Saturday, 16 March 2013

காலத்தே கிடைக்கின்ற அறிவும் அதன் பயன்பாடும்

           அது அழகான மாலை பொழுது.  முதிர்வின் விளைவால் ஆசான் விடை கேட்ட நேரம்.அந்த கல்லூரியின் வரலாற்றிற்க்கு வண்ணம் கொடுத்தவர். உண்மையில் குறைந்தது 50க்கும் மேற்ப்பட்ட மாணவர்கள் அவர் உதவியால் அறிவியலில் Ph.D.,  முடித்திருப்பார்கள்.

          எல்லோரும் தங்களின் மனதில் இருந்தவற்றை  கூறி வாழ்த்தினார்கள் அப்பொழுதுதான் அவரை மணந்தவற்க்கு வாய்ப்பளிக்கப்பட்டது.  அவர் இவ்வாறு ஆரம்பித்தார் ஒரு நாள் எங்கள் வீட்டில் மீன் விளக்கினை சிரமைக்கும் பலகை  பழுதடைந்திருந்தது.

          நான் அவரிடம் சரி செய்யும்படி கேட்டுக் கொண்டேன் அவர் முயற்ச்சி செய்து சரிசெய்ய முடியாமல்  மின்பொறியாளரை  அழைத்து சரி செய்ய சொன்னார் அவர் வந்து 5 நிமிடத்திற்க்குள் சரி செய்துவிட்டு ஆங்கிருந்து சென்றுவிட்டார், 

         எனது கணவரை அசிங்கப்படுத்துவதற்க்காக சொல்லவில்லை அவருக்குள் எவ்வளவு நல்ல விஷயங்கள் இருக்கிறது எனக்கு தெரியும்
ஆனாலும் நான் இங்கு சொல்வது ஏதார்த்தமான விஷயம்.

         நாம் கற்க்கின்றவை நடை முறையில் நமக்கு உதவுவதாக இருக்க வேண்டும். நல்ல அறிவு நல்லவற்றிற்க்கு பயன்பட வேண்டும், உலகில் வாழுகின்ற எண்ணத்தை அதிகப்படுத்துவதாக இருக்க வேண்டும்.
அடுத்தவரை பழிக்க, தீயவற்றிற்க்காக பயன்படுகின்ற அறிவு அவனிடமிருந்தும் அவன் பாமரனே என முடிக்கிறார்.

          இதனை கேட்டுவிட்டு அந்த ஆசானின் கண்ணில் கண்ணீர் பொல பொலவென சரிந்தன "நான்  தோல்வியுற்றிருப்பதை தெரியாமலே தோள் தட்டிக்கொண்டிருக்கிறேன்"

         இந்த நிகழ்வு 10 வருடத்திற்க்கு முன்பு நடந்திருந்தால்,  நடை முறையில் உதவுகின்ற அறிவினை சேர்த்து உங்களுடன் பகிர்ந்து கொள்ள முயற்ச்சித்திருப்பேன் என கர்வம் பேசாமல் கனத்தக் குரலுடன் கூறினார் 

"மாணவர்களே நான் கற்ப்பித்த பாடங்களை விட என் வாழ்வு ஒரு சிறந்த பாடமாக  இருக்கட்டும்.  நாவு நரம்புடன் படைக்கப்படவில்லை நல்லவற்றை மட்டும் பேசுவதற்க்கும், கேட்ட வார்த்தையில் கூனி குறிகிக் கொள்வதற்கும். நல்ல விஷயமுன்னு தெரிந்தால் எதிர் திசையில் காற்று பாலமாக அடித்தாலும் நடுங்காதே காலம் மாறி,  திசை மாறிய காற்றில் வீறு நடை போடுகின்ற காலம் வரும்."

             நான் நல்ல விதையை இங்கு விட்டு செல்கிறேன் எனது மனைவியின் ஏதார்த்தமான கேள்விக் கனையால், என்ற மன நிம்மதியுடன் தனது மாணவச் செல்வங்களுக்கு நன்றி கூறி  அங்கிருந்து விடை பெறுகிறார்.

Friday, 8 March 2013

பழையன கழிதலும் புதியன புகுதலும்


          வாழ்கின்ற வாழ்வு சந்தோசமான சரித்திரமாய் நமக்கும்,  நம்மை சுற்றியுள்ளவர்களுக்கும் உபயோகமானதாகவும் இருக்கட்டும்.
வாழ்வில் இயால்பாய்  இருங்கள்  உங்கள் குறைகளை பூசி மொழுவாமல் புன்னகையுடன் வருகிற நல்ல மாற்றங்களை ஏற்றுக் கொள்ளுங்கள் அது நிச்சயம் உங்களுக்கு நிறைவான மன நிம்மதியினைக் கொடுக்கும்.

           வாழ்வில் வதைபாடுகளையும், வருத்தத்தை, தோல்வியை மட்டும் கொடுக்கின்றவற்றிற்க்கு உங்கள் வாழ்வின் வெளி கதவுகளைக் காட்டுங்கள். வாழ்வு கற்பனைக் காவியமல்ல சோகமான முடிவில் மக்களின் இதயங்களை கொள்ளை கொள்வற்க்கு.
      
        உண்மையில் பார்த்தால் வெற்றி ஒரு வித போதை அது நாம் பலவீனம் ஆகிக் கொண்டிருப்பதையே உணரவிடாது.  அதற்க்காக வாழ்வின் வதைபாடுகளை நினைவில் கொள்ள வேண்டும் என சொல்ல  வரவில்லை அதிலிருந்து மீண்டு வந்த நிகழ்வுகளை நிஜமான ஆதாரமென கொள்ளுங்கள்.

        நாம் வெற்றியை மட்டும் எண்ணிக் கொண்டிருந்தால் தோல்வியை சந்திக்கிற பலம் நமக்கு இல்லாமல் போகலாம், ஏன் ஒரு சின்ன தோல்வி கூட நம் வாழ்வின் திசையினை மாற்றிவிடலாம்.

      வாழ்வில் தோல்வி கேவளம் என நினைத்து மூலையில் எடிசன் முடங்கியிருந்தால் உலகம் இன்றும் இருட்டில்தான் இருந்திருக்கும்.
ஆயிரம் முறை தோற்றிருந்தாலும் தனது அடி மன வலிமையில் ஆயிரம் கண்டுபிடிப்புகளை உலகிற்க்கு அளித்த வெற்றியாலனின் உதாரணமிருக்கையில், தோல்வியைக் கண்டு துவளாதீர்கள் அதனை தூக்கி எறிகின்ற நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள்

*****No defeat is final until you stop trying*****

      எனக்கு சில கருத்துகள் வந்தன நீங்கள் ஏன் தோல்வியினை பற்றி அதிகமாக அலசுகிறிர்கள் நீங்கள் உங்கள் வாழ்வில் அதிகம் தோல்வியினை சந்தித்தவறா?. என. நான் என்னை விற்பதற்க்காக எழுதவில்லை என்ற உண்மைக்கு காலம் பதில் சொல்லும். இங்கே வெற்றியின் சாரலை விட பூமியில் மூச்சி முட்டி வெளி வந்த விதைகளை விதைக்க விரும்புகிறேன் [இது தோல்வியல்ல அதிலிருந்து மீண்டு வந்த வெற்றி]

*****Success is how high you bounce when you hit the bottom*****

Saturday, 2 February 2013

சிதையாத சிந்தனையும் சிற்பமாகும்

               மனிதனின் வெற்றிக்கும் தோல்விக்கும் அவனது சிந்தனைதான் மூலாதாரம். நம் வாழ்வில் நமக்கு தேவையே இல்லாத சிந்தனையை மனதில் இருத்திக் கொண்டு தடு மாறி கொண்டிருப்போம்.

              உண்மையில் அது நமக்கு தேவையில்லாததாகவோ காலம் கடந் ததாகவோ இருக்கலாம். அதுவே நாளடைவில் முன்னேற்றத்திற்க்கு மிகப் பெரிய முட்டுக் கட்டையாவிடும். 


            ஆங்கிலத்தில் Self Introspection  என கூறுவார்கள் இதன்படி உங்கள் ஒரு நாளின் சிந்தனையின் செயல்பாடுகளை கவனியுங்கள்.  எது உங்கள் நாளின் அதிக மனித்துளிகளை ஆக்கிரமிக்கிறது என கணக்கிடுங்கள் அது உங்களுக்கு உங்கள் வளர்ச்சிக்கு, சாந்தோசத்திற்க்கு தேவையானதா என அலசுங்கள்.

            தேவையான  செயல்பாடுகளை தொடருங்கள் அது உங்கள் வளர்ச்சி சாந்தோசத்திற்க்கு தடையா இருக்கும் போது அந்த சிந்தனையை எடுத்தெரிகின்ற முயற்ச்சியில் எற்ப்படுகின்ற சிறு தோல்வியானாலும்
முழு மனதுடன் ஏற்றுக் கொள்ளுங்கள் அது உங்கள் வாழ்வின் உண்மையான வெற்றியினை அடைகின்ற ஆற்றளை உங்களுக்குள் சேர்த்து வைக்கும்.

            மனிதனின் குண நலன்களுக்கும் காந்தவியலுக்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது. காந்தவியலில் Ferromagnetic magnetic theory என கூறுவார்கள் காந்தத்தின் மூலக் கூறுகள் ஒரு திசை பார்க்கையில் அதிக காந்த சக்தியினை கொடுக்கும்.

            சிறு வெளி விசை கொண்டு தூண்டும் போது அதன் மறுபட்ட திசை கொண்ட மூலக் கூறுகள் அளவில் குறுகி மற்றவை அளவில் பெருத்து அதிக காந்த விசை கொண்டு, பொருட்களை தன்னை நோக்கி இழுக்கும் அது போலத்தான்.

            நம் சிந்தனையை கவனித்து செய்கின்ற சிறு சிறு மாற்றங்கள் நமது வாழ்விற்க்கு தேவையற்ற சிந்தனையிலிருந்து நம்மை விலக்கி, தெளிவான சிந்தனை கொடுத்து துல்லியமாக உங்கள் இலக்கினை அடைய உதவுதுடன்.
 அதனை விரும்புகின்ற கூட்டத்தில் உங்களை கொண்டு சேர்க்கும்.

            இந்த உலகத்தில் எந்த உயிரினமும் காரணமின்றி படைக்கப் படவில்லை. மனிதம் உணரவேண்டிய உணர்வுகளை உணராமல் உலகினை விட்டு போவதில்லை என நம்புங்கள். இதன் மூலம் உங்கள் எண்ணங்கள் தெளிவாகும் அதன் விளைவு

            உங்ககளை வாழ்வில் வெற்றி பெற்ற வீரனாகவும்,
            சுதந்தர வானில் சந்தோசமாக சுற்றித் திரிகின்ற பறவையாகும்
இவ் வாழுகின்ற பூமி பூந்தோட்டமாய் வாழும் காலம் வரை மாறும் என்பது தின்னம்.

Tuesday, 25 December 2012

இயல்பினை இழக்க வைக்கின்ற இலவசம்

            ஒரு நாள் நான் தொடர்வண்டியில் பயனித்திருக்கையில் தீபங்கள் எரிக்க உதவும் தீக்குச்சியினை தயாரிக்கின்ற வீதியில் இருந்து வந்த பெண்மணி அவர்கள் ஊரில் நிகழ்ந்த தீ வீபத்திணைப் பற்றி விவரித்ததுக் கொண்டு வந்தார்கள்.

           அப்பொழுது அவர்கள் கூரிய உண்மை. அந்த விபத்தில் இறந்த தொழிலாளர்களை விட அங்கு இருந்த வெடி பொருள்களை அள்ளிக் கொள்ள வந்துவர்கள்தான் அதிகம் என்று.

           ஒரு நிமிடம் எங்கள் மனம் பதறினாலும் அந்த அளவிற்க்கு நாம் இலவசமாக கிடைக்கின்ற பொருள்களை வாங்கிக் கொண்டு வாழுவதற்க்கு பழகிக்கொண்டிருக்கிறோம் என்பதும் உண்மை.

          அந்த பெண்மணி மேலும் கூறினார்.

               எனது துனைவர் சில நாட்களுக்கு முன்னால் விபத்தில் தனது கால்களை பரி கொடுத்தார் ஆனால் இன்று நான் சென்னையில் ஒரு ஆடை தயாரிக்கும் நிறுவநத்தில் பணிபுரிந்து எனது குடும்பத்தினை நடத்தி வருகிறேன் உண்மையில் அன்று அவ்விபத்தில் இறந்தவர்கள் பெரும்பாலும் இளைஞ்சர்கள்.

            அதிகம் படிக்காத பெண் நான் எனக்கு இருக்கும்  தன்னம்பிக்கை கூட அவர்களுக்கு இல்லாது போனதே எல்லாத்திற்க்கும் காரணம்  இந்த இலவசங்கள்தான்.

             அரிசி இலவசம், அடுப்பு இலவசம், T.V இலவசம் என இந்த இலவசப் பொருள்களை வாங்கி வைத்துக்  கொண்டு ஒரு வட்டத்துக்குள் வாழ்ந்து வாழ்வின் முன்னேற்றத்திற்க்கு உழைக்காத சோம்பேரிகாலாக மாறிக்கு கொண்டு இருக்கிறார்கள் அதுதான்  இத்தனை உயிரழப்புக்கு காரணம் என சொல்லி கலங்கினார்.

          இந்த இலவசங்கள் நம் முன்னேற்றத்திற்க்கு மறைமுகமான முட்டுக்கட்டையாக அதனை நம்பி வாழ்கின்ற மக்கள் சோம்பேரிகலாக
தங்கள் உண்மை இயல்பினை, தன்னம்பிக்கையினை, உழைத்து உண்ணுகின்ற மகத்துவத்தை மறந்து வருகின்றோம்.

         அந்த பெண்மணி கூறியது போல் அவருக்குள் இருக்கின்ற தன்னம்பிக்கை நமக்குள் எங்கு இருக்கிறது தேடுங்கள். இன்றும் சாலையோரம் 60 வயது ஆனாலும் சிறு தொழில் செய்து பிழைக்கின்ற முதியவர்கள் இருக்கையில் இந்த முதுகெலும்பு இல்லாத வாழ்க்கை நமக்கெதற்க்கு.

        எனது மகன் நல்ல வேளையிலிருந்தாலும் உழைக்காமல் உண்ணப் பிடிக்கவில்லை என கூறுகின்ற அவர்கள் வார்த்தை நமது வாழ்வாக வித்திடுங்கள். வண்ணமயமான வாழ்வினை வாழ்ந்து வனப்பான சூழலினை உருவாக்க.

Tuesday, 11 December 2012

ஆளுமைத்தன்மையினை தாண்டிய மனித நேயம்

         அது தீபாவளியை ஒட்டிய ஒரு நாள். பேருந்தில் என்றும் இல்லாத அளவிற்க்கு அதிகமான கூட்டம். அந்த நெரிசலில் சிக்கிக் கொண்டு திணறிய பயணத்தில் டிரைவரின் எதிர்பாராத பிரேக்கில் ஒரு சிலர் தடு மாறி கீழே விழுந்து எழுந்தனர்.

        அந்த நிலையாமை முடிந்து இயல்பு நிலைக்கு திரும்பிய அடுத்த கணம் இந்த மரண ஓலம் ஒலித்தது "எனக்கு இருந்த ஒரே மகனை கொன்று விட்டாளே என" கத்திய ஒரு தாயின் துயரக்  குரல் கேட்டு துடித்த இதயங்கள் குழந்தையின் முகம் பார்க்க.

        அதன் கண்கள் உயரே சென்று இருந்தன. மூர்ச்சையான நிலை அங்கிருந்தவர்களால் தண்ணீர் கொடுக்கப்பட்டது. பேருந்து அந்த இடத்திலேயே நிறுத்தப்பட்டு அந்த குழந்தையும் தாயாரும் இரு சக்கர வாகனத்தில் அனுப்பி வைக்கப்பட்டார்கள்.

         இது நடந்து கொண்டிருக்கையிலே அந்த தாயின் தாயார் எங்கே அந்த கொல காரி எனது மாமா S.I ஆக இருக்கிறார் நான் அவளை சும்மா விட மாட்டேன் என ஆக்ரோஷ்மாக கத்த ஆரம்பித்துதார்.

         பயணிகளின் மறைவில் நின்றிருந்த பெண்மணியின் கண்களில் இருந்து கண்ணீர் பொல பொலவென சரிந்தன நான் முன்னமே குழைந்தை இல்லாத வலியில் வாழ்பவள் நான் எப்படி இன்னொரு குழந்தையை கொள்வேன்.

         பிரேக்கு அடிக்கப்பட்ட  நிமிடத்தில் சற்று நிலை தடுமாறி அவர்கள் மீது லேசாக சாய்ந்துவிட்டேன் அவ்வளவுதான் என தேம்பித் தேம்பி அழ அங்கிருந்தவர்கள் நிலைமயை புரிந்து கொண்டு அந்த பெண் மணியை அந்த பக்கமாக செல்ல சொல்லிவிட்டு அவள் ஆங்கேயே இறங்கிவிட்டதாக கூறிவிட்டார்கள்.

        அதன்பிறகு ஆக்ரோசமாடைந்த தாய் மருத்துவமனைக்கு முன் இறங்கி விசாரிக்க அந்த குழந்தை நன்றாக இருப்பதாகவும் அது  மூச்சடைப்பால் ஏற்ப்பத்ததல்ல உள்ளுக்குள் அந்த குழந்தையின் உடல்நிலை பதிக்கப்பட்டிருந்ததாகவும் தெரியவந்தது.

        இங்கு காவல் துறை என்னும் ஆளுமைத்தன்மை மேலோங்கியிருந்தாலும். மனிதத்தில் இன்றும் உயிருடன் இருக்கின்ற மனித நேயத்தில் காக்கப்படுகின்ற வலிமை குறைந்த ஊனின் வாழ்வும்  அது ஆளுமைத்தன்மையை விட உன்னதமானது என்பதும் விளங்கும்.

Friday, 23 November 2012

வலியானாலும் வாழ்விற்கு வலுவூட்டும் வசந்தத்ததின் எதிரி

           ஒரு மனிதர் தனது . தோட்டத்தில் உள்ள கிணற்றில் அடிக்கடி இறங்கி அங்கு பொறுத்தப்பட்டிருக்கும் மோட்டரினை பழுது பார்த்தது விட்டு மேலே ஏறி வருகின்ற பழக்கமுள்ளவர்.

           பல வருடங்கள்  இது அடிக்கடி நடக்கின்ற நிகழ்வாக இருந்து வந்தது. அன்று அவருக்கு வயது நாற்ப்பது இருக்கும். எப்பொழுதும் போல  பழுதடைந்த மோட்டரினை பழுதுபார்க்க .இறங்கியவர் அந்த பனியினை முடித்தது  மேலே ஏறி வருவதற்க்கு எத்தனிக்கிற பொழுதில் அவரது வயது முதிர்வால் இரண்டு முறை தவறி கீழே விழுந்துவிடுகிறார்.

           இதனை அறிந்து கொண்ட இளைஞ்சர் கூட்டம் அங்கு சென்று அவருக்கு மேலே ஏறுவதற்க்கு பல விதமாக முயற்ச்சித்தார்கள் கயிறினில் மரத்தால் ஆன கோலினை அந்த கயிரினில் கட்டி ஏணி மாதிரி ஏறுவதற்க்கு உதவினார்கள்.

          ஆனால் அதனை பயன்படுத்தி மேலே வர நினைத்தவர் காலில் இருந்த ஈரமான மண்ணில் வழுக்கி கீழே விழுகிறார். இந்த முறை அவர் மூர்ச்சையானார். அங்கு இருந்த கூட்டம் அவரை வேறு விதமாக மேலே கொண்டுவருதர்க்கு தயாரானார்கள்.

         அதற்க்குள் கண் விழித்துக் கொண்டவர். இதனை கேட்டுவிட்டு அதெல்லாம் வேண்டாம் அந்த கோல்களை எடுத்து விட்டு வெறும் கயிரினை அனுப்பு என்கிறார். அதற்க்கு அங்குள்ள மக்கள் கூட்டம் வேண்டாம் என அது உங்கள் உயிருக்கு ஆபத்தாக அமைந்துவிடும் என கத்தினார்கள்.


         அவர் அமைதியாக கயிரினை போடுங்கள் என்றார். சில நிமிடங்கள் யோசித்தவர் கயிரினை பிடித்து மல மல என மேலே ஏறி வந்தார் எல்லோரும் அதிர்ந்து போயிருந்தார்கள். அவர் அங்குள்ள இளைஞ்சர்களிடம் சொன்னார்

         "சில நேரங்கலில் நாம் சில தோல்விகளைப் பார்த்தவுடன் நமது மனம் நம்மால் முடியாது என நினைக்கும் அதையே உலகமும் உரைக்கும் அதனை நம்பி உங்கள் தன்னம்பிக்கயை இழக்காதீர்கள். வாழ்வில் உங்கள் எதிர் திசையில் வலுவான காற்று வீசும்போது அதில் உங்கள் மனத்தினை உறமாக்கிக் கொள்ளுங்கள் உங்கள் எதிர் காலத்தின் வலிமையை சந்திக்கவும் (ம) சமுதாயம் தரும் இடையூருகளை எடுத்தெரியவும்."

         எனக்கு தெரியும் எத்தனை முறை இந்த ஏறி இறங்குகின்ற வலியினை நான் கடந்திருக்கிறேன் என்று அதில் வலுவடைந்த மனமும் அதன் அசைக்க முடியா நம்பிக்கைதான் இன்று என்னை வெளியே கொண்டு வந்தது.

        "தாயின் கருவரை உலகத்திலே மிகவும் பாதுகாப்பான இடம் என்பதற்க்காக ஆயுள் முழுவதும் அங்கேயே இருக்க முடியுமா இந்த மண்ணில் விழுந்து முட்டிகள் தேய்ந்து கிடைத்த வலிமையில்தானே நம் வாழ்வின் ஒவ்வொரு படியும் நகர்கிறது."

Friday, 9 November 2012

வார்த்தையின் வலிமை

           ஒரு நாள், இரயில் நிலையத்தில் நான் நின்று கொண்டிருக்கையில், புதிதாக திருமணம் ஆன கணவனும் மனைவியும் அருகில் நின்று கொண்டிருந்தனர். அது மாலை நேரம் சுரியன் தனது முகத்தை மெல்ல மறைத்துக் கொண்டிருந்தது.

         கடைத் தெரு விளக்குகள் மின்மினிப் பூச்சியின் ஒளிர்வினை காட்ட தொடங்கியிருந்தன. மக்கள் கூட்டம் எப்பொழுதும் போல இல்லாமல். சற்று குறைவாகவே காணப்பட்டது அப்பொழுதுதான் புது மன ஜோடி பேசிச் சிரித்ததுக் கொண்டு தங்கள்  உலகம் மறந்திருந்தனர்.

         எப்பொழுதும்  மிகக் குறைந்த வேகத்தில் வந்தது நிற்கும் தொடர்வண்டி அன்று மட்டும் சற்று வேகமாக வருவது போல் தோன்றியது.   அந்த இருவரும் அதனை கவனிக்கவில்லை மேலும் அவர்கள் நின்று கொண்டிருந்தது பாதுகாப்பு கோட்டிற்க்கு அப்பால்.

         மற்றவர்கள் அதனை கவனிக்காவிட்டாலும் அந்த சிறுவன் அதனை பார்த்து விட்டு   "அம்மா Train  வேகமாக வருகிறது ஒதுங்குங்கள் என கத்தினான்".  அதனை உணர்ந்து கொண்ட அந்தக் கணவர் தன் மனைவியின் கையினை பிடித்திழுத்து  பாதுகாப்பு எல்லைக்குள் கொண்டுவந்தார்.  அந்த இருவரின் முகத்திலும் அதிர்ச்சியிலும் பயத்திலும் வழிந்தோடிய வியர்வைத் துளிகள்.

       ஒரு அன்னை தனது சொந்த குழந்தையை பார்ப்பது போல் அந்த தாய் அந்த சிறுவன் முகத்தையே பார்த்து வருகிறாள் தான் இறங்கும் இடம் வரும் வரை.  இங்கு அந்த சிறுவனின் வார்த்தைகளின் வலிமை ஒரு உயிரினை (ம) அவர்களது சந்தோசத்தினைக் காப்பாற்றும் அளவிற்க்கு மகத்துவமாகியது  இங்கே.