 

        நம்மால் எல்லாருக்கும் நல்லவராகவோ தீயவராகவோ இருக்க முடியாது அதுதான் எதார்த்தமும் கூட என்பதினை மனதில் கொண்டு நமக்கு ஒத்துபோகிற. பிடித்தவற்றை. தேவையானவற்றை ஏற்றுக்கொண்டும் தேவையற்ற, ஒவ்வாத, பிடிக்காதவற்றை எனதில்லை என்ற உணர்வுடன் நல்லனவற்றை நோக்கி பயனிப்போம்.  விடிகிற காலை நம் சந்தோசத்தின் விடியலாய் இருக்க.

Saturday, 16 March 2013

காலத்தே கிடைக்கின்ற அறிவும் அதன் பயன்பாடும்

           அது அழகான மாலை பொழுது.  முதிர்வின் விளைவால் ஆசான் விடை கேட்ட நேரம்.அந்த கல்லூரியின் வரலாற்றிற்க்கு வண்ணம் கொடுத்தவர். உண்மையில் குறைந்தது 50க்கும் மேற்ப்பட்ட மாணவர்கள் அவர் உதவியால் அறிவியலில் Ph.D.,  முடித்திருப்பார்கள்.

          எல்லோரும் தங்களின் மனதில் இருந்தவற்றை  கூறி வாழ்த்தினார்கள் அப்பொழுதுதான் அவரை மணந்தவற்க்கு வாய்ப்பளிக்கப்பட்டது.  அவர் இவ்வாறு ஆரம்பித்தார் ஒரு நாள் எங்கள் வீட்டில் மீன் விளக்கினை சிரமைக்கும் பலகை  பழுதடைந்திருந்தது.

          நான் அவரிடம் சரி செய்யும்படி கேட்டுக் கொண்டேன் அவர் முயற்ச்சி செய்து சரிசெய்ய முடியாமல்  மின்பொறியாளரை  அழைத்து சரி செய்ய சொன்னார் அவர் வந்து 5 நிமிடத்திற்க்குள் சரி செய்துவிட்டு ஆங்கிருந்து சென்றுவிட்டார், 

         எனது கணவரை அசிங்கப்படுத்துவதற்க்காக சொல்லவில்லை அவருக்குள் எவ்வளவு நல்ல விஷயங்கள் இருக்கிறது எனக்கு தெரியும்
ஆனாலும் நான் இங்கு சொல்வது ஏதார்த்தமான விஷயம்.

         நாம் கற்க்கின்றவை நடை முறையில் நமக்கு உதவுவதாக இருக்க வேண்டும். நல்ல அறிவு நல்லவற்றிற்க்கு பயன்பட வேண்டும், உலகில் வாழுகின்ற எண்ணத்தை அதிகப்படுத்துவதாக இருக்க வேண்டும்.
அடுத்தவரை பழிக்க, தீயவற்றிற்க்காக பயன்படுகின்ற அறிவு அவனிடமிருந்தும் அவன் பாமரனே என முடிக்கிறார்.

          இதனை கேட்டுவிட்டு அந்த ஆசானின் கண்ணில் கண்ணீர் பொல பொலவென சரிந்தன "நான்  தோல்வியுற்றிருப்பதை தெரியாமலே தோள் தட்டிக்கொண்டிருக்கிறேன்"

         இந்த நிகழ்வு 10 வருடத்திற்க்கு முன்பு நடந்திருந்தால்,  நடை முறையில் உதவுகின்ற அறிவினை சேர்த்து உங்களுடன் பகிர்ந்து கொள்ள முயற்ச்சித்திருப்பேன் என கர்வம் பேசாமல் கனத்தக் குரலுடன் கூறினார் 

"மாணவர்களே நான் கற்ப்பித்த பாடங்களை விட என் வாழ்வு ஒரு சிறந்த பாடமாக  இருக்கட்டும்.  நாவு நரம்புடன் படைக்கப்படவில்லை நல்லவற்றை மட்டும் பேசுவதற்க்கும், கேட்ட வார்த்தையில் கூனி குறிகிக் கொள்வதற்கும். நல்ல விஷயமுன்னு தெரிந்தால் எதிர் திசையில் காற்று பாலமாக அடித்தாலும் நடுங்காதே காலம் மாறி,  திசை மாறிய காற்றில் வீறு நடை போடுகின்ற காலம் வரும்."

             நான் நல்ல விதையை இங்கு விட்டு செல்கிறேன் எனது மனைவியின் ஏதார்த்தமான கேள்விக் கனையால், என்ற மன நிம்மதியுடன் தனது மாணவச் செல்வங்களுக்கு நன்றி கூறி  அங்கிருந்து விடை பெறுகிறார்.

Friday, 8 March 2013

பழையன கழிதலும் புதியன புகுதலும்


          வாழ்கின்ற வாழ்வு சந்தோசமான சரித்திரமாய் நமக்கும்,  நம்மை சுற்றியுள்ளவர்களுக்கும் உபயோகமானதாகவும் இருக்கட்டும்.
வாழ்வில் இயால்பாய்  இருங்கள்  உங்கள் குறைகளை பூசி மொழுவாமல் புன்னகையுடன் வருகிற நல்ல மாற்றங்களை ஏற்றுக் கொள்ளுங்கள் அது நிச்சயம் உங்களுக்கு நிறைவான மன நிம்மதியினைக் கொடுக்கும்.

           வாழ்வில் வதைபாடுகளையும், வருத்தத்தை, தோல்வியை மட்டும் கொடுக்கின்றவற்றிற்க்கு உங்கள் வாழ்வின் வெளி கதவுகளைக் காட்டுங்கள். வாழ்வு கற்பனைக் காவியமல்ல சோகமான முடிவில் மக்களின் இதயங்களை கொள்ளை கொள்வற்க்கு.
      
        உண்மையில் பார்த்தால் வெற்றி ஒரு வித போதை அது நாம் பலவீனம் ஆகிக் கொண்டிருப்பதையே உணரவிடாது.  அதற்க்காக வாழ்வின் வதைபாடுகளை நினைவில் கொள்ள வேண்டும் என சொல்ல  வரவில்லை அதிலிருந்து மீண்டு வந்த நிகழ்வுகளை நிஜமான ஆதாரமென கொள்ளுங்கள்.

        நாம் வெற்றியை மட்டும் எண்ணிக் கொண்டிருந்தால் தோல்வியை சந்திக்கிற பலம் நமக்கு இல்லாமல் போகலாம், ஏன் ஒரு சின்ன தோல்வி கூட நம் வாழ்வின் திசையினை மாற்றிவிடலாம்.

      வாழ்வில் தோல்வி கேவளம் என நினைத்து மூலையில் எடிசன் முடங்கியிருந்தால் உலகம் இன்றும் இருட்டில்தான் இருந்திருக்கும்.
ஆயிரம் முறை தோற்றிருந்தாலும் தனது அடி மன வலிமையில் ஆயிரம் கண்டுபிடிப்புகளை உலகிற்க்கு அளித்த வெற்றியாலனின் உதாரணமிருக்கையில், தோல்வியைக் கண்டு துவளாதீர்கள் அதனை தூக்கி எறிகின்ற நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள்

*****No defeat is final until you stop trying*****

      எனக்கு சில கருத்துகள் வந்தன நீங்கள் ஏன் தோல்வியினை பற்றி அதிகமாக அலசுகிறிர்கள் நீங்கள் உங்கள் வாழ்வில் அதிகம் தோல்வியினை சந்தித்தவறா?. என. நான் என்னை விற்பதற்க்காக எழுதவில்லை என்ற உண்மைக்கு காலம் பதில் சொல்லும். இங்கே வெற்றியின் சாரலை விட பூமியில் மூச்சி முட்டி வெளி வந்த விதைகளை விதைக்க விரும்புகிறேன் [இது தோல்வியல்ல அதிலிருந்து மீண்டு வந்த வெற்றி]

*****Success is how high you bounce when you hit the bottom*****